ஷோரூமில் டெலிவிரி எடுத்ததும் நேரா இங்கே தான்... முதல் நாளே காரை கழற்றி பிரிச்சு போட்டாச்சு!!

வியட்நாம் நாட்டின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் (VinFast), இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வி.எஃப்6 (VF6) மற்றும் வி.எஃப்7 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மாடல்கள் உடன் சமீபத்தில் களமிறங்கியது. இதனை தொடர்ந்து இந்த நிறுவனம் மிக சமீபத்தில் இந்த கார்களின் டெலிவரிகளைத் தொடங்கிய நிலையில், புதியதாக டெலிவரி (Delivery) செய்யப்பட்ட வின்ஃபாஸ்ட் விஎஃப்7 எஸ்யூவி கார் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட மாடிஃபிகேஷன் (Modification) பணிகள் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, இந்த விஎஃப்7 காரின் உட்புறத்தில், அனைத்து காலநிலைக்கும் ஏற்ற பாதுகாப்புடன் ஃப்ளோர் லேமினேஷன் (Lamination) செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபிகேஷன்கள் குறித்த வீடியோவை 'Car.affair' என்ற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கம் வெளியிட்டுள்ளது. வீடியோவில் காரில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாடிஃபிகேஷன்களை விரிவாக விளக்கி கூறியுள்ளனர்.

vinfast vf7 electric suv car customisation

மேலும், விஎஃப்7 எலெக்ட்ரிக் காருக்கு வின்ஃபாஸ்ட் நிறுவனம் வழங்கும் 10 ஆண்டுகள் வாரண்டி, 3 ஆண்டுகள் இலவசப் பராமரிப்பு மற்றும் 2 ஆண்டுகள் இலவச சார்ஜிங் போன்ற சலுகைகளையும் குறிப்பிடப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட இந்த கார், முழு உட்புற லேமினேஷன் பணிகளுக்காக டெலிவிரி செய்யப்பட்டதும் உடனடியாக, படங்களில் காணும் இந்த குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

லேமினேஷன் பணியைச் சரியாகச் செய்ய, காரின் முன் இருக்கைகள் முதலில் அகற்றப்பட்டன. இன்றைய கால புதிய கார் உரிமையாளர்கள் பலர், தங்கள் வாகனங்களுக்கு சின்தெட்டிக் லெதர் (Synthetic Leather) லேமினேஷனைத் தேர்வு செய்கிறார்கள். இது தோல் போன்ற, நீர் புகாத ஒரு பொருள் ஆகும்.

vinfast vf7 electric suv car customisation

இது வின்ஃபாஸ்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட கார்ப்பெட்டை மூடி, நீரில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், காரின் உட்புறத்தை எளிதில் சுத்தம் செய்ய உதவுகிறது மற்றும் காரின் தோற்றத்திற்கு ஒரு பிரீமியம் அழகைத் தருகிறது. ஏற்கனவே கூறியதுபோல், வின்ஃபாஸ்ட் நிறுவனம் விஎஃப்6 மற்றும் விஎஃப்7 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களின் டெலிவரிகளை மிக சமீபத்தில்தான் இந்தியாவில் தொடங்கியது.

இது பொதுவெளியில் பெரிய அளவில் அறிவிக்கப்படாவிட்டாலும், அக்டோபர் 14 அன்று இந்த எஸ்யூவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு டெலிவிரிகள் துவங்கப்பட்டன. விஎஃப்6 காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.16.49 லட்சம் ஆகவும், விஎஃப்7 காரின் ஆரம்ப விலை ரூ.20.89 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

vinfast vf7 electric suv car customisation

வின்ஃபாஸ்ட் விஎஃப்7 ஆனது பிராண்டின் பெரிய மற்றும் பிரீமியம் தரத்திலான எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மாடலாகும். இது தனித்துவமான மற்றும் பிரீமியம் தோற்றமளிக்கும் முன்புறத்தில், V வடிவ LED DRL-கள் மற்றும் LED புரொஜெக்டர் ஹெட்லைட்களுடன் வருகிறது. பக்கவாட்டில் 19 அங்குல அலாய் வீல்களும், பின்புறத்தில் V வடிவத்தில், கிட்டத்தட்ட ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லைட்டும் வழங்கப்படுகின்றன.

விஎஃப்7 காரின் உட்புறத்தில் ஏராளமான அம்சங்கள் நிரம்பியுள்ளன. இதில் வீகன் லெதர் இருக்கைகள், பெரிய நிலையான கண்ணாடி மேற்கூரை, 12.9 அங்குல தொடுதிரை, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள் ஆகியவை அடங்கும். இது ஓட்டுநரை மையமாகக் கொண்ட சென்டர் கன்சோல், ஹெட்-அப் டிஸ்ப்ளே (HUD) மற்றும் லெவல் 2 மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பு (ADAS) தொகுப்பு ஆகியவற்றுடன் வருகிறது.

vinfast vf7 electric suv car customisation

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் விஎஃப்7 காரின் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் 2-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் வேரியண்ட்கள் உள்ளன. குறைந்த விலையுள்ள எர்த் வேரியண்ட்டில் 175 bhp மற்றும் 250 Nm டார்க் கொண்ட மோட்டார் மற்றும் 52.6 kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இவை விஎஃப்6 கார் உடன் பகிரப்படுகின்றன. விஎஃப்7 காரின் விண்ட் வேரியண்ட்டில் 201 bhp மற்றும் 310 Nm டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடிய எலக்ட்ரிக் மோட்டார், பெரிய 70.8 kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. 0-100 kmph வேகத்தை 9.5 வினாடிகளில் அடையும் திறனுடன் இந்த எலெக்ட்ரிக் கார் வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விஎஃப்7 எலெக்ட்ரிக் கார்கள் இவை இல்லாமல், ஸ்கை என்கிற விலையுயர்ந்த வேரியண்ட்டிலும் விற்பனை செய்யப்படுகிறது. வியட்நாம் நாட்டில் மிக பிரம்மாண்டமான நிறுவனமாக விளங்கும் வின்ஃபாஸ்ட் இந்திய சந்தையில் தனக்கான ஒரு இடத்தையும், வாடிக்கையாளர் நம்பிக்கையையும் பெற, இந்த எஸ்யூவி கார்களுக்கு மிகவும் போட்டித்தன்மையுடன் விலை நிர்ணயம் செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 16, 2025, 11:39 [IST]
English summary
Vinfast vf7 electric suv car modified on very first day of delivery check all details here
மேலும்... #car customisation #car customize #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X