தமிழக தயாரிப்பை பாத்து மிரண்டுபோக ரெடியா இருங்க! ஆட்டோ எக்ஸ்போவை குறிவைத்து காய் நகர்த்தும் வியட்நாம் பிராண்டு

வியட்நாமைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனம் வின்ஃபாஸ்ட் (VinFast). இந்த நிறுவனம் இந்தியாவில் சீக்கிரமே அதன் கார் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. மிகப் பெரிய பிளானுடனேயே இந்த நிறுவனம் இந்தியாவில் கால்தடம் பதிக்க உள்ளது. ஒட்டுமொத்த சந்தையையும் முழுமையாக தன் வசம் வளைத்து போட வேண்டும் என்பதே நிறுவனத்தின் பிளானாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே தன்னுடைய உற்பத்தி ஆலையை அது உருவாக்கி வருகின்றது. தமிழகத்திலேயே நிறுவனத்தின் மிகவும் பிரமாண்டான வாகன உற்பத்தி ஆலை தயாராகிக் கொண்டிருக்கின்றது.

இந்த ஆலையில் சீக்கிரமே வாகன உற்பத்தி பணி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மேட்-இன் தமிழக கார்கள் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்த நிலையிலேயே இந்தியர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான வேலையில் களமிறங்கி இருக்கின்றது, வின்ஃபாஸ்ட். நிறுவனம் விரைவில் இந்தியாவில் நடைபெற இருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 வாயிலாக தன்னுடைய தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vinfast e-suv s to debut at auto expo 2025

இரண்டு கார் மாடல்களை நிறுவனம் காட்சிப்படுத்த இருப்பது உறுதியாகி இருக்கின்றது. விஎஃப் 7 (VF 7) மற்றும் விஎஃப் 9 (VF 9) ஆகிய இரண்டு கார் மாடல்களையே அது காட்சிப்படுத்த இருக்கின்றது. இரண்டுமே எலெக்ட்ரிக் கார் மாடல்கள் ஆகும். இந்த இரண்டின் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வின்ஃபாஸ்ட் விஎஃப் 7: இது ஓர் 5 இருக்கைகளைக் கொண்ட எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். உலக சந்தையில் இந்த கார் மாடல் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்தியாவில் ஒற்றை தேர்விலேயே விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 75.3 kWh பேட்டரி பேக் தேர்விலேயே இந்தியாவில் இந்த கார் மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இது ஓர் முழு சார்ஜில் 431 கிமீ ரேஞ்சை வழங்கும். பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெவல் 2 வகை அடாஸ் (ADAS) தொழில்நுட்பம், கார் இணைப்பு வசதி என ஏகப்பட்ட அம்சங்களுடன் இந்த கார் இந்திய சந்தையை அலங்கரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுமட்டுமல்ல இன்னும் பல்வேறு பிரீமியம் அம்சங்கள் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், கேபினை விரைந்து குளிர்விக்கும் வசதிக் கொண்ட ஏசி சிஸ்டம், அதிக சொகுசான இருக்கைகள் மற்றும் பல அம்சங்கள் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

வின்ஃபாஸ்ட் விஃப் 9: இது ஓர் மூன்று வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். ஆகையால், இந்த காரில் ஆறு முதல் ஏழு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். ரேஞ்ச் தருவதிலும் இந்த கார் மாடல் கை தேர்ந்ததாக இருக்கும் என தெரிகின்றது.

ஓர் முழு சார்ஜில் இந்த கார் அதிகபட்சமாக 531 கிமீ வரை ரேஞ்ச் தரும் என கூறப்படுகின்றது. இந்த கார் மாடலும் உலக சந்தையில் பன்முக தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில், இங்கும் பன்முக தேர்வில் அது விற்பனைக்குக் கிடைக்கலாம்.

சிறப்பம்சங்கள் விஷயத்தில் விஃப்7-ஐ விட இது சிறப்பானதாக இருக்கும். பவர்டு, ஹீட் மற்றும் ஹீட்டிங் வசதிக் கொண்ட இருக்கை, ஆட்டோ டிம்மிங் வசதிக் கொணட் ரியர் வியூ மிர்ரர்கள், இரண்டாம் வரிசை இருக்கையிலும் மசாஜ் செய்யும் வசதி, 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 13 ஸ்பீக்கர்கள் கொண்ட திரை மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பணக்கார்களின் மனம் கவர்ந்த காராக வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இந்த கார்களின் வருகை டொயோட்டா ஃபார்ச்சூனர், ஹூண்டாய் டக்சன் மற்றும் டாடா சஃபாரி உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இந்த இரண்டும் மின்சார கார்கள் என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Sunday, January 12, 2025, 15:30 [IST]
English summary
Vinfast vf 7 and vf 9 set for india debut at auto expo 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+