சீட்டில் இருந்து எந்திரிக்கவே மனசு வரல... மணிக்கு 250கிமீ வேகத்தில் செல்ல கூடிய கார் என்றால் சும்மாவா!!
ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக இந்தியாவில் கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பவர்ஃபுல்லான ஹேட்ச்பேக் காராக கோல்க் ஜிடிஐ பல வெளிநாடுகளில் விற்பனையில் உள்ளது. இந்த காரை நீண்ட வருட ஆலோசனைகளுக்கு பிறகு இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் களமிறக்குகிறது. அறிவிக்கப்படி, இன்று (மே 26) இந்தியாவில் கோல்ஃப் ஜிடிஐ கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக கோல்ஃப் ஜிடிஐ இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
இதற்கு முன்னதாக, இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவுக்கு கிடைத்தது. நாங்கள் கோல்ஃப் ஜிடிஐ காரை மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேஸ் டிராக் (Race Track) ஒன்றில் ஓட்டி பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைக்க பெற்ற அனுபவங்களை விரிவான ரிவியூவாக கீழேயுள்ள வீடியோவில் வழங்கி உள்ளோம்.
ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஆனது வெளிநாடுகள் பலவற்றில் பிரபலமாக விளங்கும் கார் ஆகும். ஆனால், இந்தியாவில் கோல்ஃப் கார் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். கொஞ்சம் பிரம்மாண்டமான உடலமைப்புடன், பார்ப்பதற்கே கவர்ச்சிக்கரமான தோற்றம் கொண்ட கோல்ஃப் காரை வாங்குவதற்கு இந்தியாவில் நிறைய பேர் விரும்புவர் என எதிர்பார்க்கிறோம்.

ஏனெனில், கோல்ஃப் காரின் பவர்ஃபுல்லான ஜிடிஐ வெர்சனை இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் களமிறக்குகிறது. பவர்ஃபுல்லான கார் என்பதை வெளிக்காட்டும் வகையில், கோல்ஃப் ஜிடிஐ கார் ஆனது ரக்டான தோற்றத்தை கொண்டுள்ளது. மேலும், அதிகப்படியான என்ஜின் ஆற்றலை சமாளிக்கும் வகையில் இந்த காரில் சஸ்பென்ஷன் செட்-அப்பும் வலிமையானதாக வழங்கப்பட்டுள்ளது.
கோல்ஃப் ஜிடிஐ காரின் நீளம் 4,289மிமீ, அகலம் 1,789மிமீ மற்றும் உயரம் 1,456மிமீ ஆகும். இந்த காரில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தொலைவு 2,627மிமீ ஆக உள்ளது. 12 மீட்டர் வட்டத்திற்குள் முழுவதுமாக யு-டர்ன் அடிக்கக்கூடிய இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரில் தரையில் இருந்து காரின் அடிப்பகுதி ஆனது 134மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








