பயமே இல்லாம 700 கிமீ டிராவல் பண்ணலாம்.. இதுதான் அவங்களோட முதல் செடான் ரக காரா! ஹெட்லைட்டோட லுக்க பாத்தீங்களா!

உலக புகழ்பெற்ற பிரீமியம் தர கார் உற்பத்தி நிறுவனங்களில் வால்வோ (Volvo)-வும் ஒன்று. இந்த நிறுவனம் உலக சந்தையில் இஎஸ்90 (ES90) எனும் கார் மாடலை அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் செடான் (Electric Sedan) ரக கார் மாடல் ஆகும். முழுக்க முழுக்க மின்சாரத்தில் மட்டுமே இது இயங்கும். இது செடான் ரக காராக இருந்தாலும் எஸ்யூவி ரக கார்களை பிரதிபலிக்கும் அம்சங்கள் சிலவற்றை அது தன்னுள் தாங்கியிருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

குறிப்பாக, இட வசதி, திறன் வெளிப்பாடு உள்ளிட்டவற்றில் மிக சிறந்த காராக இருக்கும் வகையில் இதனை தாங்கள் தயாரித்து இருப்பதாக வால்வோ தெரிவித்து இருக்கின்றது. எனவே உலக அளவில் செடான் கார் காதலர்களின் கவனத்தை புதிய வால்வோ இஎஸ்90 எலெக்ட்ரிக் கார் ஈர்த்துள்ளது.

Volvo first electric sedan es90 front look

இதுவே நிறுவனம் தயாரிக்கும் முதல் செடான் ரக எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மற்ற கார்களிடம் தனித்து தெரியும் நோக்கில் பல்வேறு புதிய அம்சங்களை வால்வோ வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், ஹாலிவுட் திரைப்படம் 'தார்'-இல் பயன்படுத்தப்படும் சுத்தியல் போன்ற அமைப்புடைய ஹெட்லைட் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இத்துடன் ஆங்கில எழுத்து 'சி' வடிவ எல்இடி லைட், வெல்கம் மற்றும் வீட்டுக்கு அனுப்பி வைக்கக் கூடிய லைட் உள்ளிட்டவற்றையும் இந்த கார் தன்னுள் தாங்கியிருக்கின்றது. மொத்தமாக இந்த காரை ஏழு விதமான வண்ண தேர்வுகளில் அவர்கள் விற்பனைக்கு வழங்க இருக்கின்றனர்.

Volvo first electric sedan es90 side look

இதன் வெளிப்புற அழகில் முக்கிய பங்கை வகிக்கும் வீலில் 20 இன்ச் தொடங்கி 22 இன்ச் அளவு வரையிலான ஆப்ஷன் வழங்கப்பட இருக்கின்றது. இதேபோல் ஓர் முழுமையான சார்ஜில் 700 கிமீ தூரம் பயணிப்பதற்கான திறனை வழங்கக் கூடிய பேட்டரி பேக்கையே இந்த காரில் வழங்கி இருப்பதாக வால்வோ தெரிவித்து இருக்கின்றது.

ஆகையால், 700 கிமீ தூரம் வரை சார்ஜ் தீர்ந்துவிடும் என்கிற பயமே இல்லாமல் இந்த காரில் பயணிக்க முடியும். அதேவேளையில், கொஞ்சம் விரட்டி ஓட்டினால் இந்த ரேஞ்ச் திறனில் மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகின்றது. இதுமட்டுமல்ல வெறும் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் இந்த காரில் சுமார் 300 கிமீ தூரம் டிராவல் செய்துக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

Volvo first electric sedan es90 rear look

ஆனால், அதற்கு 350 kW திறன் கொண்ட ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து இந்த கார் சார்ஜ் செய்ய வேண்டும். இத்துடன் பயணிகளின் சுவாரஷ்யமான டிராவல் அனுபவத்திற்காக இந்த காரில் 14.5 அங்குல அளவில் திரை, கூகுள் (Google) சேவையுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதன் வாயிலாக கூகுள் மேப், கூகுள் அசிஸ்டன்ஸ் போன்ற வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர, தடையில்லா கார் இணைப்பு சேவை, 3டி வசதிக் கொண்ட 360 டிகிரி கேமிரா சுலபமான பார்க்கிங்கிற்காக இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. பாதுகாப்பு அம்சங்களும் மிக தாராளமாக இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. எனவே கார் காதலர்கள் மத்தியில் இந்த ஆடம்பர காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வால்வோ நிறுவனத்தின் முதல் செடான் ரக எலெக்ட்ரிக் காரான இஎஸ்90 இந்தியா வருவதற்கான எந்தவொரு அறிகுறியும் இதுவரை தென்படவில்லை. அதேவேளையில், இந்த நிறுவனம் உலக அளவில் இந்த காரை விற்பனைக்கு வழங்க திட்டமிட்டு இருக்கின்றது. ஆகையால், எப்போது வேண்டுமானாலும் வால்வோ இஎஸ்90 இ-காரை இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 5, 2025, 23:02 [IST]
English summary
Volvo es90 fully electric vehicle merging elegance practicality and advanced safety features
மேலும்... #volvo #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X