லாரியில் ஊர்வலமாக எடுத்துனு போய் இருக்காங்க!! சாலையில் சென்றவர்களுக்கு காரை பார்த்து ஆச்சிரியம் தாங்கல!
வின்ஃபாஸ்ட் (Vinfast) வியட்நாம் நாட்டை சேர்ந்த மிக பெரிய ஆட்டோமொபைல் நிறுவனம். எந்த அளவிற்கு பெரிய நிறுவனம் என்றால், இந்தியாவில் மாருதி சுஸுகி (Maruri Suzuki) எவ்வாறு உள்ளதோ அதுபோன்று வியட்நாம் நாட்டில் வின்ஃபாஸ்ட் உள்ளது. கார்கள், வேன்கள் மட்டுமின்றி, இருசக்கர வாகனங்களும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. வியட்நாம் நாட்டில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் பெரிய அளவிலான தொழிற்சாலை நன்கு பரந்து விரிந்துள்ளது. இந்த அளவிற்கு பிரம்மாண்டமான நிறுவனமாக விளங்கும் வின்ஃபாஸ்ட், உலகின் மிக பெரும் ஆட்டோமொபைல் சந்தையான நமது இந்தியாவில் நுழைகிறது.
இந்தியாவில் தனது நுழைவை கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியின் மூலம் உறுதிசெய்த வின்ஃபாஸ்ட் நிறுவனம், இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர உள்ள வாகனங்களையும் கண்காட்சியில் பார்வையாளர்கள் முன் காட்சிக்கு நிறுத்தியது. கார்கள், வேன்கள், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் என பல விதமான கலவையாக கண்காட்சியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் பெவிலியன் காட்சியளித்தது.

அவ்வாறு இந்தியாவில் அடுத்ததாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள வின்ஃபாஸ்ட் கார்களுள் ஒன்று, விஎஃப்7 (VF7)ஆகும். இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள முதல் வின்ஃபாஸ்ட் வாகனமாக கருதப்படும் விஎஃப்7 ஆனது ஓர் எலக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். அதுவும், அளவில் பெரியதான எலக்ட்ரிக் கார் ஆகும்.
இந்த வின்ஃபாஸ்ட் விஎஃப்7 எலக்ட்ரிக் கார் தான் தற்போது மும்பையில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட போது காட்சி தந்துள்ளது. எந்தவொரு மறைப்பும் இன்றி காட்சி தந்துள்ள இந்த குறிப்பிட்ட ஒரு விஎஃப்7 எலக்ட்ரிக் கார் ஆனது இந்தியாவில் புதியதாக வணிகத்தை துவங்கும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் டீலர் பார்ட்னர்கள் முன் காட்சிப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டு இருக்கலாம். அல்லது ஏதேனும் ஆய்வுகளுக்காக கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

இந்தியாவில் கார் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவ தற்போதுதான் வின்ஃபாஸ்ட் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதால், நிச்சயமாக இந்த விஎஃப்7 எலக்ட்ரிக் கார் வியட்நாம் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவே இருக்கும். வின்ஃபாஸ்ட் நிறுவனம் அதன் விஎஃப்7 எலக்ட்ரிக் காரை ஜெட் பிளாக் என்கிற அடர் கருப்பு நிறத்தில்தான் பரவலாக விளம்பரப்படுத்துகிறது.
அந்த ஜெட் பிளாக் நிறத்தில்தான் தற்போது மும்பையில் விஎஃப்7 எலக்ட்ரிக் கார் காட்சி தந்துள்ளது. இது இல்லாமல், பிராமினி வெள்ளை, கிரிம்சன் சிவப்பு மற்றும் நெப்டியூன் கிரே உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் இந்தியாவில் விஎஃப்7 விற்பனை செய்யப்பட உள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் கிரிம்சன் சிவப்பு நிறத்தில்தான் வின்ஃபாஸ்ட் விஎஃப்7 எலக்ட்ரிக் கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

ஆனால், ஆட்டோ எக்ஸ்போவில் 20-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் குட்இயர் (Goodyear) நிறுவனத்தின் தாழ்வான ஈகிள் எஃப்1 டயர்கள் காரில் பொருத்தப்பட்டு இருந்தன. ஆனால், தற்போது மும்பையில் அடையாளம் காணப்பட்டுள்ள விஎஃப்7 எலக்ட்ரிக் காரில் 19-இன்ச் அலாய் சக்கரங்களில் அப்போலோ (Apollo) நிறுவனத்தின் அஸ்பைர் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் கார் கம்பெனிகள் வெளிநாட்டில் விற்பனையில் இருக்கும் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்தால் சிறிய அளவிலான சக்கரங்கள் உடன் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளன. இதில் வின்ஃபாஸ்ட் நிறுவனமும் விதிவிலக்கல்ல. அல்லது, விஎஃப்7 எலக்ட்ரிக் காரின் விலை குறைவான வேரியண்ட்டாக இது இருக்கலாம். ஏனெனில், சில கார்களில் விலை குறைவான வேரியண்ட்கள் சிறிய அளவிலான சக்கரங்கள் உடன் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஜனவரி மாதத்திலேயே ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தாலும், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதல் காரான விஎஃப்7 இந்தியாவில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களை டார்க்கெட் செய்துதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் விற்பனையில் விஎஃப்7 எலக்ட்ரிக் காருக்கு பிஒய்டி (BYD) நிறுவனத்தின் அட்டோ 3 (Atto 3) எலக்ட்ரிக் கார் நேரெதிர் போட்டியாக இருக்கும்.
Source: AutoCarIndia


Click it and Unblock the Notifications









