உலக அரங்கில் தமிழில் பேசி காரை அறிமுகம் செய்த வின்ஃபாஸ்ட்.. தமிழர்களின் மனசை இப்பவே டச் பண்ணிட்டாங்க!
வியட்நாமைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் (VinFast), பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) வாயிலாக தன்னுடைய இரண்டு கார் மாடல்களை வெளியீடு செய்தது. வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 (VinFast VF 7) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6) ஆகியவையே அவை ஆகும். இரண்டும் குடும்பங்களுக்கான வாகனம் என கூறப்படுகின்றது.
ஆனால், இரண்டும் அட்வான்ஸ்டு அம்சங்களைத் தாங்கிய இலகு ரக ஸ்போர்ட்ஸ் கார்களைப் போன்று காட்சியளிக்கின்றன. இந்த வாகனங்களின் வெளியீட்டின்போதே தமிழில் பேசி நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி வெளியீடு செய்தார். 'குடும்பம்' என்கிற வார்த்தையையே அவர் உச்சரித்தார். இது குடும்பங்களுக்கான வாகனம் என்கிற காரணத்தினாலேயே இந்த வார்த்தையை மட்டும் அவர் தமிழில் உச்சரித்தார்.

உலக அரங்கில் அவர் தமிழில் பேசி கார்களை வெளியீடு செய்தது தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த கார்களையே வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் முதலில் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பதிவில் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 கார் மாடல் பற்றிய விபரங்களையே பார்க்க இருக்கின்றோம்.
கவர்ச்சியான தோற்றத்தைத் தாங்கிய ஓர் கார் மாடலாக விஃப்7 காட்சியளிக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இதன் விலைகள் அறிவிக்கப்படவில்லை. வெளியீடு மட்டுமே செய்யப்பட்டு இருக்கின்றது. இப்போது இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரேவற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
ஆகையால், விரைவிலேயே இது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ வார்த்தைகள் இன்னும் வெளியாகவில்லை. மெல்லிய எல்இடி லைட், தேன் கூடு போன்ற ஸ்டைலிலான கிரில், அட்டகாசமான ஹெட்லைட் என இந்த காருக்கு அழகைச் சேர்க்கும் வகையிலேயே இருக்கின்றன. இதுமட்டுமல்ல காரின் மொத்த வடிவமைப்பு யுக்தியும் வேற லெவலில் இருக்கின்றது.
வீல், பக்கவாட்டு டிசைன், வின்ஃபாஸ்ட் சின்னம் மற்றும் 'வி' எழுத்துக்கு றெக்கை முளைத்ததை போன்ற எல்இடி லைட் (முன் மற்றும் பின் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும்), ஆகியவையும் கூடுதல் அழகை இந்த காருக்கு சேர்க்கும் விதமாக உள்ளது. வெளிப்புறத்தைப் போலவே இதன் உட்பக்கமும் அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது.
இதை உறுதிப்படுத்தும் காருக்குள் வழங்கப்பட்டு இருக்கும் இருக்கைகளுக்கே ரெண்டு வெவ்வேறு விதமான நிற அலங்கரிப்பு வேலை பார்க்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், 15 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் திரை, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 8 ஏர் பேக் உள்ளிட்ட அம்சங்களை இந்த காரில் வின்ஃபாஸ்ட் வழங்கி இருக்கின்றது.
இதுமட்டுமல்ல அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் டிபார்ச்சர் மற்றும் பிளைன்டு ஸ்பாட் அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த கார் ரேஞ்ச் தருவதிலும் சிறந்த எலெக்ட்ரிக் காராக இருக்கும். இது ஓர் முழு சார்ஜில் 430 கிமீ முதல் 450 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இரண்டு விதமான மோட்டார் ஆப்ஷன் மற்றும் பேட்டரி பேக் தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் வெளியாகவில்லை. குறிப்பாக விலை பற்றி எந்தவொரு சின்ன தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும், ரூ. 40 லட்சம் என்கிற விலையிலேயே இது விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை தமிழகத்திலேயே உருவாகிக் கொண்டிருக்கின்றது. இங்கு மின்சார கார்கள் மட்டுமின்றி மின்சார இரண்டு சக்கர வாகனங்களும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இந்தியாவில் உற்பத்தி பணிகள் தொடங்குவதற்கு முன்னரே தன்னுடைய வெளிநாட்டு உற்பத்தி ஆலையில் இருந்து கார்களை கொண்டு வந்து நிறுவனம் விற்பனைச் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக வின்ஃபாஸ்ட் விஎஃப்7 மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப்6 வெளியீட்டு சம்பவம் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








