இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிட்டா, அப்புறம் வாங்குறது ரொம்ப கஷ்டம்! ஃபோக்ஸ்வேகனிடம் இருந்து இதை எதிர்பார்க்கல!

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான கார்கள் டைகுன் (Taigun) மற்றும் விர்டுஸ் (Virtus) ஆகும். ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆனது எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். அதுவே, விர்டுஸ் ஆனது தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் (Sedan) ரக கார் ஆகும். இந்த இரு கார்களுக்கு தான் தற்போது அதிரடியாக ரூ.2.70 லட்சம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு கொண்டுவரப்பட்டு இருந்தாலும், குறுகிய காலத்திற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கார்கள் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றாலும், அல்லது குறுகிய காலத்தில் கார்கள் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்றாலும் கார் கம்பெனிகள் கையில் எடுக்கும் யுக்தி, சலுகைகள் & தள்ளுபடிகள் ஆகும். வழக்கமான விலையை காட்டிலும் குறைந்த விலையில் கார் கிடைக்கிறது என்றால் யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள்?

volkswagen limited-time offers

அந்த நம்பிக்கையில்தான், இந்தியாவில் கார்கள் விற்பனையில் சுமாரான நிலையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் புதிய சலுகைகளை அறிவித்து, இந்த ஜூன் மாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளது. ஆனால், இந்த முறை இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்தும் ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்படவில்லை. டைகுன் மற்றும் விர்டுஸ் கார்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சலுகைகளில் பணம் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் (Exchange Bonuses) மற்றும் ஸ்க்ராபேஜ் (Scrappage) மானியம் உள்ளிட்டவை அடங்குகின்றன. ஏற்கனவே கூறியதுபோல், அதிகப்பட்சமாக ரூ.2.70 லட்சம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரூ.2.70 லட்சம் சலுகை ஆனது ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டான ஜிடி பிளஸ் க்ரோம் வேரியண்ட்டை 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜினை டி.எஸ்.ஜி (DSG) கியர்பாக்ஸ் உடன் வாங்க வேண்டும்.

volkswagen limited-time offers

இந்த ஆப்ஷன்களில் டைகுன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.24.26 லட்சமாக இருந்த நிலையில், அது தற்போது ரூ.2.70 லட்சம் குறைக்கப்பட்டு ரூ.21.56 லட்சமாக மாறியுள்ளது. இதே 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் உடன் டைகுன் காரின் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் வேரியண்ட்டை வாங்குபவர்கள் ரூ.1.85 லட்சம் வரையிலான பணம் தள்ளுபடியை பெறலாம்.

டைகுன் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு எந்த சலுகை அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை. இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமின்றி, டைகுன் காரை 1 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் ஃபோக்ஸ்வேகன் விற்பனை செய்கிறது.

1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை டைகுன் காரின் டாப்லைன் வேரியண்ட்டில் வாங்குபவர்கள் ரூ.2.20 லட்சம் வரையிலும், ஹைலைன் வேரியண்ட்டில் வாங்குபவர்கள் ரூ.1.40 லட்சம் வரையிலும் விலை தள்ளுபடியை பெறலாம். இந்த 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும் டைகுன் காரின் விலை குறைவான கம்ஃபர்ட்லைன் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.79 லட்சமாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.10.99 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

volkswagen limited-time offers

இதேபோல், விர்டுஸ் செடான் காரில் அதிகப்பட்சமாக ரூ.2.20 லட்சம் வரையிலான பணம் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணம் தள்ளுபடியை பெற நீங்கள் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் விர்டுஸ் காரின் விலைமிக்க டாப்லைன் வேரியண்ட்டை பெற வேண்டும். இதேபோல், விர்டுஸ் காரின் மற்ற வேரியண்ட்களுக்கு ரூ.1 லட்சம் பணம் தள்ளுபடியில் இருந்து ரூ.2.15 லட்சம் வரையிலான பணம் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் விர்டுஸ் என இரு கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.20,000 ஸ்க்ராபேஜ் போனஸ் கிடைக்கும். அதாவது, பழைய காரை முறையாக தகுந்த ஸ்க்ராபேஜ் மையத்தில் அழித்து அதற்கான சான்றிதழை வாங்கி வந்தால் ரூ.20,000 பணம் தள்ளுபடி கிடைக்கும். டைகுன் மற்றும் விர்டுஸ் கார்களின் வேரியண்ட்களின் விலைகளை பொறுத்து ஃபோக்ஸ்வேகன் சலுகைகளை அறிவித்துள்ளது. இது இந்த கார்களின் விற்பனையை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 5, 2025, 15:19 [IST]
English summary
Volkswagen annouced limited time offers for taigun and virtus cars
மேலும்... #volkswagen #taigun #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X