ஈஸியா லோன் கிடைக்கும்! வின்ஃபாஸ்ட் நிறுவனம் எச்டிஎஃப்சி உடன் ஒப்பந்தம்!

வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக கடன் மூலம் கார் வாங்க அந்நிறுவனம் எச்டிஎஃப்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்தாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனம் வின்ஃபாஸ்ட். இந்நிறுவனம் இந்தியாவில் காலடி தடத்தை எடுத்து வைக்கிறது. இந்நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தூத்துக்குடியில் அமைத்த ஆலையை துவங்கியது. முதல்வர் ஸ்டாலின் தான் ஆலையை துவக்கி வைத்தார்.

Vinfast HDFC Partnership

தற்போது இந்த ஆலையில் வாகன தயாரிப்பு நடந்து வருகிறது. இதுவரை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது காரை விற்பனைக்கு கொண்டு வரவில்லை. விரைவில் இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனைக்கு வந்து டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் சுலபமாக வாகனம் வாங்க வசதியாக இந்நிறுவனம் தற்போது புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.

அதன்படி வின்ஃபாஸ்ட் மற்றும் எச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த கார்கள் இந்திய மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த நிறுவனம் எச்டிஎஃப்சி வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

Vinfast HDFC Partnership

இதன்படி இந்நிறுவனம் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் விற்பனை நொட்வோர்க் எங்கிருந்து எந்த வாடிக்கையாளர் கார் வாங்கினாலும் அவர்களுக்கு எளிமையாக கடன் கிடைக்க வின்ஃபாஸ்ட் நிறுவனம் வழி வகை செய்து வைத்துள்ளது.இதன் மூலம் இஎம்ஐ ஆப்ஷனை பயன்படுத்தி வின்ஃபாஸ்ட் காரை வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் கார் வாங்கும் அனுபவத்தை எளிமையாக்கவும், அதே நேரம் மக்களுக்கு ஏற்ற வகையில் இஎம்ஐ ஆப்ஷன் மூலம் வாகனங்களை வாங்க இது ஏற்ற ஆப்ஷன்களை எச்டிஎஃப்சி வங்கி வழங்கும். மேலும் உடனடியாக கடன் ஒதுக்கப்படுவது உள்ளிட்ட விஷயங்களும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vinfast HDFC Partnership

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது வாங்கிங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக எச்டிஎஃப்சி வங்கியை தேர்வு செய்திருப்பது நிச்சயம் சிறப்பான ஒரு விஷயம் தான். இதனால் வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்பெறப்போகிறார்கள். சுலபமாக கார் வாங்கும் அனுபவத்தையும் பெறப்போகிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, August 11, 2025, 22:45 [IST]
English summary
Vinfast hdfc partnership auto inventory financing deal
மேலும்... #VinFast #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X