1000 பேர் கூட இந்த காரை வாங்கல! எல்லாமே நல்லா இருந்தும் மக்கள் ஏன் இந்த காரை வாங்கல தெரியுமா?

2025 ஆம் ஆண்டின் நிதி ஆண்டில், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் விற்பனை குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டது, புதிய வாடிக்கையாளர்கள் வெறும் 888 பேர் மட்டுமே இந்த காரை வாங்கியுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 45% க்கும் அதிகமாகக் குறைந்தது. இந்தியாவில் விர்டுஸ் மற்றும் டிகுவான் போன்ற ஃபோக்ஸ்வேகன் மாடல்களின் பிரபலத்திற்கு இடையேயும், டிகுவான் தனது மார்கெட் பங்கை பெற போராடியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் பல ஈர்க்கும் அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட காராக இருக்கிறது. இந்த காரில் 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பேனரோமிக் சன்ரூஃப் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. கூடுதலாக, இது 30 கலர் ஆப்ஷன்களுடன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் அம்பியன்ஸ் லைட்டிங் ஆகிய அம்சங்கள் உள்ளன. பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் உள்ளன.

Volkswagen Tiguan Sales Down

2024 ஆம் நிதி ஆண்டில், டிகுவான் 1,618 வாடிக்கையாளர்களைப்பெற்றது. இருப்பினும், ஃபோக்ஸ்வேகன் இந்த மாடலை தற்போது நிறுத்திவிட்டது. அதன் இடத்தில், அவர்கள் புதிய ஸ்போர்ட்டி டிகுவான் ஆர் லைன் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த முடிவு போட்டி எஸ்யூவி பிரிவில் தங்கள் கார்களுக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியை காட்டுகிறது.

வோக்ஸ்வாகன் டிகுவான் காரின் இன்ஜினை பொருத்தவரை வலுவான 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருந்தது. இந்த இன்ஜின் 190 பிஹெச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வழங்குகிறது. இது மென்மையான டிரைவிங் செயல்திறனுக்கான 7 ஸ்பீடு டுயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது

Volkswagen Tiguan Sales Down

இந்த எஸ்யூவி இந்திய சந்தையில் உள்ள பிற மாடல்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொண்டது. போட்டியாளர்களில் ஸ்கோடா கோடியாக், டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர், கியா ஸ்போர்டேஜ் மற்றும் ஹூண்டாய் டுக்ஸான் ஆகிய கார்களை போட்டியாக விற்பனை செய்கின்றனர். இந்த போட்டியாளர்கள் இந்த காரில் உள்ள அதே அம்சங்கள் மற்றும் செயல்திறன் அளவுகளை வழங்குகிறார்கள்.

இது நிறுத்தப்பட்ட போது, ஃபோக்ஸ்வேகன் டிஃகுவான் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 35.17 லட்சம். இந்த விலை இந்தியாவில் கிடைக்கும் நடுத்தர அளவிலான எஸ்யூவிகளுக்கு இடையே போட்டி ரேஞ்சிற்குள் இருக்கிறது. இந்த கார் ஆர்-லைன் எடிசனில் நிச்சயம் மார்கெட்டில் எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவு வெற்றி பெறும் என எதிர்பார்க்கலம்

Volkswagen Tiguan Sales Down

இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் இதன் விலை அதிகமாக இருக்கிறது. இந்த கார் இருக்கும் செக்மெண்டில் ஏகப்பட்ட போட்டி இருக்கிறது. அதையும் மீறி சிலர் இந்த காரை வாங்கியுள்ளார்கள் என்றால் இந்த காரின் கட்டமைப்பு அதற்கு முக்கியமான காரணம். விரைவில் இந்த கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்டால் விலை குறைவாக விற்பனையாகி மார்கெட்டில் ஒரு ரவுண்டு வரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிகுவான் கார் நிறுத்தப்பட்டதன் மூலம், தங்கள் புதுப்பிக்கப்பட்ட மாடல்களுடன் அதிக மார்கெட் பங்கை பெற வோக்ஸ்வாகன் ஒரு மூலோபாய மாற்றத்தை செய்து வருகிறது. ஸ்போர்ட்டி வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைத் தேடும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக டிஃகுவான் ஆர் லைன் அறிமுகப்படுத்தப்பட்டது.இதனால் இது மக்கள் கவனத்தை ஈர்க்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 21, 2025, 14:00 [IST]
English summary
Volkswagen's Tiguan SUV experienced a 45% decline in sales in FY 2025, prompting its discontinuation. The introduction of the sportier Tiguan R Line aims to revitalise their presence in the competitive Indian SUV market.
மேலும்... #volkswagen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X