30 நாளில் 5 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! எல்லாமே நல்லாருக்கு ஆனா ஏன் விக்கல தெரியுமா?
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சிறப்பான கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு என்று அதிக அளவிலான ரசிகர்கள் இருக்கிறார்கள். இருந்தும் இந்நிறுவனம் தனது ஒரு காரை விற்பனை செய்ய திண்டாடி வருகிறது. ஒரு மாதம் முழுக்க விற்பனை செய்து வெறும் ஒரு இலக்க எண்ணிக்கையிலேயே இந்த காரை விற்பனை செய்துள்ளது. இதற்கான விரிவான காரணங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த ஜூன் மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான கார்களை விற்பனை செய்து வந்ததை தொடர்ந்து காண முடிந்தது. இந்நிறுவனம் விற்பனை செய்து வரும் விர்டூஸ் காரை கடந்த மாதம் 2000 புதிய வாடிக்கையாளர்கள் பெற்றனர். இந்நிறுவனத்தின் மீது மக்கள் நல்ல நம்பிக்கையை வைத்திருந்தாலும் கடந்த மாதம் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் காரின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் இந்த காரின் விற்பனை கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த விற்பனையை விட 94 சதவீதம் குறைந்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் 85 பேர் இந்த காரை வாங்கியிருந்த நிலையில் தற்போது வெறும் 5 பேர் மட்டுமே இந்த காரை வாங்கியுள்ளனர். கடந்தாண்டை விட 80 கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன.
கார் விற்பனையாகவில்லை என்றால் கார் சரியில்லை என நினைத்துவிடாதீர்கள். இந்த காரில் 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பானரோமிக் சன்ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்டர்ரோல், 30 கலர்களில் ஆம்பியன்ஸ் லைட்டுகள், பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

இந்த ஃபோக்ஸ்வேகன் டிகுவான் கார் ஸ்கோடா கோடியாக், டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குலோஸ்டர், கியா ஸ்போர்ட்ரேஜ், ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்த டிகுவான் காரில் ஆர்-லைன் வேரியன்டை இந்தாண்டு இந்திய மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் பழைய மாடல் ரூ35-38 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகுிறது.
இந்த காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 190 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் டுயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் விற்பனை குறைவாக இருப்பதற்கு முக்கியமான காரணம் இதன் விலை தான். இந்த கார் விற்பனையாகும் விலையில் இதை விட அதிக அம்சங்கள் நிறைந்த கார்கள் பல மார்கெட்டில் இருக்கின்றன. முக்கியமாக டொயோட்டாவின் ஃபார்ச்சூனர் கார் இருக்கிறது. அதனால் பலர் அந்த காரை தேர்வு செய்வதால் விற்பனை குறைவாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் விற்பனையாகும் செக்மெண்டில் கார்களை வாங்கும் திறன் கொண்ட வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது. இதனால் மக்கள் இருக்கும் குறைவான மக்களும் பிரபலமான கார்களுக்கு பின்னால் செல்வதால் மிக குறைவாக விற்பனையாகிறது. இந்த காரின் விலை குறைந்தாலோ அல்லது அப்டேட் வந்தாலோ விற்பனை அதிகமாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









