மகன் கட்சி ஆரம்பிச்சதும் அப்பா இவ்வளவு காஸ்ட்லியான காரை வாங்கி அம்மாக்கு குடுத்திருக்காரே!
நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகம் தனது 52 வது திருமண நாளுக்கு தனது மனைவிக்கு புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார். இந்த கார் இந்திய மார்கெட்டில் ரூ84.35 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையி்ல விற்பனையாகி வருகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழ் சினிமாவில் முன்னனணி இயக்குநராக இருந்தவர் எஸ்ஏ சந்திரசேகர், இவர் ஏரளான ஹிட் படங்களை எடுத்துள்ளார். இவரது மகன் தான் தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியையும் ஆரம்பித்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் தனது மனைவிக்கு காஸ்ட்லியான கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளா்.

தங்களது 52வது திருமண நாளை கொண்டாடும் விதமாக இந்த காரை வாங்கி பரிசளித்துள்ளார். இவர் தனது மனைவிக்கு பரிசளித்தது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 5 சிரீஸ் 530 எல்ஐ எம் ஸ்போர்ட் கார் தான். டைட்டானியம் பிரான்ஸ் நிறுத்தில் இந்த காரை வாங்கி பரிசளித்துள்ளார். இந்த கார் இந்த மாடலின் டாப் வேரியன்ட் காராக உள்ளது. இந்த கார் இந்திய மார்கெட்டில் ரூ84.35 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த காரில் பொருத்தப்பட்ட இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் 4 சிலிண்டர் இன்-லைன் 4 வால்வு இன்ஜினாக இருக்கிறது. இந்த இன்ஜின் 255 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜின் இந்த காருக்கு 15.7 கி.மீ மைலேஜை வழங்குகிறது. இந்த இன்ஜின் பின்பக்க வீல்களுடன் இணைக்கப்பட்ட பின் வீல் டிரைவ் கொண்ட காராக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் கியர் ஆப்ஷனை பொருத்தவரை 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டள்ளது. இதை மேனுவலாக மாற்ற பெடல் ஸ்விஃப்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் இன்ஜின் டர்போ சார்ஜ்டு இன்ஜினாக வழங்கப்பட்டுள்ளது. அதிக மைலேஜிற்காக இந்த இன்ஜினில் ஐடியல் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் ஆப்ஷன் இருக்கிறது.
இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 5165 மிமீ நீளமும், 2156 மிமீ அகலமும், 1518 மிமீ உயரமும் 3105 மிமீ வீல் பேஸூம் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் 5 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும். இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை ஏபிஎஸ், இபிடி, பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

இது போக இந்த காரில் முன்பக்க டிரைவர் மற்றும் பயணி சீட்களை 14 வழிகளில் எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்ய முடியும். இது போக 2 வழிகளில் மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்ய முடியும். சீட்டுகள் எல்லாம் லெதர் சீட்டுகளாக உள்ளன. முன்பக்க சீட்டுகள் மட்டும் வென்டிலேட் செய்யப்பட்ட சீட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த கார் பெரும்பணக்காரர்களாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகரும் சமூகத்தில் பெரும் அந்தஸ்த்து மரியாதை கொண்டவர் சினிமாவில் இருப்பதால் அதிக பணமும் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது மனைவிக்கு இப்படி காஸ்ட்லியான பரிசு வாங்கி கொடுத்தது நிச்சயம் ஆச்சரியமான ஒன்று தான்.


Click it and Unblock the Notifications









