இன்னோவாக்கு வச்சிட்டாங்க ஆப்பு! தமிழகத்தில் தயாராகப்போகும் பிரம்மாண்ட கார்!
வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காருக்க போட்டியாக ஒரு புதிய எலெக்ட்ரிக் காரை களம் இறக்க திட்டமிட்டுள்ளது.இந்த கார் அந்நிறுவனம் விஎஃப்6 மற்றும் விஎஃப் 7 காரை தொடர்ந்து 3வது காராக களம் இறங்க வாய்ப்புள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் வின்ஃபாஸ்ட், இந்நிறுவனம்இந்தியாவில் தனது காலடி தடத்தை எடுத்து வைத்து 6 மாதங்கள் ஆகிறது. இந்நிறுவனம் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் ஆலை அமைத்து வாகனங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் விஎஃப்6 மற்றும் விஎஃப் 7ஆகிய கார்களை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அந்நிறுவனத்தின் சிஇஓ ஆட்டோகார் ஃபுரோபசனல் தளத்திற்கு அளித்த பேட்டியில் அபந்நிறுவனம் அடுத்த காராக லிமோ கிரீன் என்ற காரை வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அதிகரப்பூர்வமாகவே கூறவிட்டார். இந்த கார் மார்கெட்டில் நேரடி போட்டியாக பிஒய்டி இமேக்ஸ் 7 காருக்கு போட்டியாக விற்பனைக்கு வருகிறது.
இருந்தாலும் இந்த கார் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், மற்றம் சமீபத்தில் அறிமுகமாகன மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் ஆகிய கார்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஏற்கனவே வியட்நாம் நாட்டில் நல்ல விற்பனையில் இருக்கிறது. இந்த கார் அந்நாட்டில் டாக்ஸி பயன்பாட்டிற்காக கூட பயன்படுத்தப்படுகிறது.

இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் இந்தியாவிற்கு வரும் போது இந்தியர்களுக்கு தேவையான அம்சங்களுடன் மாறி வர வாய்ப்புள்ளுது. இந்த கார் 4740 மிமீ நீளம், 1872 மிமீ அகலம், 1723 மிமீ உயரம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த கார் கியா கேரன்ஸ் இவி காரை விட சற்று பெரிய காராகவே இருக்கும்.
இந்த காரின் வீல் பேஸ் மட்டும் 2840 மிமி நீளமும், 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், ஆகியவை இருக்கும். இதனால் இந்தியா மாதிரியான பள்ள மேடுகள் நிறைந்த சாலையில் இந்த காரால் சுலபமாக பயணிக்க முடியும். இந்த காரில் முன்பக்கம் 2 நடுவரிசையில் 3 மற்றும் பின்பக்கம் 2 பேர் அமரும் வகையில் இருக்கைகள் இருக்கும்.

இந்த காரில் சிங்கிள் மோட்டார் செட்டப் இருகு்கிறது. இது 201 எச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொ்கண்டது. இந்த காரில் 60.13 kWh எல்எஃப்பி பேட்டரி இருகு்கிறது. இதை ஒரு முறை சார்ஜ் போட்டால் 450 கி.மீ வரை பயன்படுத்த முடியும். இதற்காக 6.9 kW ஏசி சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இது போக 80KW டிசி சார்ஜர்களும் வழங்கப்பட வாய்ப்புள்ளுது. டிசி சார்ஜரை பயன்படுத்தினால் 10-70 சதவீத பேட்டரியை வெறும் 30 நிமிடத்தில் சார்ஜ் செய்துவிடும்.
இந்த லிமோ கிரீன் காரில் எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், 18 இன்ச் அலாய் வீல்,கள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், சிங்கிள் ஸோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், யூஎஸ்பி டைப் ஏ போர்ட், டைப் சி போர்ட், ஆகியன இருக்கும். இது போக இந்த காரில் ரிவியர் வியூ கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரோல் ஓவர் மிட்டிகேஷன், 4 ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, அடாஸ் சிஸ்டம், ஆகியவன வியட்நாம் காரில் விற்பவனையாகும் வேரியன்டில் இரக்கிறது. இந்தியாவில் டாப் வேரியன்ட்டில் இந்த அம்சங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த காரை உதிரி பாகங்களாக பிரித்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து தூத்துக்குடி ஆலையில் வைத்து அசெம்பிள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக 3 வரிசை சீட்டர் கொண்ட கார் பிரபலமாகி வருகிறது. இந்த கார் அதை டார்கெட் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த கார் மார்கெட்டில் ரூ18.50 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









