தமிழ்நாட்டை நம்பிவந்த எந்த கார் கம்பெனியும் தோற்று போனதே இல்ல! தூத்துக்குடியில் உருவாகும் காருக்கு புக்கிங்...

வின்ஃபாஸ்ட் (Vinfast) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய சந்தையில் களமிறங்கி உள்ளது. வியட்நாம் (Vietnam) நாட்டில் மிக பெரும் நிறுவனமாக கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருக்கும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்துக்கு அந்த நாட்டில் பெரிய அளவிலான பிரம்மாண்டமான தொழிற்சாலை உள்ளது. இருப்பினும், இந்தியாவிலும் நம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைத்து ஆரவாரத்துடன் இந்திய சந்தையில் வின்ஃபாஸ்ட் நுழைகிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் தனது வாகனங்களை காட்சிக்கு நிறுத்தி அதிகாரப்பூர்வமாக தனது இந்திய வருகையை அறிவித்த வின்ஃபாஸ்ட் நிறுவனம், ஜூலை 15ஆம் தேதியான இன்று அறிவித்தப்படி அதன் வி.எஃப்6 (VF6) மற்றும் வி.எஃப்7 (VF7) எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகளை துவங்கி உள்ளது.

vinfast pre-booking

விருப்பப்படுவோர் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப் ஷோரூம்களிலும் (Dealership Showrooms) அல்லது 'VinFastAuto.in' என்கிற இணையத்தள பக்கத்திலும் இந்த எலக்ட்ரிக் கார்களை ப்ரீ-புக்கிங் (Pre-booking) செய்யலாம். இதற்கான டோக்கன் தொகையாக ரூ.21,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புக் செய்த பின்னர் காரை வாங்க விருப்பமில்லை என்று புக்கிங்கை ரத்து செய்தால் இந்த டோக்கன் தொகை எந்தவொரு பிடித்தமும் இன்றி அப்படியே திருப்பி வழங்கப்படும் என வின்ஃபாஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், வின்ஃபாஸ்ட் விஎஃப்6 மற்றும் விஎஃப்7 எலக்ட்ரிக் கார்கள் அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் மாதத்தில் விலைகள் அறிவிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போதைக்கு வின்ஃபாஸ்ட் நிறுவனத்துக்கு சொந்தமாக முக்கியமான நகரங்களில் மட்டும் 32 டீலர்ஷிப் ஷோரூம்கள் செயல்பட ஆரம்பித்துள்ளன. ஆதலால், தற்போதைக்கு வின்ஃபாஸ்ட் ஷோரூம் எதுவும் அருகில் இல்லையென்றால் எளிமையாக ஆன்லைனில் விருப்பப்படும் வின்ஃபாஸ்ட் காரை புக் செய்துக் கொள்ளலாம்.

vinfast pre-booking

நாடு முழுவதும் டீலர்ஷிப் ஷோரூம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து வின்ஃபாஸ்ட் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதால், விரைவில் அனைத்து பகுதிகளிலும் இந்த நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூம்கள் வந்துவிடும்; ஆகையால் தயக்கம் வேண்டாம். முக்கியமாக தமிழ்நாட்டில் வசிப்போர் புதுசாக வரும் இந்த நிறுவனத்தை தைரியமாக நம்பலாம்.

ஏனெனில், தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைத்துள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனம் தென்னிந்தியாவில் இருந்துதான் மெல்ல மெல்ல தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது புக்கிங் துவங்கப்பட்டுள்ள விஎஃப்6 எலக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது அதிக பேர் உடன் குடும்பமாக பயணிக்க ஏற்ற எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். அதாவது அந்த அளவிற்கு பெரியது ஆகும்.

இந்த காரில் கனெக்டட் வசதிகள், சிக்னெச்சர் விளக்குகள் மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. விஎஃப்7 எலக்ட்ரிக் கார் ஆனது சற்று விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார் ஆகும். பெரிய அளவிலான டச் ஸ்க்ரீன் தொடுத்திரை, பனோராமிக் கண்ணாடி மேற்கூரை, வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்டவை விஎஃப்7 காரில் வழங்கப்படுகின்றன. இந்த இரு எலக்ட்ரிக் கார்களிலும் லெவல்-2 அடாஸ் (ADAS) வசதிகள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிற்கு கடந்த காலங்களில் இருந்து பல்வேறு வெளிநாட்டு கார் கம்பெனிகள் வந்துள்ளன. இருப்பினும், அவை எல்லாவற்றையும் விடவும் வின்ஃபாஸ்ட் சற்று வித்தியாசமானதாக தெரிகிறது. இந்தியாவில் முதலில் தொழிற்சாலை அமைத்த பின்னரே, காரின் விற்பனையை துவங்குவது என்பது மிக தைரியமான முடிவாகும். ஒருவேளை இந்திய சந்தையில் பெரியதாக வெற்றி பெற முடியவில்லை என்றாலும், தூத்துக்குடி தொழிற்சாலையை வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்ய வின்ஃபாஸ்ட் பயன்படுத்தும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 15, 2025, 10:49 [IST]
English summary
Vinfast opens pre booking for vf6 and vf7 electric suv cars in india
மேலும்... #VinFast #electric car #car booking #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+