டாப் 10லயே இந்த கம்பெனி இல்லையா? ஒரு காலத்துல ராஜா மாதிரி இருந்த கம்பெனிக்கு இப்படி ஒரு நிலைமையா?
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் சிறிய அளவு விற்பனை சரிவை சந்தித்துள்ளது.இது மட்டுமல்ல இந்நிறுவனம் கடந்த செடம்பர் மாதம் அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது. இது இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய சரிவு தான். இந்த சரீவு குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 2780 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மொத்தம் 3394 வாகனங்களை விற்பவனை செய்திருந்தது. அதை ஒப்பிடும் போது தற்போது 18 சதவீதம் விற்பனை சரிவடைந்துள்ளது. இது மிகப்பெரிய விற்பனை சரிவாக பார்க்கப்படுகிறது. இதில் ஆறுதலா விஷயம் என்னவென்றால் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையை ஒப்பிடும் போது 2 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.

இது மட்டுமல்ல ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் அதிகம் வாகனங்களை விற்பனை செய்யும் டாப் 10 வாகன நிறுவன பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது. இந்நிறுவனம் கடந்த மாதம் 11 வது இடத்தை தான் பிடித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தன் டைகுன் மற்றும் விர்டுஸ் ஆகிய கார்களின் விற்பனை தான் சிறப்பாக இருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் விடுஸ் காரை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 1648 கார்கள் வறி்பனையாகியுள்ளது. அதேநேரம் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரை பொருத்தவரை கடந்த செப்டம்பர்மாதம் 1114 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டு விற்பனவையை ஒப்பிடும் போது 31 சதவீதம் விற்பனை குறைவாகும். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையை ஒப்பிடும் போது 11 சதவீதம் அதிகம் ஆகும்.

கடந்த மாதத்தை விட தற்போது விற்பனவை அதிகமானது முக்கியமான காரணம் ஜிஎஸ்டி வரி குறைப்பு தான். இதனால் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வாகனங்கள் கணிசமாக விலை குறைந்துள்ளது. இருந்தாலும்இந்தியாவில் கோல்ஃப் ஜிடிஐ, டிகுவான் ஆர்லைன் ஆகிய கார்களின் விற்பனை பெரிய அளவில் சூடுபிடிக்கவில்லை. ரொம்ப மந்தமாக தான் உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்த 2025ம் ஆண்டிற்கான 3ம் காலாண்டு விற்பனை விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 8711 வாகனங்களை கடந்த காலாண்டில் மட்டும் இந்நிறுவனம் விற்பவனை செய்துள்ளது. ஒட்டு மொத்த விற்பனையில் 58.76 சதவீதம் விற்பவனை அதகிரத்துள்ளது. அதே நேரம் டைகுன் காரின் விற்பனை 28.34 சதவீதம் அளவிற்கு கணிசமாக விற்பனை குறைந்துள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கணிசமான அளவில் இந்தியாவில் மார்கெட்டை வைத்திருந்தாலும் சமீப நாட்களாக இந்நிறுவன வாகன விற்பனை குறைந்து வருகிறது. இதனால் இந்நிறுவனம் விற்பனையில் திண்டாடி வருகிறது என்றே சொல்ல வேண்டும். இதை மீட்டு கொண்டு வர இந்நிறுவனம் போராடி வருகிறது.இதற்கான அடுத்த கட்ட திட்டங்களையும் தீட்டி வருகிறது. விரைவில் இந்நிறுவனம் மீண்டும் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய வாகன மார்கெட்டை புரிந்து கொண்டு வாகனங்களை உருவாக்குகிறது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவை மனதில் வைத்து இந்தியர்களுக்கு தகுந்த வாகனங்களை உருவாக்கினால் விற்பனை அதிகமாக வாய்ப்புள்ளது. அதே நேரம் பல செக்மெண்டில் இந்நிறுவனம் வாகனங்களை தயாரிக்க வேண்டும் அப்பொழுது தான் மிகப்பெரிய விற்பனையை பெற முடியும்.


Click it and Unblock the Notifications









