ஸ்டாக்கை க்ளீயர் பண்ணி ஆகனும்... காருக்கு 2.5 லட்ச ரூபாய் வரை சலுகை எல்லாம் ரொம்பவே ஓவரு!

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இதனை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக அவ்வப்போது சலுகைகளையும் தள்ளுபடிகளையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவிக்கிறது. குறிப்பாக, மார்ச் மாதத்தில் நிதியாண்டு நிறைவடையும்போது முடிந்தவரையில் கார்களை அதிகம் விற்று தீர்க்க சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், தற்போதும் ஃபோக்ஸ்வேகன் கார்கள் சிலவற்றிற்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

ஜெர்மனியில் இருந்து பல்வேறு கார் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் ஒரு கார் நிறுவனம் தான் ஃபோக்ஸ்வேகன் ஆகும். இந்தியாவிலும் நீண்ட வருட வரலாற்றை கொண்டுள்ளது. இருப்பினும், நம் நாட்டு சந்தையில் ஃபோக்ஸ்வேகனின் மார்க்கெட் நிலையானதாக இல்லாததால், அவ்வப்போது புது, புது கார்களை அறிமுகம் செய்வதுடன், கார்களுக்கான சலுகைகளை அவ்வப்போது அறிவித்த வண்ணம் உள்ளது.

volkswagen announced special discounts

அந்த வகையில், தற்போது விர்டுஸ் (Virtus) மற்றும் டைகுன் (Taigun) கார்களுக்கு சுமார் ரூ.2.5 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச் 31ஆம் தேதியோடு நிறைவடைய உள்ள 2024-25 நிதியாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்து, ஸ்டாக்கை க்ளீயர் செய்யும் விதமாக இந்த நடவடிக்கையை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

இதில், விர்டுஸ் காரை பொறுத்தவரையில் இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஃபோக்ஸ்வேகன் காராக விளங்குகிறது. இதனாலேயே இதன் விற்பனையை மேலும் அதிகரிக்கும் பொருட்டு, கஸ்டமர்களை கவர விர்டுஸ் காருக்கு ரூ.1.90 லட்சம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஃபோக்ஸ்வேகனின் மிட்-சைஸ் செடான் ரக காரான விர்டுஸுக்கு வேரியண்ட்டை பொறுத்து சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

volkswagen announced special discounts

அதிகப்பட்சமான ரூ.1.90 லட்சம் பணம் தள்ளுபடி ஆனது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் விர்டுஸ் காரின் க்ரோம் ஹைலைன் வேரியண்ட்டை வாங்குபவர்களுக்கு ஆகும். அதேநேரம், இதே 1.0 லிட்டர் என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் விர்டுஸ் காரின் டாப்லைன் வேரியண்ட்டை வாங்குபவர்களுக்கு ரூ.1.87 லட்சம் பணம் தள்ளுபடியும், ஜிடி லைன் வேரியண்ட்டை வாங்குபவர்களுக்கு ரூ.83,000 பணம் தள்ளுபடியும் கிடைக்கும்.

விர்டுஸ் கார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த என்ஜின் மற்றும் டைரக்ட்-ஷிஃப்ட் கியர்பாக்ஸ் உடன் விர்டுஸின் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் வேரியண்ட்டை வாங்குபவர்களுக்கு ரூ.1.35 லட்சம் பணம் தள்ளுபடியும், ஜிடி பிளஸ் க்ரோம் வேரியண்ட்டை வாங்குபவர்களுக்கு ரூ.1.29 லட்சம் பணம் தள்ளுபடியும் கிடைக்கும்.

volkswagen announced special discounts

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரை பொறுத்தவரையில், இந்த காரிலும் விர்டுஸில் வழங்கப்படும் அதே என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் தான் வழங்கப்படுகின்றன. ரூ.2.5 லட்சம் பணம் தள்ளுபடியை பெற 1.0 லிட்டர் என்ஜினை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் டைகுன் காரின் ஹைலைன் வேரியண்ட்டை வாங்க வேண்டும்.

இதே என்ஜின் & கியர்பாக்ஸ் உடன் டைகுனின் ஜிடி லைன் வேரியண்ட்டை வாங்குபவர்கள் ரூ.1.45 லட்சம் பணம் தள்ளுபடியையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு பதிலாக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் டாப்லைன் வேரியண்ட்டை வாங்குபவர்கள் ரூ.2.36 லட்சம் பணம் தள்ளுபடியையும் பெறலாம். அதேநேரம், 1.5 லிட்டர் என்ஜின் மற்றும் டைரக்ட்-ஷிஃப்ட் கியர்பாக்ஸ் உடன் டைகுன் காரின் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் வேரியண்ட்டை வாங்கினால் ரூ.2 லட்சம் பணம் தள்ளுபடியையும், ஜிடி பிளஸ் க்ரோம் வேரியண்ட்டை வாங்கினால் ரூ.2.39 லட்சம் பணம் தள்ளுபடியையும் பெறலாம்.

volkswagen announced special discounts

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பணம் தள்ளுபடிகள் மட்டுமின்றி, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் டைகுன் கார்களை வாங்குபவர்கள் 4 வருடத்திற்கான ஸ்டாண்டர்ட் வாரண்டியை பெறலாம். மேலும், ஃபோக்ஸ்வேகன் போலோ காரை பயன்படுத்தி வருபவர்கள் எக்ஸ்சேஞ்ச் முறையில் இந்த ஃபோக்ஸ்வேகன் கார்களுள் ஒன்றை வாங்கினால் கூடுதலாக ரூ.50,000 ஸ்பெஷல் லாயலிட்டி போனஸை பெறலாம். இந்த சலுகைகள் எத்தனை நாட்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்த விபரங்களை ஃபோக்ஸ்வேகன் வெளியிடவில்லை.

More from DriveSpark

Article Published On: Sunday, March 30, 2025, 21:39 [IST]
English summary
Volkswagen announced special discounts for virtus and taigun cars
மேலும்... #volkswagen #discount offer #taigun #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X