450 கி.மீ ரேஞ்ச்! கம்மி விலையில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார் வந்தாச்சு!

வின்ஃபாஸ்ட் நிறுவனம் இன்று தனது விஎஃப் 6 மற்றும் விஎஃப் 7 ஆகிய இண்டு வாகனங்களை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் தூத்துக்குடியில் ஆலை அமைத்து தனது முதல் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்கள் இந்திய மார்கெட்டில் பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் வின்ஃபாஸ்ட். இந்நிறுவனம் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் தன் கார் தயாரிப்பு ஆலையை அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்திய மார்கெட்டில் முதல் முறையாக காரை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி இன்று இந்நிறுவனம் தனது விஎஃப் 6 மற்றும் விஎஃப் 7 ஆகிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்கள் எல்லாம் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நடந்த பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

Vinfast VF7 Launch

இந்த கார்களுக்கான புக்கிங் ஏற்கவனே துவங்கிவிட்டன. ஆன்லைன் மூலமாகவும் வின்ஃபாஸ்ட் டீலர்ஷிப் மூலமாகவும் இந்த கார்களை புக்கிங் செய்ய துவங்கினர். இந்த கார்களின் டெலிவரி அறிமுகபடுத்தப்பட்டவுடன் துவங்கும் என்ற எதிர்பார்ப்பிற்கிடையில் இன்று இந்த கார்கள் அறிமுகமாகியுள்ளது.

இந்நிறுவனம் ஏற்கனவே டீலர்ஷிப்களை வழங்கும் பணிகளை முடித்துவிட்டது. இந்நிறுவனம் 13 டீலர் ஷிப் குழுக்களிடம் 27 நகரங்களில் 32 மையங்களை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த 2025ம் ஆண்டிற்குள் இது 35 ஆக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய இவி விற்பனையில் முக்கியமான நிறுவனமாகி வருகிறது. தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் இந்நிறுவனம் தனது ஷோரூம்களை திறக்கின்றன. இங்கு நாம இன்று அறிமுகமாக விஎஃப் 7 காரை பற்றி தான் காணப்போகிறோம்.

Vinfast VF7 Launch

வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் விஎஃப் 7 காரை பொருத்தவரை மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ, டாடா ஹாரியர் இவி ஆகியகார்களுக்கு போட்டியாக களம் இரகு்கிறது. இந்த கார் 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் 70.8 kWh பேட்டரி பேக் உடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

விஎஃப் 7 காரை பொருத்தவரை மொத்தம் 5 விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன்படி கடந்த எர்த், விண்ட், விண்ட் இன்ஃபினிட்டி, ஸ்கை, ஸ்கை இன்ஃபினிட்டி, ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதிில் எர்த் வேரயன்டில் 59.6 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இன் உட்புறம் கருப்பு நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. முன்பக்க வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே உள்ளது.

Vinfast VF7 Launch

விஎஃப் 7 விண்ட், விஎஃப் விண்ட் இன்ஃபினிட்டி, விஎஃப் ஸ்கை, விஎஃப் ஸ்கை இன்ஃபினிட்டி ஆகிய வேரியன்ட்களில் 70.8kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறம் எல்லாம் மேக்கோ பிரெளன் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்கை மற்றும் ஸ்கை இன்ஃபினிட்டி ஆகிய வேரியன்ட்கள் மட்டும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனில் உள்ளன.

2 வில் டிரைவ் செட்டப்பில் முன்பக்க உள்ள மோட்டார்கள் 204 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் என்றால் 350 எச்பி பவரையும் 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விஎஃப்7 கார் ஒரு முறை சார் போட்டால் முன்பக்க வீல் டிரைவ் காரில் 450 கி.மீ தூரமும், ஆல் வீல் டிரைவ்காரில் 431 கி.மீ தூரமும் பயணிக்க முடியும்.

இந்த காரின் வடிவமைப்பை பொரத்தவரை ஷார்க் ஃபின் ஆண்டனா, ஸ்பிலிட் எல்இடி ஹெட்லைட்டுகள், பின்பக்கம் முழு நீள எல்இடி லைட் பார், ரூஃப் ஸ்பாயிலர்கள், கூடுதல் ஹைலைட்டுகளாக ஃபிளாஷ் டோர் ஹேண்டில்கள், 19 இன்ச் அலாய் வீல்கள், உள்ள மொத்தம் 6 விதமான கலர் ஆப்ஷன்கள் உள்ளது. இ்நத காரில் ஜெட் பிளாக், டிசாட் சில்வர், இன்ஃபினிட்டி பிளாக், கிரிம்சன் ரெட், ஸெனித் கிரே, அர்பன் மிண்ட் ஆகிய கலர் ஆப்ஷன்கள் உள்ளன.

அம்சங்களை பொருத்தவரை இந்த காரின் உள்ள 185 இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்பிளே சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது போக ஹெட்ஸ் அப் டிஸ்பிளே ஆடிஏ அப்டேட்கள், 8 வழிகளில் டிரைவ் சீட்டை பவர் மூலம் அட்ஜெஸ்ட் செய்யும் ஆப்ஷன், வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்டுகள். டுயல் ஸோன் ஏசி, லெவல் 2 அடாஸ், பானரோமிக் சன் ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

இந்த காரின் விலையை பொருத்தவரை வரை விஎஃப் 7 எர்த் கார் ரூ20.89 லட்சம் என்ற விலையிலும், விஎஃப் 7 விண்ட் வேரியன்ட் ரூ23.49 லட்சம் என்ற விலையிலும், விஎஃப் 7 விண்ட் இன்ஃபினிட்டி ரூ23.99 லட்சம் என்ற விலையிலும், விஎஃப் 7 ஸ்கை ரூ24.99 லட்சம் என்ற விலையிலும், விஎஃப் 7 ஸ்கை இன்ஃபினிட்டி ரூ25.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக அறிமுகுமாகியுள்ளது. இந்த கார்களை வெறும் ரூ21,000 முன்பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வின்ஃபாஸ்ட் நிறுவனம் விஎஃப் 7 காரை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தி பெரிய இவி கார் செக்மெண்டில் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்திராவின் எக்ஸ்இவி 9இ காருக்கு நல்ல விற்பனை இருக்கும் நிலையில் அதற்கு போட்டியாக இந்த கார் விற்பனையாகி நல்ல வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 6, 2025, 13:45 [IST]
English summary
Vinfast vf7 launch india price starts at 20 89 lakh
மேலும்... #VinFast #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X