புதுசா கார் வாங்கப்போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க 2 சூப்பரான கார் வருது!

ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. கோல்ஃப் ஜிடிஐ மற்றும் டிகுவான் ஆர்-லைன் ஆகிய கார்கள் அறிமுகமாக தயாராகி வருகிறது. ஜெர்மன் கார் உற்பத்தியாளர்கள் தனது இந்திய வெப்சைட்டில் இந்த மாடல்களை ஏற்கனவே பட்டியலிட்டுள்ளது. டிகுவான் ஆர்-லைன் ஏப்ரல் 14 அன்று வெளியிடப்பட உள்ளது, கோல்ஃப் ஜிடிஐ வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு மாடலும் என்ன என்ன அம்சங்களை கொண்டுள்ளன என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

8வது தலைமுறை ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ அதன் சர்வதேச மாடலை தழுவிய ஸ்போர்ட்டியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது தனித்துவமான அலாய் வீல்கள், முன் பக்கத்தில் கருப்பு எலெமென்ட்கள் மற்றும் சிறப்பான அவுட்லுக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஜிடிஐ பேட்ஜ் முன் கதவுகளில் பதிக்கப்பட்டுள்ளது, அதன் இயக்கவியல் தோற்றத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

Volkswagen Golf GTI Tiguan R-Line

ஹூட்டின் கீழ், கோல்ஃப் ஜிடிஐ 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 261 எச்பி பவர் மற்றும் 370 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்கிறது. இந்த இன்ஜின் ஒரு 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது முன்வீல் டிரைவ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் வெறும் 5.9 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ/மணி வேகத்தை பிக்கப் செய்கிறது மற்றும் 250 கிமீ/மணி டாப் ஸ்பீடில் பயணிக்கிறது.

ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆர்-லைன் சாதாரண டிகுவான் காரை ஸ்போர்ட்டி லுக்காக மாற்றிய வெர்ஷனாக வருகிறது. இது மறுவடிவமைக்கப்பட்ட முன் மற்றும் பின் வடிவமைப்பு உள்ளது. ஒரு பின்புற ஸ்பாய்லர் மற்றும் அதன் ஸ்போ்ரட்டியான ஈர்ப்பை மேம்படுத்தும் பக்கவாட்டு பேனல்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு எல்இடி ஸ்ட்ரிப் மூலம் இணைக்கப்பட்ட புதிய ஹெட்லைட் மற்றும் பெரிய 19 இன்ச் அலாய் வீல்கள் அதன் தோற்றத்தை மேலும் மேம்படுத்துகின்றன.

Volkswagen Golf GTI Tiguan R-Line

எம்க்யூபி. இவோ தளத்தில் கட்டப்பட்ட கார் இந்த இந்திய வெர்ஷன் டிகுவான் ஆர்-லைன் காரையும் வடிவமைக்கிறது. இந்த காரின் இன்ஜின் 265 எச்பி வழங்கும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது ஒரு ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த எடிசன் அதன் முந்தைய மாடலை விட 30 மிமீ நீளமானது, இருப்பினும் வீல் பேஸ் மாறாமல் மாறாமல் உள்ளது.

Volkswagen Golf GTI Tiguan R-Line

இந்த இரண்டு மாடல்களும் இந்திய சாலைகளுக்கு செயல்திறன் சார்ந்த டிரைவிங் அனுபவங்களை வழங்கும் என்று உறுதியளிக்கின்றன. அவற்றின் சக்திவாய்ந்த இன்ஜின்கள் மற்றும் ஸ்போர்ட்டியான வடிவமைப்புகளுடன், அவை வீல்களில் ஃபன்னான அனுபவத்தை தேடுபவர்களை ஈர்க்கும். அவற்றின் வருகைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதால், ஃபோக்ஸ்வேகன் இந்த கார்களுடன் இந்திய மோட்டார் வாகன சந்தையில் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறது.

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு என தனி பெயர் இருக்கிறது. இந்நிறுவனத்திற்கு ஒர குறிப்பிட்ட ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இதனால் இந்நிறுவனம் தொடர்ந்து ஒரளவிற்கு விற்பனையை பெற்று வருகிறது. விரைவில் இந்த வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த இரண்டு கார்களையும் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவில் இறக்குமதி செய்ய விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த கார்களின் விலை சற்று அதிகமாக தான் இருக்கும். அதனால் விற்பனை குறைவாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 21, 2025, 10:20 [IST]
English summary
Volkswagen prepares to introduce the Golf GTI and Tiguan R-Line in India. With sporty designs and powerful engines, these models promise an exhilarating driving experience.
மேலும்... #volkswagen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X