ரூ2.1 லட்சம் கம்மி ரேட்ல இந்த காரை வாங்கலாம்! விநாயகர் சதுர்த்திக்கு செம ஆஃபர் போட்டாங்க!

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி நெருங்கும் நிலையில் இதை கொண்டாடும் விதமாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது இரண்டு கார்களுக்கு ரூ2.10 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடட்டத்திற்காக இந்த தள்ளுபடிகள் அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் பண்டிகை காலங்களில் மக்கள் அதிகமாக கார் வாங்குவார்கள். நல்ல நாளில் வாகனம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவார்கள். இந்த நாளில் தங்கள் வாகனங்களில் விற்பனையை அதிகரிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றனர். அதன்படி ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் தனது வாகனங்களுக்கான தள்ளுபடியை அறிவித்துள்ளது.

Volkswagen Ganesh Chaturthi Offer

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது விர்டுஸ் காருக்கு ரூ1.75 லட்சம் தள்ளுபடியும், டைகுன் காருக்க ரூ2.10 லட்சம் தள்ளுபடியையும் அறிவித்துள்ளது. இந்த கார்கள் அந்நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகி வரும் கார்களாக உள்ளன. இந்நிலையில் இதற்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. அதன் விற்பனையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை பொருத்தவரை இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. அதன்படி 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது 113 பிஎச்பி பவரையும, 178 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Volkswagen Ganesh Chaturthi Offer

அடுத்த இன்ஜின் ஆப்ஷனாக 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 7
ஸ்பீடு டிஎஸ்ஜி 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறவனத்தின் விர்டுஸ் கார் மார்கெட்டில் விற்பனையாகி வரும் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய கார்ளுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இதுவே ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரை பொருத்தவரை ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காருக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.

Volkswagen Ganesh Chaturthi Offer

இந்நிறுவனம் விரைவில் இந்திய மார்கெட்டில் ஃபோக்ஸ்வேகன் டைருன் என்ற காரை விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்த காரை தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. இது 3 வரிசை சீட்டர் கொண்ட எஸ்யூவி காராக களம் இறங்குகிறது. இந்த காரில் 2. 0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த இன்ஜின் ஸ்கோடா குஷாக்,ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் காருக்கு போட்டியாக களம் இறங்குகிறது. இந்த கார் 200 பிஎச்பி பவரையும் 320 என் எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.
எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த கார் குடும்பத்துடன் பயணிக்க ஏற்றதாக இருக்கும். இதனால் மக்கள் பலர் இந்த காரை வாங்க அதிக வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மக்கள் மத்தியில் இந்த ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மதிப்பு இருக்கிறது.இந்நிறுவனத்தின் கார்களை வாங்க மக்கள் பலர் ஆர்வமாக இருக்கும் நிலையில் இந்த தள்ளுபடியால் விற்பனை மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 16, 2025, 11:45 [IST]
English summary
Volkswagen ganesh chaturthi offer benefits on virtus taigun
மேலும்... #volkswagen #india #ganesh chaturthi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X