பரீட்சைக்கு ஸ்கூல் பசங்க போற மாதிரி வண்டி ஏறிபோன கார்கள்.. இந்த மேட்-இன் தமிழ்நாடு கார்கள் எங்கே போச்சு தெரிமா

இந்தியாவில் இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் புதுமுக கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று கால்தடம் பதிக்க இருக்கின்றது. வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் (Vinfast) நிறுவனமே அது ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய மிகப் பெரிய வாகன உற்பத்தி ஆலையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. தமிழகத்திலேயே நிறுவனத்தின் வாகன தயாரிப்பு ஆலை தயாராகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்கள் சில டிரக்கில் ஏற்றிச் செல்லப்படும் படங்கள் இணையத்தில் வாயிலாக வெளியாகி இருக்கின்றன.

அராய் அமைப்பிடம் முக்கிய சான்றை பெறுவதற்காகவே இந்த கார்கள் ஃபிளாட் பெட் டிரக்கில் எடுத்துச் செல்லப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த வாகனத்தில் பயணித்தவை வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் விஎஃப்7 (VF7) கார் மாடல் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இதன் வாயிலாக இந்தியாவில் வின்ஃபாஸ்ட் விஎஃப்7 சீக்கிரமே விற்பனைக்கு வந்துவிடும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

Vinfast vf 7 side view

இந்தியாவில் இந்த காரை மட்டுமல்ல இன்னும் பல கார் மாடல்களை அது அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற 2025 ஆட்டோ எக்ஸ்போவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஏகப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை காட்சிப்படுத்தியது.

விஎஃப் 3 (VF 3), விஎஃப் 6 (VF 6), விஎஃப் 7 (VF 7), விஎஃப் 8 (VF 8), விஎஃப் 9 (VF 9), விஎஃப் இ34 (VF e34) மற்றும் விஎஃப் வைல்டு பிக்-அப் டிரக் கான்செப்ட் (VF Wild pickup truck concept) ஆகிய கார் மாடல்களையே அது காட்சிப்படுத்தியது.

Vinfast vf 7 sent for arai certification

இவற்றையே ஒன்றன் பின் ஒன்றாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் இ-கார்களை மட்டுமல்ல மின்சார டூ-வீலர்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஆமாங்க, இந்த வாகனங்களையும் அது ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து காட்சிப்படுத்தியது என்பது கவனிக்கத்தகுந்தது.

ஈவோ 200 (EEvo 200), கிளாரா (Klara), ஃபெலிஸ் (Feliz), வெண்டோ (Vento) மற்றும் தியோன் (Theon) உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும், டிராகன் ஃப்ளை (DrgnFly) எலெக்ட்ரிக் பைக்கையும் அது விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றில் முதலில் விஎஃப்7 மாடலே முதலில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Vinfast vf 7 spied

இதுமட்டுமல்ல விஎஃப்6 மாடலும் இதனுடன் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது அது அராயிடம் சான்று பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது. நடப்பாண்டின் இரண்டாம் பாதியிலேயே இந்த கார்கள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், துள்ளியமான நாள் பற்றிய விபரம் இன்னும் வெளியாகவில்லை.

விரைவிலேயே அது பற்றிய தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் விற்பனைக்கு வரும் வாகனங்கள் அராய் அமைப்பின் சான்றைப் பெறுவது கட்டாயம் ஆகும். வாகனத்தின் மைலேஜ் மற்றும் ரேஞ்ச் உள்ளிட்ட தகவல்களை ஆராயக் கூடிய ஓர் அமைப்பே இதுவாகும். உலக சந்தையில் வின்ஃபாஸ்ட் விஎஃப்ட7 இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Vinfast vf 7 nears arai certification

Source: Rushlane இரண்டு வேரியண்டுகளிலுமே 75.3 kWh பேட்டரி பேக்கே வழங்கப்படுகின்றது. இது ஓர் முழு சார்ஜில் 450 கிமீ ரேஞ்சை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவிலும் பேட்டரி பேக்கிலேயே விஎஃப்7 எலெக்ட்ரிக் கார் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில், இரண்டு விதமான மோட்டார் ஆப்ஷன் இந்த காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 201 பிஎச்பி மற்றும் 348 பிஎச்பி ஆகிய திறனை வெளியேற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்களிலேயே இந்த கார் எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலைக் கருத்தில் கொண்டே வின்ஃபாஸ்ட் நிறுவனம் நாட்டில் தன்னுடைய முதல் எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் பணியில் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அராய்-யிடம் சான்றை பெறுவதற்காக ஸ்கூல் பிள்ளைகளை போல் கார்கள் ஏறிச் செல்லும் படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, April 14, 2025, 23:41 [IST]
English summary
Vinfast vf 7 spotted on flatbed truck approaching arai certification in india
மேலும்... #VinFast #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X