டெஸ்லா எல்லாம் ஓரம் போ! தூத்துக்குடியில் ஜூலையில் இந்த கார் கம்பெனி தயாரிப்பு ஆரம்பிக்குது!

வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தனது ஆலையை அமைத்து கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் வரும் ஜூலை மாதம் இந்நிறுவனம் தனது தயாரிப்பை தூத்துக்குடியில் உள்ள தனது ஆலையில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் விரைவில் தனது கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வியட்நாம் நாட்டைச்சேர்ந்த நிறுவனம் வின்ஃபாஸ்ட் நிறுவனம் கடந்த 2017ம்ஆண்டு தான் துவங்கப்பட்டது. முதலில் கம்பஷன் இன்ஜின் வாகனங்களை மட்டுமே தயாரிக்க துவங்கியது. இந்நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ள நிலையில் கடந்த 2022ம் ஆண்டு இந்நிறுவனம் முற்றிலுமாக எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கப்பபோவதாக மிகப்பெரிய மாற்றத்தை செய்தது. இந்நிலையில் எலெக்ட்ரிக் கார் விற்பனையும் சிறப்பாக அமைந்தது.

VinFast Production

இந்நிலையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரிக்க முடிவு செய்து இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்தது. அதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் தனது வாகன தயாரிப்பு ஆலையை அமைக்க அந்நிறுவனம் முடிவு செய்தது. தூத்துக்குடியிலிருந்து வியட்நாமிற்கு துறைமுக உறவு சிறப்பாக இருப்பதால் அந்நிறுவனம் அந்த பகுதியில் ஆலையை அமைக்க திட்டமிட்டு தற்போது ஆலையும் முழுமையாக கட்டமைக்கப்பட்டு தயாரிப்புக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில் வரும் ஜூலை மாதம் முதல் இந்த வாகனங்களுக்கான தயாரிப்பை துவங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முதலில் இந்நிறுவனம் விஎஃப்7 ரக வாகனத்தை தான் தனது முதல் வாகனமாக தயாரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த கார் ஒரு சிறந்த பெர்ஃபார்மென்ஸ் செய்யு் எஸ்யூவி காராக இருகு்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த வாகனத்தின் மூலம் மக்கள் கவனத்தை இந்நிறுவனம் மீது திரும்ப வைக்க முயற்சி செய்ய திட்டமிட்டுள்ளது.

VinFast Production

அடுத்ததாக குறைந்த விலையில் இந்நிறுவனம் வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனத்தையும் இந்நிறுவனம் வெளியிடும் என்ற பேச்சும் மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இதற்கிடையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் கார்கள் மட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் டூவீலர்களையும் தயாரிக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இந்நிறுவனம் அமைத்துள்ள ஆலை வியட்நாம், அமெரிக்காவிற்கு அடுத்த 3வது ஆலை ஆகும். இந்த ஆலை சுமார் 400 ஏக்கர் நிலபரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டிற்கு 1.50 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் நேரடியாக 3500 பேர் வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.

VinFast Production

இந்நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் ஒரு புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் டெஸ்லா போன்ற நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிற்கு பிரத்தியேக நிறுவனமாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வின்ஃபாஸ்ட் நிறுவனம் களம் இறங்கியுள்ளது.இது நிச்சயம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஜூலை மாதம் தயாரிப்பை துவங்குகிறது என்றால் இந்த நிறுவனம் வரும் பண்டிகை காலங்களில் கார்களை விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் இந்த காலகட்டத்தில் தான் விற்பனை சூடுபிடிக்கும் என்பதால் இந்த காலகட்டத்தை அந்நிறுவனம் டார்கெட் செய்து தனது விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 17, 2025, 14:10 [IST]
English summary
Vinfast production in india begins july ahead of vf7 launch
மேலும்... #VinFast #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X