கவர்ச்சியான கார்... லைட்டுக்கு பக்கத்துல இருக்க அந்த 'ஆர்' எழுத்துக்கே பலர் அடிமையாக போறாங்க.. விலை எவ்ளோ?

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen), டிகுவான் ஆர் லைன் (Tiguan R-Line) கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. வழக்கமான டிகுவான் கார் மாடலைக் காட்டிலும் அதிகம் பிரீமியம் மற்றும் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டதாக இந்த டிகுவான் ஆர்-லைன் கார் மாடல் ஆகும். இதில் மட்டுமல்ல கவர்ச்சியான தோற்றத்தைத் தாங்கியிருப்பதிலும் மிக சிறந்த எஸ்யூவி (SUV) ரக காராக டிகுவான் ஆர் லைன் உள்ளது.

இந்த காருக்கு அறிமுக விலையாக ரூ. 49 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த அதிக விலைக்கு ஏற்ப மிகவும் ஒர்த்தான காராகவே டிகுவான் ஆர் லைன் உள்ளது. குறிப்பாக, இதன் கேபின் பணக்காரர்களின் மனதைக் கவரும் வகையில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

Volkswagen tiguan r line launched

இதன் அடிப்படையிலேயே 10.3 அங்குல டிரைவருக்கான திரை, 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை இந்த காரில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இதுமட்டுமல்ல, மூன்று ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதியையும் இந்த காரில் வழங்கி இருக்கின்றனர்.

மிக முக்கியமாக வழக்கமான டிகுவான் இடமிருந்து டிகுவான் ஆர் கார் மாடலை தனித்துவமானதாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக காரின் குறிப்பிட்ட இடங்களில் ஆர் எனும் பேட்ஜை வழங்கி இருக்கின்றனர். 3 ஸ்போக்குகளைக் கொண்ட ஸ்டியரிங் வீல், காரின் முன் பக்கம் மற்றும் இருக்கை உள்ளிட்டவற்றில் அதைக் காண முடியும்.

Volkswagen tiguan r line front look

இந்த அம்சங்களை மட்டுமல்ல பனோரமிக் சன்ரூஃப், 30 வண்ணங்களை உள்ளடக்கிய ஆம்பியன்ட் லைட் போன்ற அம்சங்களையும் இந்த காரில் ஃபோக்ஸ்வேகன் வழங்கி இருக்கின்றது. இதுமட்டுமல்ல மசாஜ் வசதிக் கொண்ட இருக்கைகள், இரண்டு செல்போன்களைச் சார்ஜ் செய்துக் கொள்ளும் விதமாக வயர்லெஸ் செல்போன் சார்ஜர், லெவல் 2 வகை அடாஸ் அம்சம் போன்றவற்றையும் இந்த காரில் வழங்கி இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதில் அடாஸ் அம்சத்தின் வாயிலாக பார்க் அசிஸ்ட் பிளஸ் வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும். இது காரை தானாகவே பார்க் செய்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜட் 4 சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Volkswagen tiguan r line engine

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 204 எச்பி மற்றும் 320 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது. 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷனே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 229 கிமீ ஆகும். குறிப்பாக, இதற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 7.1 செகண்டுகேளே போதுமானதாக உள்ளது.

இதை மட்டுமல்ல ஆல்-வீல் டிரைவ் வசதியையும் ஃபோக்ஸ்வேகன் வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இவ்வளவு சிறப்புகளைத் தாங்கியிருக்கும் ஃபோக்ஸ்வேகன் ஆர் லைன் கார் மாடலையே இப்போது இந்தியாவில் ஃபோக்ஸ்வேன் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஆனால், இந்த காரை அது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நாட்டில் விற்பனைச் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. எத்தனை யூனிட்டுகள் வரை விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது என்பது தெரியவில்லை.

Volkswagen tiguan r line rear view

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோக்ஸ்வேகன் கார் விரும்பிகளின் மனம் கவர்ந்த ஆடம்பர காராக டிகுவான் உள்ளது. இதன் மற்றுமொரு சூப்பரான வெர்ஷனான டிகுவான் ஆர்-லைன் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருப்பது கார் காதலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதற்கும் இந்திய பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 15, 2025, 9:46 [IST]
English summary
Volkswagen launches tiguan r line in india with advanced features and rs 49 lakh price tag
மேலும்... #volkswagen #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X