துபாய் ஷேக்குகள் போல் கோடீஸ்வரர்களாக மாற போகும் தென் தமிழக மக்கள்! அதிர்ஷ்டம் கூரைய பிச்சுகிட்டு கொட்டீருக்கு!
இந்திய ஆட்டோமொபைல் துறையின் தாயகமாக தமிழ்நாடு (Tamil Nadu) திகழ்கிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான வாகன நிறுவனங்கள், தமிழ்நாட்டில்தான் தொழிற்சாலையை அமைத்துள்ளன. இந்த வரிசையில் உலகப்புகழ் பெற்ற வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டில் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளது.
அது வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம் ஆகும். அமெரிக்காவின் டெஸ்லா (Tesla) நிறுவனத்திற்கு போட்டியாக கருதப்படும் வின்ஃபாஸ்ட் நிறுவனம், தமிழ்நாட்டில் புதிய எலெக்ட்ரிக் வாகன தொழிற்சாலையை கட்டமைத்து வருகிறது. இந்த வாய்ப்பை தட்டி சென்றிருப்பது தூத்துக்குடி (Thoothukudi) ஆகும்.

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில், ஒரு ஆண்டுக்கு 1.50 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடியும். இந்திய சந்தையில் முதற்கட்டமாக 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரக கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அவை விஎஃப் 6 (VF 6) மற்றும் விஎஃப் 7 (VF 7) ஆகியவை ஆகும். இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்களின் இந்திய அறிமுகம் நெருங்கி கொண்டுள்ள நிலையில், வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடி தொழிற்சாலைக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக உள்ளூரை சேர்ந்த 200 தொழிலாளர்கள் தற்போது வேலைக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடி தொழிற்சாலையில் பணியாற்றுவதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 3,500 ஊழியர்களை வேலைக்கு எடுக்கவுள்ளது. இதில், முதற்கட்டமாக தற்போது உள்ளூரை சேர்ந்த 200 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவற்றை எல்லாம் ஒருங்கிணைந்து இந்த தேர்வு பணி நடைபெற்றுள்ளது. அத்துடன் இந்த தேர்வு பணிக்கு தமிழ்நாடு அரசும் ஆதரவு வழங்கியுள்ளது. தூத்துக்குடி தொழிற்சாலையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் 80:20 முறையில் ஊழியர்களை பணியமர்த்தவுள்ளது.
அதாவது தூத்துக்குடி தொழிற்சாலையின் 80 சதவீத ஊழியர்கள், உள்ளூரை சேர்ந்த ஃப்ரெஷர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் எஞ்சிய 20 சதவீத ஊழியர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த அனுபவம் மிக்க வல்லுனர்களாக இருப்பார்கள். எனவே தூத்துக்குடி மக்களுக்கு இந்த தொழிற்சாலை உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னையை உள்ளடக்கிய வடக்கு பகுதி மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களை எல்லாம் உள்ளடக்கிய மேற்கு பகுதிகளில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. எனவே அங்கெல்லாம் வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.
இது அப்பகுதிகளின் வளர்ச்சிக்கு வெகுவாக உதவி செய்கிறது. ஆனால் தமிழகத்தின் தென் பகுதியில், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் எதுவும் சொல்லி கொள்ளும்படியாக இல்லை. இப்படிப்பட்ட சூழலில் கிடைத்துள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தொழிற்சாலை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக மக்களை, பொருளாதார ரீதியில் வெகுவாக முன்னேற்றம் அடைய செய்யும் என்று நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








