இப்போதுதான் ஆட்டம் சூடுப்பிடிக்குது... டாடா நிறுவனத்துக்கு இதுக்கு அப்புறம் தான் தலைவலி ஆரம்பம்!

டாடா டியாகோ இவி (Tata Tiago EV), இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் கார் (Electric Car)-களுள் ஒன்று. டாடா மோட்டார்ஸின் இந்த எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக வின்ஃபாஸ்ட் (Vinfast) நிறுவனம் அதன் வி.எஃப்3 (VF3) எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. வியட்நாம் நாட்டின் பிரம்மாண்டமான கார் நிறுவனமாக விளங்கும் வின்ஃபாஸ்ட்டின் இந்த புதிய எலக்ட்ரிக் காருக்கு, டாடா டியாகோ இவி எலக்ட்ரிக் கார் எந்தெந்த விதங்களில் போட்டியாக இருக்கும் என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

தோற்றம்: தோற்றத்தை பொறுத்தவரையில், இந்த இரு எலக்ட்ரிக் கார்களும் முற்றிலும் வேறுப்பட்டவை ஆகும். வின்ஃபாஸ்ட் விஎஃப்3 ஆனது பழமை மற்றும் புதுமை என இரண்டும் கலந்த கலவையாக உள்ளது. நிமிர்ந்த பெட்டகம் வடிவ தோற்றத்தை கொண்டிருப்பதால், விஎஃப்3 எலக்ட்ரிக் கார் அளவில் சிறியதாக காட்சியளிக்கிறது.

vinfast vf3 vs tiago ev

மறுப்பக்கம், டாடா டியாகோ இவி ஆனது எலக்ட்ரிக் காருக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தோற்றத்தை கொண்டில்லை. அதாவது, பெட்ரோல் என்ஜின் டியாகோ கார் எப்படி உள்ளதோ அதேபோன்றுதான் டியாகோ இவி எலக்ட்ரிக் காரும் உருவாக்கப்படுகிறது. இதனால், டியாகோ இவி காரின் தோற்றம் கொஞ்சம் பெரியதாக உள்ளது.

உட்புற வசதிகள்: வின்ஃபாஸ்ட் விஎஃப்3 காரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, தட்டையான ஸ்டேரிங் சக்கரம், HVAC-க்கு சுழற்றக்கூடிய டயல்கள், 10-இன்ச் ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச் ஸ்க்ரீன், பனோராமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், கீலெஸ் எண்ட்ரீ, 285-லிட்டர் கொள்ளளவில் பூட் பகுதி மற்றும் பவர் விண்டோக்கள் வழங்கப்படுகின்றன.

vinfast vf3 vs tiago ev

அதுவே, டியாகோ இவி எலக்ட்ரிக் காரில் 10.25-இன்ச் ஃப்ளோடிங் டச் ஸ்க்ரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ, எல்இடி டிஆர்எல்-கள் உடன் எல்இடி ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள், எலக்ட்ரிக் டெயில்கேட் ரிலீஸ், 4 ஸ்பீக்கர்கள் உடன் 4-ட்விட்டர் ஆடியோ சிஸ்டம், அட்வான்ஸ்டு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

பவர்டிரெயின்: வின்ஃபாஸ்ட் விஎஃப்3 எலக்ட்ரிக் காரில் 18.64kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 210கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கின்றனர். டியாகோ இவி காரில் 19.2kWh மற்றும் 24kWh என இரு விதமான லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றின் ரேஞ்ச் முறையே 223கிமீ மற்றும் 293கிமீ என உள்ளது.

vinfast vf3 vs tiago ev

விலை: இந்திய கார்கள் மார்க்கெட்டில் நுழையும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் அதன் விஎஃப்3 எலக்ட்ரிக் காரின் விலைகளை தற்போதைக்கு அறிவிக்கவில்லை. இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் டாடா டியாகோ இவி காரின் விலைகள் ரூ.7.99 லட்சம் மற்றும் ரூ.11.14 லட்சமாக தற்சமயம் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களை விற்பனை செய்வதில் பல யுக்திகளை கையாளக்கூடிய கைத்தேர்ந்த நிறுவனமாக விளங்கும் வின்ஃபாஸ்ட்டின் இந்திய வருகையும், விஎஃப்3 என்கிற சிறிய அளவிலான எலக்ட்ரிக் காரும் பலத்த கவனத்தை பெற்றுள்ளன. விஎஃப்3 காரின் போட்டியை டாடா மோட்டார்ஸின் டியாகோ இவி உள்பட மற்ற விலை குறைவான எலக்ட்ரிக் கார்கள் எவ்வாறு சமாளிக்க போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Sunday, February 9, 2025, 14:32 [IST]
English summary
Vinfast vf3 vs tata tiago ev electric cars comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X