தமிழக கம்பெனிக்கு அடித்த ஜாக்பாட்! ஒரே மாதத்தில் 22 மடங்கு அதிகரித்த விற்பனை!
இந்தியாவில் இவி மார்கெட் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. தற்போது டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எம்ஜி நிறுவனம் கணிசமான மார்கெட் பங்கை பெற்றுள்ள நிலையில் புதிதாக வியட்நாம் நாட்டைச் சேர்ந்த விண்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தனது ஆலையை துவங்கி விற்பவனையை துவங்கிய 2வது மாதமே நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது.
விண்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தனது 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் இந்நிறுவனம் மொத்தம் 131 கார்களை விற்பனை செய்துள்ளது. இது விற்பனையில் குறைவான எண்ணிக்கையாக தோன்றலாம். இந்நிறுவனம் சமீபத்தில் தான் தனது கார்களின் விற்பனையை துவங்கியது. செப்டம்பர் மாதம் 6 கார்களை மட்டுமே விற்பனை செய்தது. தற்போது இது 22 மடங்கு விற்பனை அதிகமாகியுள்ளது.

விண்ஃபாஸ்ட் நிறுவனம் இ்நதியாவில் விஎஃப் 6 மற்றும் விஎஃப்7 ஆகிய கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இந்த வாகனங்கள் முறையே ரூ16.49 லட்சம் முதல் ரூ25.49 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது.இ்நதியாவில் உள்ள வாகனங்களின் போட்டியாக இ்நத கார் விற்பனைக்கு வருகிறது.
விண்ஃபாஸ்ட் நிறுவனம் விஎஃப்6 காரை பொருத்தவர 59.6 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது முழு சார்ஜில் 468 கிலோ மீட்டர் ரேஞ்சை வழங்குகிறது. அதே நேரம் 10-70 சதவீத பேட்டரியை வெறும் 25 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றிவிடும் வகையில் பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் எர்த், விண்ட்,விண்ட் இன்ஃபினிட்டி ஆகிய வேரயின்ட்களில் இந்த கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விஎஃப்6 எர்த் வடேரியன்டை பொருத்தவரை 130 கிலோ வாட் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது போக ஆட்டோ ஏசி மற்றும் 12.9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிறா்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
விஎஃப்6 விண்ட் வேரியன்டை பொருத்தவரை 150 கிலோ வாட் பவர், 310 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது போக 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய எலெக்ட்ரிக் சீட்டுகள், டுயல் ஸோன் ஏசி, அடாஸ் லெவல் 2 அம்சங்கள் ஹெட்ஸ் அப் டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

விஎஃப்7 ஸ்கை வேரியன்ட்டை பொருத்தவரை டுயல் மோட்டார் செட்டப் உடன் ஆல்வீல் டிரைவ்ஆப்ஷனவ் கொண்டதாக இருகு்கிறது. இது 260 கிலோ வாட் பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுவுள்ளது. அதிக ஃபெர்பார்மென்ஸை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஏற்ற காராக இருக்கும்.
பலர் இந்த நிறுவனத்தின் காரை வாங்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். ஆனால் இந்த நிறுவனம் தனது ஷோரூம் மற்றம் விற்பனை மையங்களை விரிவாக்கவில்லை அதே போல சர்வீஸ் சென்டர்களையும் விரிவாக்கவில்லை இதன் காரணமாக தான் விற்பனை குறைவாக இருக்கிறது. விரைவில் இதன் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த வாகனங்கள் தயாரிக்கப்படுவதால் போட்டி விலையில் களம் இறங்கியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் தனது ஷோரூம்களை விரிவுபடுத்தினால் ஏகப்பட்ட விற்பனையை பெற முடியும்.


Click it and Unblock the Notifications









