டூவீலர் விலையில் களமிறங்கிய குட்டியூண்டு கார்! 1 கிமீ பயணிக்க வெறும் 50 பைசா மட்டும்தான் செலவாகுமா!

டெல்லி நடந்துவரும் ஆட்டோ எக்ஸ்போ 2025 இல், வைவே மொபிலிட்டி தனது எவா காரை அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவின் முதல் சோலார் கார் என்ற பெருமையைப் பெற்று, சிட்டி பயன்பாட்டிற்கு ஏற்றதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ₹3.25 லட்சம் என்ற அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையுடன், எவா கார் விற்பனைக்கு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை பார்ப்போம்.

இந்தியாவின் முதல் சோலார் காரான இந்த காரில் புதுமையாக வாகனத்தின் கூரையில் சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது, இது ஒரு நாளைக்கு 10 கி.மீ வரை அதன் ரேஞ்சை நீட்டிக்க இயலும், இது சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்ததா வாகனமாக அந்நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

Vayve Eva Solar-Powered Car

எவா மூன்று வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: நோவா, ஸ்டெல்லா மற்றும் வேகா, பல்வேறு நுகர்வோர் தேவைகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பேஸ் மாடல் ₹3.25 லட்சத்தில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வைவே இந்த காரில் சில எலெக்ட்ரிக் கார் போல பேட்டரியை சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வழங்குகிறது. அதே நேரத்தில் பேட்டரியின் முழு உரிமையை பெற வேண்டும் என்றால் வாகனத்தின் விலை ₹3.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். ஸ்டெல்லா வேரியன்டிற்கு முறையே ரூ3.99 லட்சம் மற்றும் ரூ4.99 லட்சம் என்ற விலையிலும், வேகா வேரியன்ட் முறையே ரூ 4.49 லட்சம் மற்றும் ரூ5.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த விலை முதல் 25,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே, விற்பனை அந்த எண்ணிக்கையை தாண்டினால் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

Vayve Eva Solar-Powered Car

வைவே மொபிலிட்டியின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. நிலேஷ் பஜாஜ், எவா நிறுவனத்தின் திட்டம் குறித்து பேசினார், "எவா ஒரு கார் மட்டும் இல்லை; இது நவீன குடும்பத்திற்காக வடிவமைக்கப்பட்ட சிட்டி பயண வாகனங்களின் புதிய வகை. இது சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் பயணிக்கிறது." இது இந்த வாகனம் சிட்டி பயன்பாட்டிற்காகவும் அதே நேரம், சுற்றுச்சூழலுக்கு நன்மை பயனிக்கும் வகையில் இருப்பதாக நமக்கு தெளிவாக தெரகிறது. .

வைவே நிறுவனத்தின் எவா கார் மாசு ஏற்படுத்தாத தன்மை மட்டுமல்லாமல் பயன்படுத்த ஆகும் செலவு மற்றும் செயல் திறனிலும் தனித்து நிற்கிறது. ஒரு கி.மீ பயணிக்க வெறும் ₹0.5 தான் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது மார்கெட்டில் உள்ள சாதாரண எலெக்ட்ரிக் வாகனங்களை எதிர்த்து வலுவான போட்டியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vayve Eva Solar-Powered Car

இந்த காரை பேட்டரி சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வாங்கினால் ஒரு கி.மீக்கு ரூ2 சப்ஸ்கிரிப்ஷன் கட்டணமாக செலுத்த வேண்டும். இது வேரியன்டை பொருத்து மாதம் குறைந்தபட்ச தூரத்திற்கான கட்டாய கட்டணமும் உள்ளது நோவா வேரியன்ட்டிற்கு 600 கிமீ, ஸ்டெல்லா வேரியன்டிற்கு 800 கிமீ, வேகா வேரியன்டிற்கு 1200 கிமீ குறைந்தபட்ச பயண தூரமாக கணக்கிடப்படுகிறது. ஒரு மாத்திற்கு இதை விட குறைவான தூரம் பயணம் செய்தால் இந்த தொகையை கணக்கிட்டு சப்ஸ்கிரிப்ஷன் கட்டணம் செலுத்த வேண்டும். இதை விட அதிக தூரம் பயணம் செய்தால் அதை கணக்கிட்டு அதற்கான சப்ஸ்கிரிப்ஷன் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த கார் உபயோகத்தின் அடிப்படையில் எம்.ஜி. கோமெட் இவி. போன்ற மாடல்களை எதிர்கொள்கிறது. இந்த கார் உயர் வோல்டேஜ் பவர்‌ட்ரெயினுடன் இணைக்கப்பட்டு, சூப்பர்-ஃபாஸ்ட் சார்ஜிங் திறன்களை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது இந்த கார் ஐந்து நிமிடங்களில் 50 கி.மீ என்ற ரேஞ்ச் தரும் வகையில் சார்ஜ் ஏறிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம் நவீன டிஜிட்டல் யுகத்திற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதற்காக இதில் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஓவர்-தி-ஏர் (ஓ.டி.ஏ.) அப்டேட்கள், ரிமோட் மானிட்டரிங், மற்றும் வாகனத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தானாக சரி செய்து கொள்ளும் திறனை கொண்டுள்ளது. அதன் குறைந்த எடை அமைப்பு அதன் சிறந்த செயல்திறனை கொடுக்க உதவுகிறது.

இந்த காரை ஒரு முறை சார்ஜ் போட்டால் 250 கி.மீ பயணம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் சோனல் பேனல் மூலம் சார்ஜ் ஏறி ஆண்டிற்கு கூடுதலாக 3,000 கி.மீ பயணம் செய்யும் திறன் கொண்டதாக வடிவமைத்துள்ளது. சிட்டி வாசிகளுக்கு குறைந்த செலவில் மற்றும் சுற்றுச்சூழல் மாசு இல்லாத பயணத்தை வழங்குிறது

வைவே மொபிலிட்டி நிறுவனம் சொன்னதுபடி, இந்தியாவில் பெரும்பாலான கார் உரிமையாளர்கள் ஒரு நாளில் 35 கி.மீ க்கும் குறைவான தூரம் பயணம் செய்கிறார்கள் மற்றும் ஒரு காரில் சராசரியாக 1.5 பயணிகளுக்கு குறைவான எண்ணிக்கையில் பயணிக்கிறார்கள் இப்படியான தேவைகளுக்கு இந்த கார் சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கான புக்கிங் தற்போது துவங்கப்பட்டுள்ளது. வெறும் ரூ5000 முன்பணம் செலுத்தி இந்த காரை புக்கிங் செய்யலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வைவே மொபிலிட்டியின் எவா காரை அறிமுகப்படுத்தியது எதிர்காலத்தில் இந்தியாவில் போக்குவரத்து எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு சாட்சியாக அமைந்துள்ளது., சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வாகனம் வேண்டும் என கேட்கும் நுகர்வோர் மற்றும் குறைந்த செலவில் சிம்பிளான பயணம் செய்ய விரும்புவோருக்கு இந்த கார் ஒரு சிறப்பான ஆப்ஷனாக இருக்கும்

More from DriveSpark

Article Published On: Saturday, January 18, 2025, 15:00 [IST]
English summary
At Auto Expo 2025, Vayve Mobility launched the Eva, India's first solar-powered car, priced at ₹3.25 lakh. This innovative vehicle promotes sustainable urban transport with features like solar energy range extension and smart tech integration, aiming to redefine urban commuting.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X