கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? இந்த ரெண்டு கார்ல எது பெஸ்ட் தெரியுமா?

வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தனது விஎஃப்7 என்ற எலெக்ட்ரிக் காரை இன்று களம் இறக்கியுள்ளது. இந்த கார் மார்கெட்டில் சிறப்பாக விற்பனவையாகி வரும் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ காருக்கு நேரடி போட்டியாக களம் இறங்குகிறது. இந்நிலையில் இந்த இரண்டு கார்களை ஒப்பிட்டு பார்க்க பலர் விரும்புகின்றனர். அதன்படி இங்க நாம் இரண்டு கார்களின் ஒப்பீடுகளையும் காணப்போகிறோம்.

விலை

இன்று அறிமுகமான வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 காரின் விலை பேஸ் வேரியன்ட் ரூ20.89 லட்சம் முதல் டாப் வேரியன்ட் 25.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. மஹிந்திரா எக்ஸ்இவி 9இ காரின் பேக் 1 வேரியன்ட் ரூ21.90 லட்சம் முதல் டாப் வேரியன்டான பேக் 3 வேரியின்ட் ரூ 31.25 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. பேஸ் வேரியன்டில் கிட்டத்தட்ட இரண்டு கார்களும் ஒரே விலையில் இருந்தாலும் டாப் வேரியன்டில் மஹிந்திரா எக்ஸ்இவி9இ கார் அதிக விலையில் விற்பனையாகிறது.

Vinfast VF 7 vs Mahindra Xev 9e Comparison

பேட்டரி

வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 காரில் 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. அதன்படி இந்த காரில் பேஸ் வேரியன்டில் 59.6 kwh பேட்டரி பேக் ஆப்ஷன் உள்ளது. மற்ற வேரியன்ட்களில் 70.8 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் உள்ளது. மஹிந்திரா எக்ஸ்இவி 9இ காரில் பேஸ் வேரியன்டில் 59 kWh பேட்டரி பேக்கும், டாப் வேரியன்டில் 79kWh பேட்டரி பேக்கும் உள்ளது. கிட்டத்தட்ட பேஸ் வேரியன்டில் ஒரே பேட்டரி பேக் இருந்தாலும் டாப் வேரியன்டில் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ காரில் அதிக பவர் கொண்ட பேட்டரி பேக் உள்ளது.

டிரைவ்

வின்ஃபாஸ்ட் காரில் டாப் வேரியன்டில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் மஹிந்திரா எக்ஸ் இவி 9இ காரில் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் மட்டுமே இருக்கிறது. சார்ஜிங் ஆப்ஷனை பொருத்தவரை மஹிந்திரா எக்ஸ்இவி 9இ காரில் பல்வேறு சார்ஜர் ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் வின்ஃபாஸ்ட் காரில் இது குறித்த தகவல்களை அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

Vinfast VF 7 vs Mahindra Xev 9e Comparison

அளவுகள்

வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 காரை பொருத்தவரை 4545 மிமீ நீளம், 1890 மிமீ அகலம், 1636 மிமீ உயரம் மற்றும் 2840 மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கிறது. இதுவே மஹிந்திரா எக்ஸ் இவி 9இ காரை பொருத்தவரை 4789 மிமீ நீளம், 1907 மிமீ அகலம், 1694 மிமீ உயரம், 207 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 2775 மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கிறது. அளவுகளில் மஹிந்திரா எக்ஸ் இவி அதிக நீளம் மற்றும் உயரம் கொண்டதாகவும், வின்ஃபாஸ்ட் விஎஃப்7 கார் அதிக அகலம் மற்றும் வீல் பேஸ் கொண்டதாகவும் இருக்கிறது.

Vinfast VF 7 vs Mahindra Xev 9e Comparison

டிஸ்பிளே

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ காரின் சிறப்பம்சமே அதன் உட்புறம் உள்ள 3 12.3 இன்ச் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தான். ஒரு ஸ்கிரீன் டிரைவருக்கும், நடுவில் உள்ள ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனாவும், பயணிகளுக்கு உள்ள ஸ்கிரீன் எண்டர்டெயின்மென்ட் ஸ்கிரீனாவும் செயல்படும். வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 காரில் 12.9 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் இருக்கிறது. டிரைவருக்கான டிஸ்பிளே சிஸ்டம் தனியாக இருக்கிறது.

ரேஞ்ச்

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்இவி 9இ காரை பொருத்தவரை 59kWh பேட்டரியில் 542 கி.மீ ரேஞ்சும், 79kWh பேட்டரியில் 656 கி.மீ ரேஞ்சும் கிடைகப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வின்ஃபாஸ்ட் விஎஃப்7 காரின் 59.6kWh பேட்டரி பேக் கார் 438 கிமீ ரேஞ்சையும், 70.8kWh பேட்டரி பேக்கில் 532 கி.மீ ரேஞ்சையும் வழங்குகிறது. இதில் டாப் வேரியன்டில் மட்டும் ஆல் வீல் டிரைவ் செட்டப் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 மற்றும் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ ஆகிய இரண்டு கார்களும் ஒன்று ஒன்று சளைக்காமல் இருக்கிறது. இரண்டில் எது பெஸ்ட் என்று எதை வைத்தும் சொல்லிவிட முடியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தில் பெஸ்டாக இருக்கிறது. இதில் நீங்கள் வாங்க நினைக்கும் கார் எது? எது பெஸ்ட்? விரிவாக காணலாம் வாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 6, 2025, 16:45 [IST]
English summary
Vinfast vf 7 vs mahindra xev 9e comparison price features batttery range etc
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X