மேட் இன் தமிழ்நாடு காரின் டெலிவரி துவங்கியது! இந்தியாவே நம்மள தான் திரும்பி பாக்குது!
விண்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தனது விஎஃப்6 மற்றும் விஎஃப்7 ஆகிய கார்களின் டெலிவரியைதுவங்கிவிட்டது. இந்த கார்கள் இ்நதியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தூத்துக்குடி ஆலையில் தயாரிக்கப்பட்ட கார்கள் டெலிவரி தற்பாது துவங்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் வாகனதயாரிப்பு நிறுவனங்களில் புதிதாக தனது காலடி தடத்தை பதித்துள்ள நிறுவனம் விண்ஃபாஸ்ட், இந்நிறுவனம் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதனது விஎஃப் 6 மற்றும் விஎஃப்7 ஆகிய கார்களின் டெலிவரியை துவங்கியுள்ளது. இந்த இரண்டு கார்களும் போட்டி கார்களின் தயாரிப்பிற்கு ஏற்றவகையில் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இந்த காரின் டெலிவரி தற்போது துவங்கியுள்ளது.இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பரிவ வருகுிறது. இந்நிலையில் சமீபத்ததில் கேரள மாநிலம் கொச்சியில் ஒரு வாடிக்கையாளர் இந்த காரை டெலிவரி எடுப்பதை வீடியோவாக எடுத்துபதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் கொச்சியில் உள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் கோஸ்ட்லைன் நிறுவனம் தான் இந்த காரை டெலிவரி செய்துள்ளது.
இந்த வீடியோவில் டீலர் ஷிப்பில் கார் முற்றிலும் மூடப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. பின்பு இந்த காரை வாங்கிய வாடிக்கையாளர் வருகிறார். பின்னர் கார் வாங்கியதை கொண்டாடும் வகையில் கேக் வெட்டுகிறார். பின்னர் அவர்கள் இணைந்து காரின் மீது போத்தப்பட்டுள்ள துணியை அகற்றுகின்றனர். முதலில் விஎஃப் 6 கார் வெளியிடப்படுகிறது. இது டெசால்ட் சில்வர் கலரில் இருக்கிறது. பின்னர் விஎஃப் 7 கார் வெளியிடப்படுகிறது. அதுவும் அதே கலரில் தான் இருக்கிறது. பின்னர் வாடிக்கையாளர்கள் வந்து அவரவர்களுக்கான சாவியை வாங்கிக்கொள்கின்றனர்.

விஎஃப்6 காரை பொருத்தவரை ரூ16.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளுது. இந்த கார் 3 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.எர்த், விண்ட், மற்றும் விண்ட் இன்ஃபினிட்டி என இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளுது. இந்த காரின் டாப் வேரியன்ட் ரூ18.29 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த கார் ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக், மற்றும் மஹிந்திரா பிஇ6 ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது.
விஎஃப் 7 காரை பொருத்தவரை ரூ 20.89 லட்சம் முதல் ரூ25.49 லட்சம் ென்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது மஹிந்திரா எக்ஸ் இவி 9இ மற்றும் ஹாரியர். இவி ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனவையாகி வருகுிறது. இந்த கார் எர்த், விண்ட், விண்ட் இன்ஃபினிட்டி, ஸ்கை, ஸ்கை இன்ஃபினிட்டிஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்த இரண்டு கார்களுக்கு 10 ஆண்டுகள் அல்லஐது 2 லட்சம் கி.மீ வாரண்டியைவழங்குகிறது. மேலும் இந்த காருக்கான சார்ஜிங் பலன்களாக ரூ75,000 மற்றும் ரூ60,000 வரைபயன்பகள் வழங்கப்படுகிறது. இதுவாடிக்கையாளர்களுக்கு நல்ல லாபத்தை வழங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழ்நாட்டில் தயாராகும் வின்ஃபாஸ்ட் காருக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு எழுந்துள்ளது. மக்கள் பலர்இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த காரை சாலையில் பார்க்க துவங்கியதும் விற்பனை வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications









