கனவுல கூட நெனச்சு பாக்க முடியாத குறைவான விலை! இந்திய மார்க்கெட்டை தலை கீழா புரட்டி போட போகும் எலெக்ட்ரிக் கார்
வியட்நாம் (Vietnam) நாட்டை சேர்ந்த பிரபலமான எலெக்ட்ரிக் கார் நிறுவனங்களில் (Electric Carmaker) ஒன்றாக வின்ஃபாஸ்ட் (VinFast) திகழ்கிறது. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலை தற்போது தமிழ்நாட்டில் (Tamil Nadu) கட்டமைக்கப்பட்டு வருகிறது. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலை தூத்துக்குடி (Thoothukudi) அருகே அமைகிறது. இதன் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டு, எலெக்ட்ரிக் கார் உற்பத்தி பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதை தொடர்ந்து, இந்திய சந்தையில் 2 எலெக்ட்ரிக் கார்களை வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
அவை வின்ஃபாஸ்ட் விஎஃப்6 (VinFast VF 6) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப்7 (VinFast VF 7) ஆகியவை ஆகும். இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும் வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து மூன்றாவதாகவும் ஒரு எலெக்ட்ரிக் காரை வின்ஃபாஸ்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

அது வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 (VinFast VF 3) ஆகும். தற்போதைய நிலையில் சர்வதேச சந்தைகளில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனை செய்து வரும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் (VinFast's Most Affordable Electric Car) என்ற பெருமையை இது கொண்டுள்ளது. எனவே இந்திய சந்தையிலும் இதன் விலை மிகவும் குறைவாகவே இருக்கும்.
இதன் காரணமாக இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் வின்ஃபாஸ்ட் விஎஃப்3 எலெக்ட்ரிக் கார் தற்போது மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் இந்த செய்தியின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டதை போல், இந்திய சந்தையில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் காராக விஎஃப் 3 களமிறக்கப்படவுள்ளது.

இந்திய சந்தைக்கான வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காரில், 18.64 kWh பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 215 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். இது நடைமுறை பயன்பாடுகளுக்கு ஏற்ற டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காரின் பவர் அவுட்புட் 41 பிஎஸ் பவர்/110 என்எம் டார்க் ஆக இருக்கும். இது ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஒரு கார் ஆகும். வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமும் சார்ஜ் செய்யலாம் என கூறப்படுகிறது. ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், வெறும் 36 நிமிடங்களிலேயே, பேட்டரியை 10-70 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.
இது 3 டோர்களை மட்டும் கொண்ட ஒரு சிறிய கார் ஆகும். பக்கவாட்டில் தலா ஒன்று என இரண்டு மற்றும் பின் பகுதியில் ஒன்று என 3 டோர்கள் வழங்கப்பட்டிருக்கும். இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான கார்கள் 5 டோர்களை கொண்டவை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
ஆனால் வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 அப்படி இருக்காது. அத்துடன் இது 4 சீட்டர் கார் ஆகும். முன் வரிசையில் 2 மற்றும் பின் வரிசையில் 2 என 4 இருக்கைகள் வழங்கப்பட்டிருக்கும். அப்படியானால் பின் வரிசை இருக்கைகளுக்கு எப்படி செல்வது? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். முன் பகுதியில் உள்ள கோ-டிரைவர் இருக்கையை மடித்து கொள்வதன் மூலமாக, உங்களால் பின் வரிசைக்கு செல்ல முடியும்.
மேலும் இந்த காரில் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் வழங்கப்பட்டிருக்கும். இதுவே இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான கார்களில், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை தனித்தனியாக வழங்கப்பட்டிருக்கும்.
பாதுகாப்பை பொறுத்தவரை, வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காரில், ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகிய வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டிருக்கும். இந்திய சந்தையில் வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) 9 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் எம்ஜி (MG) நிறுவனம் தற்போது அதன் எலெக்ட்ரிக் கார்களுக்கு பேட்டரி சப்ஸ்க்ரிப்ஷன் (Battery Subscription) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதே பாணியில் வின்ஃபாஸ்ட் நிறுவனமும் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காருக்கு பேட்டரி சப்ஸ்க்ரிப்ஷன் திட்டத்தை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது நடக்கும்பட்சத்தில், ஆரம்ப விலை 6-7 லட்ச ரூபாய் என்ற அளவில் கூட மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம். ஆனால் இவை எல்லாம் எதிர்பார்க்கப்படும் விலைகள் மட்டுமே. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில்தான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது நமக்கு தெரிய வரும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வின்ஃபாஸ்ட் விஎஃப்3 எலெக்ட்ரிக் காரின் வருகை, இந்திய சந்தையில் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV), டாடா டியாகோ இவி (Tata Tiago EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் கார், 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த காரின் அறிமுகத்தை நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








