5 பேர் செல்வதற்கு சூப்பரான காரை அப்கிரேட் செய்யும் ஃபோக்ஸ்வேகன்! இந்த வசதி எல்லாம் கிடைக்க போகுதா?
ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் டைகுன் (Taigun) கார் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் (Facelift Upgrade) செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் அறிமுகத்திற்கு முன்னதாக சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஸ்பை படங்கள் (Spy Images) இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அடுத்ததாக இந்தியாவில் அறிமுகம் செய்ய ஏகப்பட்ட புதிய கார் மாடல்களை தயார் செய்து வருகிறது. சமீபத்தில்தான் ஃபோக்ஸ்வேகனில் இருந்து கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) மற்றும் டிகுவான் ஆர்-லைன் (Tiguan R-Line) என்கிற விலைமிக்க கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இவற்றை தொடர்ந்து அடுத்ததாக, ஸ்கோடா கைலாக் (Kylaq) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி (Compact SUV) கார் ஒன்று ஃபோக்ஸ்வேகனில் இருந்து களமிறக்கப்பட உள்ளது. இதற்கடுத்து, ஃபோக்ஸ்வேகனில் இருந்து அதிக பேரால் வாங்கப்படும் கார்களுள் ஒன்றான டைகுன் அப்கிரேட் செய்யப்பட உள்ளது. அந்த டைகுன் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடல் தான் தற்போது சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களில், முன் மற்றும் பின்பகுதி மட்டுமே மூடப்பட்ட புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரை காணலாம். அதாவது, காரின் மத்திய பகுதி எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படவில்லை. அதேபோல், காரின் மேற்கூரையும் மறைக்கப்படவில்லை. ஆதலால், டைகுன் காரின் இந்த பகுதிகளில் அப்கிரேட்களை எதிர்பார்க்க முடியாது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

தற்போது நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்களை வைத்து புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் கார் எப்படி இருக்கும் என்பதை நம்மால் அறிய முடியவில்லை. ஏனெனில், தற்போது சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரில் எந்த அப்டேட்டையும் அடையாளம் காண முடியவில்லை.
காரின் பின்பக்கத்தில் லைட் ஸ்ட்ரிப் மூலமாக இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லைட்கள், ஸ்டாப் விளக்குடன் காரின் மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர், மிரர்கள், ரூஃப் ரெயில்கள் உள்ளிட்டவை தற்போதைய டைகுன் காரில் எப்படி வழங்கப்படுமோ அப்படியே தான் உள்ளன. ஏனெனில், புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் கார் தற்போதைக்கு உற்பத்தி பணியில் ஆரம்பக்கட்ட நிலையில்தான் உள்ளது.

எங்களுக்கு தெரிந்தவரையில், டைகுன் ஃபேஸ்லிஃப்ட் கார் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படுவதற்குள் 2026ஆம் ஆண்டின் பாதி வருடம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். புதிய டைகுன் காரில் முக்கிய அம்சங்களாக லெவல்-2 அடாஸ் (ADAS) மற்றும் பனோராமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof) உள்ளிட்டவை வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கிறோம். ஆனால், தற்போது வெளியாகி உள்ள ஸ்பை படங்களில் சன்ரூஃப்-ஐ பார்க்க முடியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஃபோக்ஸ்வேகன் கார்களுள் டைகுன் ஒன்றாகும். இதனாலேயே இதனை அவ்வப்போது அப்கிரேட் செய்துவிட ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முயற்சிக்கிறது. அதுமட்டுமின்றி, ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும் அதன் குஷாக் (Kushaq) காரை ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்கிரேட் செய்ய தயாராகி வருகிறது. ஸ்கோடா குஷாக் காரின் ஃபோக்ஸ்வேகன் வெர்சன் தான் டைகுன் ஆகும்.
Source: Gaadiwaadi


Click it and Unblock the Notifications









