இந்தியாவிற்கே தமிழ்நாடு தான் "மாடல்"-ஆக போகுது! இன்னும் 2 மாசத்துல இந்த ஆலையில் உற்பத்தி துவங்குது!
வியட்நாம் கார் உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட், இந்தியாவில் தனது விற்பனையை துவங்க தயாராக உள்ளது, இது இந்தியாவின் மோட்டார் வாகனத் துறைக்கு மிகப்பெரிய வளர்ச்சியைத் தரும். இந்நிறுவனம் 2025ஆம் ஆண்டு பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவின் போது தனது திட்டங்களை அறிவித்தது, அடுத்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் புதிய உற்பத்தி வசதியைத் தொடங்கும் என அறிவித்திருந்தது. இது வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய மார்கெட் உள்ளே நுழையும் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கிறது
தமிழ்நாட்டில் வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை நிறுவப்படுவது, இவி தொழிற்சாலை அமைந்துள்ளது சென்னை, கிருஷ்ணகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகியவற்றின் வரிசையில் தூத்துக்குடியை இணைத்துள்ளது. தூத்துக்குடி ஒரு முக்கியமான மோட்டார் வாகன உற்பத்தி மையமாக மாறவுள்ளது. இந்த ஆலைக்கான, 90% தயாரிப்பு பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக உற்பத்தியைத் தொடங்கும் திட்டத்துடன் அந்நிறுவனம் இருக்கிறது.

இந்திய மார்கெட்டில் ஊடுருவ அந்நிறுவனத்தின் பரவலான திட்டத்தில் இது ஒரு பகுதியாகும். வின்ஃபாஸ்ட்டின் தொழிற்சாலைக்கு தூத்துக்குடியைத் தேர்ந்தெடுத்துள்ளது, மாநிலத்தின் வலுவான கட்டமைப்பு மற்றும் கடல் வழி இணைப்பு ஆகிய காரணங்களால் நிகழ்ந்துள்ளது. மோட்டார் வாகனத் துறையில் தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் செல்வாக்கை இது எடுத்துக்காட்டுகிறது.
வின்ஃபாஸ்ட், தூத்துக்குடி ஆலையில் ஆண்டுக்கு 50,000 வாங்கனங்களை ஆரம்பத்தில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. படிப்படியாக அதிகரித்து, இறுதியில் 1.5 லட்சம் வாகனங்கள் வரை தயாரிக்க வேண்டும் என்கிற அளவுக்கு, உற்பத்தி இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இந்த தொழிற்சாலையில் விஎஃப்3, விஎஃப்5 மற்றும் இ34 உள்ளிட்ட வலது பக்க டிரைவ் (ஆர்ஹெச்டி) மற்றும் இடது பக்க டிரைவ் (எல்ஹெச்டி) மாடல்கள் இரண்டு வகை வாகனங்களும் தயார் செய்யப்படும்.

இந்த ஆலை வின்பேஸ்ட்டின் உற்பத்தி அடிச்சுவடுகளை விரிவுபடுத்துவதற்கானது மட்டுமல்ல; தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்நிறுவனம் மிகப்பெரிய பாலமாக அமைந்துள்ளது.சுமார் 3,500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்திற்கு இந்நிறுவனம் மிகப்பெரிய பங்களிக்க தயாராகவுள்ளது.
உள்ளூர் உதிரிபாக விநியோகர்களுடன் கூட்டு சேர்வதன் மூலம், தனது வாகனங்களுக்கு போட்டி விலையை உறுதிப்படுத்த, உள்ளூர் தயாரிப்பு வின்ஃபாஸ்ட் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இந்த அணுகுமுறை வின்ஃபாஸ்ட்க்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், ஏற்கனவே 400 க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் முக்கிய டயர் உற்பத்தியாளர்களை கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் மோட்டார் வாகன சுற்றுச்சூழலை மேலும் வலுப்படுத்தும், இது மாநிலத்தில் செயல்படும் மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுக்கு அதிக அளவில் உள்ளூர்மயமாக்கலை செயல்படுத்தும்.

மாசு இல்லாத போக்குவரத்தை நோக்கிய உலகளாவிய டிரெண்ட் உடன் இணைந்து, வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் கவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் (இவி) மீது இருக்கும். முக்கியமான இவி கூறுகளை இறக்குமதி செய்து, முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனங்களை ஏற்றுமதி செய்வதற்காக, வியட்நாமின் ஹைஃபோங் துறைமுகத்துடன் கப்பல் போக்குவரத்து மற்றும் லைனர் இணைப்பை நிறுவுவதில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த முக்கிய நடவடிக்கை 2,000 டிஇயூக்கள் (இருபது அடி சமமான அலகுகள்) கூறுகளை இறக்குமதி செய்வதை எளிதாக்கும், உற்பத்தி மே மாதத்திற்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் ஜூன் மாதத்தில் அதிகாரப்பூர்வ அறிமுக விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வின்ஃபாஸ்ட் இந்திய மார்கெட் உள்ளே விஎஃப்7 எலெக்ட்ரிக் எஸ்யூவியில் தொடங்கும், அதைத் தொடர்ந்து விஎஃப்6 மற்றும் விஎஃப்3 போன்ற பிற மாடல்கள் வரும். இந்த திட்டம், இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கார் வாடிக்கையாளர்களிடம் வின்ஃபாஸ்ட்டின் திறன்களை வெளிப்படுத்தி, நடுத்தர பிரீமியம் பிரிவை சேர்ந்த வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு, முதலில் பிராண்டின் அதிக பிரீமியம் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
வின்ஃபாஸ்ட் உற்பத்தி தளத்திற்கு தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுப்பது, இங்கு மோட்டார் வாகன உற்பத்தியில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்ட திறமை மற்றும் எலெக்ட்ரி் வாகனங்களுக்கான வளர்ந்து வரும் மையமாக அதன் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் திறமையான பணியாளர் படை, விரிவான சப்ளையர் நெட்வொர்க் மற்றும் வலுவான கட்டமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல நகரங்களை சாத்தியமான இவி மையங்களாக அடையாளம் கண்டுள்ளது.
வின்ஃபாஸ்ட் தனது செயல்பாடுகளுடன், தமிழ்நாடு மோட்டார் வாகனத் துறையில் தனது தலைமையை மேலும் உறுதிப்படுத்த உள்ளது. வின்ஃபாஸ்ட் மற்றும் உள்ளூர் சப்ளையர்கள் இடையிலான ஒத்துழைப்பு, தூத்துக்குடியில் உள்ள துறைமுகத்துடன் இணைந்து, உற்பத்தி செயல்முறையின் திறனை மேம்படுத்தவும், வாகனங்களை ஏற்றுமதி செய்வதை விரைவுபடுத்தவும் சிறப்பாக செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மோட்டார் வாகன மார்கெட்டில் வின்ஃபாஸ்ட் முயற்சி புதுமை மற்றும் வளர்ச்சியின் ஒரு புதிய யுகத்தை குறிக்கிறது. தூத்துக்குடியில் ஒரு நவீன உற்பத்தி ஆலையை நிறுவுவதன் மூலம், வின்ஃபாஸ்ட் உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிப்பது மட்டுமல்ல, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்துவதும் ஆகும். இந்த நடவடிக்கை தமிழ்நாட்டின் நிலையை ஒரு முக்கிய மோட்டார் வாகன மையமாக வலுப்படுத்தும் மற்றும் போக்குவரத்துக்கான நிலையான எதிர்காலத்திற்கான வழியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









