அடிமாட்டைவிட கம்மி விலையில் விற்பனைக்கு வர இருக்கும் கார் வெளியீடு.. இறங்கி அடிக்க தயாராகிவிட்டதா ஃபோக்ஸ்வேகன்

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) அதன் புத்தம் புதிய கார் மாடல் ஒன்றை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. ஐடி. எவ்ரி1 (ID. EVERY1) எனும் கார் மாடலையே அது வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் கான்செப்ட் மாடல் ஆகும். இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் அனைவருக்கும் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அதன் பெயரும் உள்ளது. அதாவது, மிக மிக கம்மி விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாடுகளில் இருப்பதிலேயே அடிமாடுகள் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். அதைபோலவே கார்கள் உலகில் இது மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்கள் உலகில் இது மலிவு விலைக்கு விற்பனைக்கு வருகிறதோ, இல்லையோ, கட்டாயமாக ஃபோக்ஸ்வேகன் பிராண்டின் இருப்பதிலேயே விலை குறைவான மின்சார காராக இது இருக்கும் என கூறப்படுகின்றது.

Volkswagen id every1 concept revealed

ஆகையால், மொத்த மின்சார கார் பிரிவையும் இறங்கி அடிக்கக் கூடிய தயாரிப்பாக ஃபோக்ஸ்வேகன்-இன் ஐடி.எவ்ரி1 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் குட்டியான மின்சார கார் மாடல் ஆகும். அதேவேளையில் பிரீமியம் அம்சங்களை மிக தாராளமாக இது தாங்கியிருக்கும் என தெரிகின்றது. தன்னுடைய புகழ்பெற்ற எம்இபி பிளாட்பாரத்தை பயன்படுத்தியே இந்த குட்டியான எலெக்ட்ரிக் காரை நிறுவனம் தயார் செய்திருக்கின்றது.

முதலில் இந்த கார் ஐரோப்பிய நாடுகளிலேயே விற்பனைக்கு வர இருக்கின்றது. இதற்கு பின்னரே உலகின் பிற நாடுகளில் இந்த கார் மாடல் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் இந்த கார் ரூ. 18 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இது யூகிக்கப்படும் விலை மட்டுமே ஆகும். இதைவிட கம்மி விலையிலேயே அது விற்பனைக்கு வரும்போது கிடைக்கும் என கூறப்படுகின்றது. இந்திய சந்தையில் நாம் எதிர்பார்ப்பதைவிட கம்மி விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். ஆனால், இப்போதைக்கு இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இருப்பினும், இப்போதே பலரின் கவனத்தை இந்த கார் மாடல் கவர்ந்திருக்கின்றது. போலோவை பிரதிபலிக்கின்ற மாதிரியான தோற்றமே இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. மிக முக்கியமாக இந்த காரை அலங்கரிக்கும் விதமாக மிகவும் கவர்ச்சியான அலாய் வீல், கண்களின் விழிபோன்ற ஹெட்லைட், டோருடன் டோராக இருக்கும் கை பிடிகள், கருப்பு நிறத்தால் அலங்கப்பட்ட முன் பக்க பில்லர்கள் மற்றும் மிகவும் சிம்பிளான முன் பக்கம் ஆகியவற்றை இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது.

இதுவே இந்த காருக்கு பலம் சேர்க்கும் விதமாக உள்ளது. எனவே விற்பனைக்கு வரும்போது யாரும் எதிர்பார்த்திராத மிக அமோகமான வரவேற்பை இந்த கார் மாடல் உலக சந்தையில் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக சிறிய காராக இதை தயார் செய்திருப்பதால் நான்கு பேரால் மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும்.

அதேவேளையில், மெல்லிய தேகம் கொண்டவராக இருந்தால் ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பூட் ஸ்பேஸ் 303 லிட்டர் ஆகும். தனியாக நிற்கின்ற மாதிரியான தொடுதிரை சிஸ்டம் மற்றும் டிரைவருக்கான டிஜிட்டல் திரை உள்ளிட்ட அம்சங்களையும் இந்த கார் மாடல் தாங்கி இருக்கின்றது.

இதுமட்டுமல்ல இதுபோன்று இன்னும் பல அட்வான்ஸ்டு அம்சங்களை இந்த கார் மாடல் தாங்கி இருக்கும் என்பது தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக, ஓர் முழு சார்ஜில் 250கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதுமட்டுமல்ல 70kW திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரும் இதில் வழங்கப்பட இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 130கிமீ ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோக்ஸ்வேகன் மொத்தமாக ஒன்பது புதிய இ-கார் மாடல்களை உலக மின்சார கார் சந்தைக்காக தயார் செய்துக் கொண்டிருக்கின்றது. அதில் இருப்பதிலேயே மிக மிக குறைவான விலைக் கொண்ட காராகவே ஐடி.எவ்ரி1 பார்க்கப்படுகின்றது. இது இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது வேறு பெயர் மற்றும் இந்திய சந்தைக்கு ஏற்ற மாற்றங்களுடன் விற்பனைக்கு வரும் என நாங்கள் கருதுகின்றோம். ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் நிறுவனத்திடம் இருந்து இதுவரை வெளியாகவில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, March 6, 2025, 22:08 [IST]
English summary
Volkswagen unveils id every1 concept affordable electric vehicle more details
மேலும்... #volkswagen #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+