தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் காருல இத்தனை வேரியன்ட் இருக்குதா? அடுத்த மாசமே வருதா?
வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 எஸ்யூவி காரின் வேரியன்ட் மற்றும் கலர் ஆப்ஷன்கள் குறித்த விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில் இதன் அறிமுகம் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. இந்த கார் வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தூத்துக்குடியில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யப்போகும் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் வின்ஃபாஸ்ட்.இந்நிறுவனம் விஎஃப் 6 மற்றும் விஎஃப்7 ஆகிய கார்களை தற்போது இந்திய மார்கெட்டில் களம் இறக்கியுள்ளது. இந்த கார்களுக்கான புக்கிங்கை ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இந்த காருக்கான புக்கிங்கை ரூ21,000 முன்பணம் செலுத்தி செய்து கொள்ள முடியும்.

இந்நிலையில் இதில் விஎஃப்7 காரின் வேரியன்ட் மற்றும் கலர் ஆப்ஷன்கள் உள்ளிட்ட முக்கிய விபரங்களை வாடிக்கையாளர்களுக்காக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கான வேரியன்ட் மற்றும் கலரை தேர்வு செய்ய முடியும் என்பதால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கார் எர்த், விண்ட், ஸ்கை ஆகிய மூன்று விதமான வேரியன்ட்களில் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இதில் ஒவ்வொரு வேரியன்டிலும், அம்சங்கள் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் மாறுபடும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கான தேவையை உணர்ந்து அதற்கான வாகனங்களை தேர்வு செய்து கொள்ள முடியும். இந்த கார் மொத்தம் 6 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி ஜெட்பிளாக், டிசாட் சில்வர், இன்ஃபினிட்டி பிளாக், கிரிம்சன் ரெட், ஜெனித் க்ரே, அர்பன் மின்ட் ஆகிய கலர் ஆப்ஷன்கள் உள்ளன.

இந்த காரின் வடிவமைப்பு முன்பக்கம் நடுவில் V வடிவ லோகோ இடம் பெற்றுள்ளது. அதன்பக்க வாட்டில் எல்இடி டிஆர்எல் வழங்கப்பட்டடுள்ளன. இந்த கார் கூபே வடிவமைப்பை கொண்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் போது ரோடு பிரெஸென்ஸ் சிறப்பாக இருக்கிறது. இதனால் போட்டி நிறுவன தயாரிப்புகளை தாண்டி வாடிக்கையாளர்களை இதன் பக்கம் ஈர்க்கும் வகையில் இதன் வடிவமைப்பு இருக்கிறது.
இந்த காரின் உட்புறத்தில் பிரிமியம் அம்சம் மற்றும் தொழிற்நுட்ப விஷயங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் டேஷ் போர்டு 15 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே, ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, டிரைவ் மோடிற்கான ஃபிஸிக்கல் பட்டன், டுயல் டோன் இன்டீரியர் தீம் கருப்பு நிறத்துடன் மோக்கா பிரெளன் நிறத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போக சொகுசான அதிக இடவசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் விஎஃப்7 கார் அட்வான்ஸ்டு அம்சங்களுடன் பானரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜிங், 360 டிகரி கேமரா சிஸ்டம், 8 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், அடாஸ் தொழிற்நுட்பம் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் டிப்பார்ச்சனர் வார்னிங், பிளைட் ஸ்பாட் மானிட்டரிங் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனையாகும் மஹிந்திரா எக்ஸ்யூவி9இ மற்றும் பிஒய்டி அட்டோ 3 உள்ளிட்ட பல்வேறு கார்களுக்கு போட்டியாக இந்த கார் களம் இறங்குகிறது. இந்த கார் தமிழகத்தில் தயாரிக்கப்படும் நிலையில் இந்தியா முழுவதும் இந்த வருகைக்காக பலர் காத்திருக்கிறார்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









