10 நிமிஷம் சார்ஜ் செய்தால் 300கிமீ தூரம் போகலாமா.. இப்படி ஒரு காரைதான் எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருக்காங்க!

எலெக்ட்ரிக் கார் (Electric Car)-களில் காணப்படும் மிகப் பெரிய பிரச்னையாக அவற்றை சார்ஜ் செய்ய நீண்ட நேரம் ஆகுவது இருக்கின்றது. இந்த காரணத்தினாலேயே பலர் மின்சார வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இந்த மாதிரியானோரைக் கவரும் முயற்சியில் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தற்போது களமிறங்கியிருக்கின்றது. அது, அதிக வேகத்தில் சார்ஜாகும் திறன் கொண்ட காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. வெறும் 10 நிமிட சார்ஜிலேயே 300 கிமீ தூரம் பயணிக்கும் அளவிற்கு அதிக வேகமாக சார்ஜை ஏற்றிக் கொள்ளும் திறன் கொண்ட காரையே அது தயார் செய்திருக்கின்றது.

வால்வோ (Volvo) நிறுவனமே அந்த அதிக வேகத்தில் சார்ஜாகும் திறன் கொண்ட இ-காரை தயார் செய்திருக்கின்றது. இஎஸ்90 (ES90) எனும் மாடலையே அது தயார் செய்திருக்கின்றது. இதில் 800 வோல்ட் எலெக்ட்ரிக் சிஸ்டம் வழங்கப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதுவே அந்த காரை அதிக வேகத்தில் சார்ஜாகச் செய்கின்றது.

Volvo es90 offers 300 km range in 10 minutes

மேலும், இந்த காரை 350 kW ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட்டில் வைத்து சார்ஜ் செய்கையில் வெறும் 10 நிமிடங்களிலேயே 300 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இத்தகைய காரையே சீக்கிரம் உலக எலெக்ட்ரிக் கார் சந்தையில் வால்வோ நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இதன் வருகையை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது அந்த காரின் டீசர் படத்தை வால்வோ நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. உலக அளவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மின்சார வாகன விற்பனைக்கு மிகப் பெரிய தடைக் கல்லாக இருக்கும் நீண்ட நேரம் சார்ஜாகும் குறையை தன்னுடைய புதிய எலெக்ட்ரிக் காரில் வால்வோ நிறுவனம் போக்கி இருக்கின்றது.

எனவே இ-காரை வாங்க தயங்குவோரைக் கூட இந்த வாகனம் கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் அதிக வேகத்தில் சார்ஜாகும் திறனைக் கொண்டிருந்தாலும், அதில் சூடாகும் பிரச்னை இருக்காது என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. எனவே இந்த காரில் ஆபத்து என்பதும் ஏற்படாது என தெரிகின்றது.

வால்வோ நிறுவனம் இந்த புதிய இஎஸ்90 எலெக்ட்ரிக் காரில் தங்களின் சொந்த தயாரிப்பு செல்களால் தயாரிக்கப்பட்ட பேட்டரி பேக்கையே பயன்படுத்தி இருக்கின்றனர். இது மற்ற பேட்டரி பேக்குகளைக் காட்டிலும் அதிக திறன்மிக்கது என நிறுவனம் தெரிவிக்கின்றது. குறிப்பாக நீடித்து உழைக்கவும் செய்யும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

இந்த காரை வருகின்ற மார்ச் மாதம் 5 ஆம் தேதி அன்றே வால்வோ நிறுவனம் வெளியீடு செய்ய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே வால்வோ இஎஸ்90 மின்சார காரின் டீசர் படங்கள் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றன. இது ஆடம்பர அம்சங்கள் நிறைந்த காராகவும் இருக்கும் என கூறப்படுகின்றது. குறிப்பாக, பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்கக் கூடிய அம்சங்கள் பலவற்றை இதில் எதிர்பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மின்சார கார் பிரியரக்ள் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது வால்வோ இஎஸ்90 எலெக்ட்ரிக் காரின் டீசர் படம். எனவே இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் எலெக்ட்ரிக் கார் காதலர்களின் மனம் கவர்ந்த வாகனமாக இது மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 27, 2025, 22:20 [IST]
English summary
Volvo es90 introduces 800 volt system for 300 kilometres of range in just 10 minutes
மேலும்... #volvo #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+