அனைத்து கண்களும் தமிழ்நாட்டை நோக்கி! சீனா, கொரியா கார் நிறுவனங்களை எல்லாம் மிரள விட போறாங்க!

வியட்நாம் நாட்டை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன (Electric Vehicle) நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் 2 எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அவை வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 (VinFast VF 7) ஆகியவை ஆகும்.

இந்த வரிசையில் மூன்றாவதாக ஒரு எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வின்ஃபாஸ்ட் நிறுவனம் தயாராகி வருகிறது. அது வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் (VinFast Limo Green) ஆகும். இது 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி (7 Seater Electric SUV) ரகத்தை சேர்ந்தது.

Vinfast Limo Green EV

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்திய சந்தையில் ஒரு 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகம் செய்வதற்கான டிசைன் காப்புரிமைக்கு வின்ஃபாஸ்ட் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. எனவே வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

தற்போது அந்த எதிர்பார்ப்புகளை மேலும் அதிகமாக்கும் வகையில், இந்திய சாலைகளில், வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. இது குறித்து ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய சாலைகளில் வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் காரின் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

Vinfast Limo Green

வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் ஏற்கனவே வியட்நாம் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த எலெக்ட்ரிக் காரில் 60.13 kWh பேட்டரி (Battery) ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 450 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காருக்கு, இது மிகவும் சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) ஆக கருதப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் எலெக்ட்ரிக் மோட்டார்கள் 201 பிஹெச்பி பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் திறன் வாய்ந்தவையாக உள்ளன.

வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் எலெக்ட்ரிக் காரின் நீளம் 4.7 மீட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் இதன் வீல்பேஸ் நீளம் 2.8 மீட்டர்களாக உள்ளது. மறுபக்கம் இதன் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 170 மிமீ ஆக இருக்கிறது. 18 இன்ச் அலாய் வீல்களில் இயங்கும் இந்த எலெக்ட்ரிக் காரின் முன் மற்றும் பின் பகுதியில் 'V' வடிவ எல்இடி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 3வது எலெக்ட்ரிக் கார், லிமோ க்ரீன்-ஆக இருக்கலாம். இது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனத்தின் கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக இருக்கும்.

அத்துடன் சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனத்தின் இமேக்ஸ் 7 (BYD eMax 7) எலெக்ட்ரிக் காருக்கும் வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம். வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. எனவே வின்ஃபாஸ்ட் லிமோ க்ரீன் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தியும், தூத்துக்குடியில்தான் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, November 10, 2025, 12:10 [IST]
English summary
Vinfast limo green ev testing commenced in india check all details here
மேலும்... #VinFast #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+