இதை விட கம்மி விலையில் எலெக்ட்ரிக் காரை விக்க முடியாது! மொத்த இந்தியாவையும் கலக்க போகும் தூத்துக்குடி நிறுவனம்
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனத்தின் 2 எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அவை வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 (VinFast VF 7) ஆகியவை ஆகும்.
இதில், வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 16.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 18.29 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 இதை விட விலை உயர்ந்தது ஆகும்.

வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 20.89 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 25.49 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதல் 2 எலெக்ட்ரிக் கார்களின் விலை அதிகம் என நீங்கள் நினைத்தால், உங்களுக்காகவே கூடிய விரைவில் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஒன்றை வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அது வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 (VinFast VF 3) எலெக்ட்ரிக் கார் ஆகும்.

உலக அளவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனை செய்து வரும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 உள்ளது. இதன் காரணமாக இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் கார் மீது தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் கார், அளவில் சிறியது ஆகும். இதில், அதிகபட்சமாக 4 பேர் பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்றவை எல்லாம் இந்த காரின் மிக முக்கியமான வசதிகளாக (Features) இருக்கலாம்.
பொதுவாக கார்களில், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் தனியாகவும், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் தனியாகவும் இருக்கும். ஆனால் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ஒரு சில எலெக்ட்ரிக் கார்களில், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸட்டர் இருப்பதில்லை. இதில் வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காரும் ஒன்றாகும். இதன் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்தான், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும்.
செயல்திறனை பொறுத்தவரையில், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காரில், 18.64 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range), அதாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணம் செய்ய கூடிய தொலைவு, சுமார் 215 கிலோ மீட்டர்களாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சந்தையில் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV), டாடா டியாகோ இவி (Tata Tiago EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன், வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் கார் போட்டியிடும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 7.50-8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், வின்ஃபாஸ்ட் விஎஃப் 3 எலெக்ட்ரிக் கார், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறலாம்.
அனேகமாக அடுத்த ஆண்டு (2026), இந்த எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலை தமிழ்நாட்டின் தென் பகுதியான தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








