தூத்துக்குடி கம்பெனி செய்த தரமான சம்பவம்! எல்லா மால்களிலும் இவங்க காரை நிப்பாட்டிட்டாங்க!
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் விரைவில் தனது கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட திட்டமிட்ப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள முக்கியமான மால்களில் அந்நிறுவனம் தனது VF6 மற்றும் VF7 ஆகிய கார்களை காட்சிப்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் இப்படி ஒரு கார் வரப்போகிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த மார்கெட்டிங் யுக்தியை பயன்படுத்தியுள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வியட்நாம் நாட்டைச்சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனம் தான் வின்ஃபாஸ்ட் நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போது தமிழகத்தின் தூத்துக்குடியில் ஆலை அமத்துள்ளனர். இங்கு விரைவில் இந்நிறுவனம் வாகன தயாரிப்பை துவங்கவுள்ளது.

இந்நிலையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது VF6 மற்றும் VF7 வாகனங்களை தான் இந்தியாவில் களம் இறக்கவுள்ளது. இந்த கார்கள் கடந்த ஜனவரி மாதம் நடந்த குளோபல் எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த கார்கள் வெளியீட்டிற்கு முன்பு வாடிக்கையாளர்கள் ரெஸ்பான்ஸை பார்க்க இந்நிறுவனம் விரும்பியது.
இதையடுத்து இந்தியாவில் உள்ள முக்கிய மால்களில் இந்நிறுவனம் தனது VF6 மற்றும் VF7 கார்களை காட்சிப்படுத்தியுள்ளது. அங்கு வரும் மக்கள் இந்த கார் குறித்து என்ன விஷயத்தை விரும்புகின்றனர். மக்கள் இங்கு இந்த காரின் டிசைன், மற்றும் அம்சங்களை பார்க்க முடியும். மக்களிடம் கார் குறித்த கருத்துக்களையும் பெற்று வருகின்றனர்.

சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், ஐதராபாத், ஆமதாபாத், விஜயவாடா, லக்னோ, புனே, டெல்லி, கொச்சி, உள்ளிட்ட நகரங்களில் உள்ள முக்கிய மாடல்களில் இந்த கார்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது
இந்த மாடல்களுக்கு வரும் மக்கள் இந்த கார்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்தும், காரின் வடிவமைப்பை பார்த்தும் வருகின்றனர்.
இந்த VF6 மற்றும் VF7 மற்றும் ஆகிய 2 கார்குளம் 5 சீட்டர் எஸ்யூவி கார்கள் தான் இந்த காரில் 75.3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச மார்கெட்டில் இந்த பேட்டரி தான் இருக்கிறது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் முழுமையாக போட்டால் 450 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் VF7 கார் சிங்கிள் மற்றும் டுயல் மோட்டார் செட்டப் உடன் கிடைக்கிறது. இது 201 பிஎச்பி பவரையும், 310 என்எம் டார்க் திறனை கொண்டு முன்பக்க வீல் டிரைவ் ஆப்ஷன் உடன் உருவாக்கப்பட்டுள்ளது.

டுயல் மோட்டார் செட்டப் ஆல் வீல் டிரைவ் வேரியன்டில் விற்பனையாகி வருகிறது. இது 348 பிஎச்பி பவரையும் 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு காரிலும் ஒரே மாதிரியான பேட்டரி பேக் தான் இருக்கும். VF7 கார் சிங்கிள் மோட்டார் செட்டப்பில் 450 கி.மீ ரேஞ்சையும், டுயல் மோட்டார் செட்டப்பில் 431 கி.மீ ரேஞ்சையும் வழங்குகிறது. இந்த கார் 15 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெவல் 2 அடாஸ், 16 மற்றும் 17 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது கார்களை காட்சிப்படுத்தி மக்கள் மத்தியில் உள்ள ரெஸ்பான்ஸை பார்த்து வரும் நிலையில் இந்த கட்டம் அந்நிறுவனத்திற்கு மிக முக்கியமானது. அந்நிறுவனம் இதிலிருந்து கிடைக்கும் தரவுகளை வைத்தே தனது விற்பனை யுக்தியை முடிவு செய்யும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









