அரபு ஷேக்குகள் போல் கோடிகளில் புரள போகும் தூத்துக்குடி மக்கள்! பணம் கொட்டோ கொட்டோனு கொட்ட போகுது!

வியட்நாம் (Vietnam) நாட்டை சேர்ந்த பிரபலமான எலெக்ட்ரிக் கார் நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). இதன் தொழிற்சாலை தமிழ்நாட்டின் (Tamil Nadu) தென் பகுதியான தூத்துக்குடியில் (Thoothukudi) கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் கூடிய விரைவில் எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தி தொடங்கப்படவுள்ளது.

அதை தொடர்ந்து கூடிய விரைவிலேயே இந்திய சந்தையில் வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும். இதற்கு முன்னதாக இந்திய சந்தையில் தனது முதல் ஷோரூமை வின்ஃபாஸ்ட் நிறுவனம் தற்போது திறந்துள்ளது. குஜராத் (Gujarat) மாநிலத்தின் சூரத் (Surat) நகரில், இந்திய சந்தைக்கான வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதல் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.

VF 7

இந்த ஷோரூம், 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் விஎஃப்6 (VF 6) மற்றும் விஎஃப்7 (VF 7) ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. இதை தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ஷோரூம்கள் திறக்கப்படவுள்ளன.

நடப்பு 2025ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக இந்தியா முழுக்க 27 நகரங்களில் 35 டீலர்ஷிப்களை திறப்பதற்கு வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் விஎஃப் 6 மற்றும் விஎஃப் 7 ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களுக்கும் ஆன்லைனில் முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன.

VinFast Showroom

இவை இரண்டுமே எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்த கார்கள் ஆகும். இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும், சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இவற்றின் உற்பத்தி, தூத்துக்குடியில் புதிதாக கட்டமைக்கப்பட்டு வரும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் நடைபெறவுள்ளது.

சர்வதேச சந்தையில் விஎஃப் 6 எலெக்ட்ரிக் கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை ஈக்கோ மற்றும் ப்ளஸ் ஆகியவை ஆகும். இதில், ஈக்கோ வேரியண்ட்டின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 400 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும்.

மறுபக்கம் ப்ளஸ் வேரியண்ட்டின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 381 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். அதே நேரத்தில் விஎஃப் 7 எலெக்ட்ரிக் காரும், ஈக்கோ மற்றும் ப்ளஸ் வேரியண்ட்களில்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஈக்கோ வேரியண்ட்டின் டிரைவிங் ரேஞ்ச் 450 கிலோ மீட்டர்கள் ஆகவும், ப்ளஸ் வேரியண்ட்டின் டிரைவிங் ரேஞ்ச் 431 கிலோ மீட்டர்கள் ஆகவும் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சர்வதேச சந்தைகளில், அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்திற்கு போட்டி நிறுவனமாக வின்ஃபாஸ்ட் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தின் தொழிற்சாலை தூத்துக்குடியில் அமைகிறது. இதன் மூலம் தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, July 28, 2025, 17:02 [IST]
English summary
Vinfast india first showroom inaugurated in surat check all details here
மேலும்... #VinFast #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+