அடிமாட்டு விலையில் களமிறங்கிய தூத்துக்குடி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்! டாடா மார்க்கெட் காலியாக போகுது!

வியட்நாம் (Vietnam) நாட்டை சேர்ந்த உலக புகழ் பெற்ற எலெக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). தமிழ்நாட்டின் (Tamil Nadu) தென் பகுதியான தூத்துக்குடியில் (Thoothukudi) வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது பிரம்மாண்டமான எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலையை அமைத்துள்ளது.

அங்கு எலெக்ட்ரிக் கார் உற்பத்தி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், இந்திய சந்தையில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இன்று (செப்டம்பர் 6) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று மொத்தம் 2 எலெக்ட்ரிக் கார்களை வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

VinFast VF 6 Side Design

அவை வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 (VinFast VF 7) ஆகியவை ஆகும். இந்த செய்தியில், வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் கார் குறித்த முழுமையான தகவல்களை உங்களுக்கு தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் காருக்குள் நுழைவோம்.

இன்ஃபினிட்டி பிளாங்க், க்ரிம்சன் ரெட், ஜெட் பிளாக், டெசட் சில்வர், ஜெனத் க்ரே மற்றும் அர்பன் மின்ட் ஆகிய கலர் ஆப்ஷன்களில் (Colour Options), வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் கார் கிடைக்கும். இது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். 5 பேர் சௌகரியமாக பயணம் செய்ய கூடிய வகையில், இந்த எலெக்ட்ரிக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

VinFast VF 6

வசதிகளை (Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), ட்யூயல் ஸோன் ஏசி, முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் பனரோமிக் க்ளாஸ் ரூஃப், கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, முழுமையாக எல்இடி லைட்கள் போன்றவை எல்லாம் வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

அத்துடன் 12.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும், வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இது சற்றே டிரைவரை நோக்கி இருக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கார்களிலும் இருக்கும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் காரில் இருக்காது. அதற்கு பதிலாக முக்கியமான தகவல்களை எல்லாம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மூலமாக டிரைவர் தெரிந்து கொள்ளலாம்.

வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் காரில், ஒரே ஒரு பேட்டரி ஆப்ஷன் (Battery Option) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அது 59.6 Kwh பேட்டரி ஆகும். இதன் அதிகபட்ச டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 399 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் காரில், ரேஞ்ச் பற்றிய கவலை இல்லாமல், தொலை தூர பயணங்களை சௌகரியமாக மேற்கொள்ள முடியும்.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் கார், மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அவை வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எர்த், வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 விண்ட் மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 விண்ட் இன்ஃபினிட்டி ஆகியவை ஆகும்.

இதில், எர்த் வேரியண்ட்டின் விலை வெறும் 16.49 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விண்ட் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 17.79 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டான விண்ட் இன்ஃபினிட்டி வேரியண்ட்டின் விலை 18.29 லட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். அத்துடன் இவை அனைத்துமே அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்தான். எனவே பின் நாட்களில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் விஎஃப் 6 எலெக்ட்ரிக் காரின் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் வெறும் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் காரை புக்கிங் செய்து கொள்ளலாம். இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், கூடிய விரைவில் டெலிவரி (Delivery) பணிகளும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வின்ஃபாஸ்ட் நிறுவனம் விஎஃப் 6 எலெக்ட்ரிக் காருக்கு சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம். முன்பு எதிர்பார்க்கப்பட்டதை விட, குறைவான விலையில் வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் காரின் வருகை, இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6), எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக டாடா நெக்ஸான் இவி கடுமையான சவால்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. முன்னதாக எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரின் வருகையே, டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காருக்கு விற்பனையில் கடுமையான சவால்களை ஏற்படுத்தி விட்டது. இந்த சூழலில் தற்போது களமிறங்கியுள்ள வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் காரும், தன் பங்கிற்கு, டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை சோதிக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 6, 2025, 13:51 [IST]
English summary
Vinfast vf 6 electric suv launched in india price driving range features and more
மேலும்... #VinFast #electric car #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+