டாடாபோல கம்மி விலை மின்சார காரை தயாரிக்கும் பணியில் பிரபல நிறுவனம்.. இப்பவே கஸ்டமர்கள வளச்சு போட்டுட்டாங்க!

டாடா மோட்டார்ஸ்க்கு வரும் நாட்களில் மேலும் தலைவலி அதிகரிப்பதற்கான சூழல் உருவாகி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த நிறுவனத்தை போலவே மிகவும் விலை குறைவான கார்களை தயாரிக்கும் பணியில் ஓர் நிறுவனம் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் அந்த நிறுவனம் தன்னுடைய மிக மிக கம்மி விலையில் விற்பனைக்கு வர இருக்கும் அந் கார் மாடலின் டீசரை தற்போது வெளியிட்டு இருக்கின்றது. பிரபல பிரீமியம் கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன்-னே அந்த நிறுவனம் ஆகும்.

இது உலக சந்தைக்காக மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடலை தயார் செய்து வருவதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே அந்த மலிவு விலை எலெக்ட்ரிக் காரின் டீசரை வெளியிட்டு இருக்கின்றது, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்.

Volkswagen working on new entry-level ev

விரைவில் இதனை கான்செப்ட் மாடலாக நிறுவனம் வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தற்போது டீசர் படத்தை ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டு உள்ளது. அடுத்த ஒரு சில மாதங்களில் இந்த காரை உலக அளவில் அது விற்பனைக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டு இருக்கின்றது.

அவ்வாறு அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதுபற்றிய துள்ளியமான விபரங்கள் வெளியாகவில்லை. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி இந்த 2026 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த இ-காரை விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

ஆனால், இந்த காருக்கு இன்னும் பெயர்கூட வைக்கப்படவில்லை. இருப்பினும் ஐடி.1 (ID.1) அல்லது ஐடி.ஒன் (ID.One) என்கிற பெயரில் ஃபோக்ஸ்வேகனின் இந்த விலை குறைவான மின்சார கார் உலக சந்தையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இது இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் டாடா மோட்டார்ஸ்க்கு மட்டுமல்ல எம்ஜி மோட்டார்-க்கும் மிகப் பெரிய போட்டியான சூழலை உருவாக்கும்.

உலக சந்தையில் ரூ. 18 லட்சம் என்கிற விலையிலும், இந்திய சந்தையில் இதைவிட சற்று குறைவான விலையிலும் அது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த கார் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இப்போதைக்கு இந்த மலிவு விலை எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட்டை அறிமுகப்படுத்துவதற்கான பணியிலேயே நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

இதன் மார்ச் வெளியீட்டின்போதே பல்வேறு முக்கிய விபரங்கள் வெளியிடப்படும் என நம்பப்படுகின்றது. குறிப்பாக, காரின் ரேஞ்ச் திறன், சிறப்பம்சங்கள் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் பற்றிய விபரங்களை அது அறிவிக்க இருக்கின்றது. இருப்பினும், இப்போதே இந்த கார் உலக மின்சார கார் காதலர்களின் கவனத்தைக் கவர தொடங்கிவிட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதலில் இந்த காரை ஐரோப்பிய சந்தையிலேயே ஃபோக்ஸ்வேகன் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. ஆகையால், இப்போதைக்கு டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி ஆகிய நிறுவனங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம். அதேவேளையில், இந்தியாவில் களமிறங்க வின்ஃபாஸ்ட் போன்ற நிறுவனங்கள் மிகப் பெரிய ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆகையால், சீக்கிரமே இந்தியாவின் மின்சார கார் மார்க்கெட் விரைவில் சூடுபிடித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, February 7, 2025, 14:01 [IST]
English summary
Volkswagen entry level ev id 1 teaser revealed more details
மேலும்... #volkswagen #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+