வர்ற 6ம் தேதி மார்க்கெட் அதிர போறது உறுதி! இந்தியாவே எதிர்பார்த்த தூத்துக்குடி நிறுவன கார்கள் களத்துக்கு வருது

வியட்நாம் (Vietnam) நாட்டை சேர்ந்த முன்னணி எலெக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் (Thoothukudi) அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வெகு சமீபத்தில்தான் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டன. இதை தொடர்ந்து இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வின்ஃபாஸ்ட் தயாராகி வருகிறது.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய சந்தையில் முதற்கட்டமாக 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரக கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்களும், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

VinFast VF 6

இதை தொடர்ந்து இந்த 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்களுக்கும் முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளை வின்ஃபாஸ்ட் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. இந்த வரிசையில் தற்போது வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 ஆகிய 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்களின் அறிமுக தேதி (Launch Date) வெளியாகியுள்ளது.

என்டிடிவி ஆட்டோ தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி பார்த்தால், வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 ஆகிய 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்களும், இந்திய சந்தையில் வரும் செப்டம்பர் 6ம் தேதி (September 6) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. அன்றைய தினத்தில் இந்த 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்களின் விலையும் (Price) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

VinFast VF 6 Front Design

இதில், வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 70.8 kWh பேட்டரி வழங்கப்பட்டிருக்கும். இந்த காரானது, ஃப்ரண்ட் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என 2 ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஃப்ரண்ட் வீல் டிரைவ் மாடலின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 450 கிலோ மீட்டர்கள் ஆகவும், ஆல் வீல் டிரைவ் மாடலின் டிரைவிங் ரேஞ்ச் 431 கிலோ மீட்டர்கள் ஆகவும் இருக்கலாம்.

மறுபக்கம் வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 59.6 kWh பேட்டரி வழங்கப்பட்டிருக்கும். இதன் டிரைவிங் ரேஞ்ச் 480 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே விலை நிர்ணயம் சரியாக மேற்கொள்ளப்பட்டால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

தற்போது வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை 50 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். அதே நேரத்தில் வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை 25 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளான செப்டம்பர் 6ம் தேதிதான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஆரம்பத்தில் மிகவும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தாலும் கூட, எதிர்காலத்தில் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக எதிர்காலத்தில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திடம் இருந்து இந்திய சந்தையில் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் கூட எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரலாம். எனவே இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் கார் நிறுவனங்களில் ஒன்றாக வின்ஃபாஸ்ட் மாறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 ஆகிய 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டு விட்டாலும் கூட, இன்னும் டெலிவரி தேதி வெளியாகவில்லை. எனினும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட குறுகிய காலத்திலேயே இந்த 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களின் டெலிவரி தொடங்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 28, 2025, 17:50 [IST]
English summary
Vinfast vf 6 vf 7 india launch date september 6 check all details here
மேலும்... #VinFast #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+