மொத்த இந்தியாவையும் மிரள விட போகும் தமிழ்நாடு! இவ்ளோ கம்மியான விலையில் எலெக்ட்ரிக் காரா! நடுக்கத்தில் டாடா!
வியட்நாம் (Vietnam) நாட்டை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன (Electric Vehicles) நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). அமெரிக்காவின் (US) டெஸ்லா (Tesla) நிறுவனத்திற்கு போட்டியாக கருதப்படும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தொழிற்சாலை தமிழ்நாட்டின் (Tamil Nadu) தூத்துக்குடி (Thoothukudi) பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 2 எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்து வருகிறது. அவை வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 (VinFast VF 7) ஆகியவை ஆகும்.

இந்த வரிசையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 (VinFast VF 3) எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற 2025 ஆட்டோ எக்ஸ்போ வாகன திருவிழாவில் வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் கார் தற்போது சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது அளவில் மிகவும் சிறிய மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த ஒரு எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

அதாவது இது தினசரி நகர பயன்பாடுகளுக்கு ஏற்ற ஒரு எலெக்ட்ரிக் கார் ஆகும். அளவில் மிகவும் சிறியது என்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கும் இது மிகவும் ஏற்றதாக இருக்கும். வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காரில், 18.64 kWh பேட்டரி (Battery) பொருத்தப்பட்டுள்ளது.
இதை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 215 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தினசரி நகர பயன்பாடுகளுக்கும், அவ்வப்போது மேற்கொள்ளப்படும் அருகில் இருக்க கூடிய வெளியூர் பயணங்களுக்கும் ஏற்ற டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) ஆக இருக்கும்.
ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும், 36 நிமிடங்களில் 10 சதவீதத்தில் இருந்து 70 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். அதே நேரத்தில் இந்த காரின் பவர் அவுட்புட் 40 பிஹெச்பி பவர் மற்றும் 110 என்எம் டார்க் திறன் ஆக இருக்கும்.
மறுபக்கம் வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காரில், ஈக்கோ மற்றும் நார்மல் என மொத்தம் 2 டிரைவிங் மோடுகள் (Driving Modes) கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் டாப் ஸ்பீடு (Top Speed) மணிக்கு 100 கிலோ மீட்டர்களாக இருக்கிறது. அத்துடன் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளையும் (Features) மற்றும் 10 கலர் ஆப்ஷன்களையும் (Colour Options) வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் கார் கொண்டுள்ளது.
இந்த காரின் முன் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரங்களில் ட்ரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று இது அளவில் சிறிய எலெக்ட்ரிக் கார் ஆகும். எனவே 4 பேர் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் காரில் பயணம் செய்ய முடியும். இந்த காரின் 2வது வரிசை இருக்கைகளை மடக்கி வைத்து கொண்டால், லக்கேஜ்களை வைப்பதற்கு 285 லிட்டர்கள் இடவசதி கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும். அனேகமாக அடுத்த ஆண்டு (2026), வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காருக்கு மட்டுமல்லாது, டாடா டியாகோ இவி (Tata Tiago EV) எலெக்ட்ரிக் காருக்கும் இது போட்டியாக இருக்கும். இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், தூத்துக்குடி தொழிற்சாலையில்தான் வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 உற்பத்தி செய்யப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








