காரை பார்த்ததும் யாருக்குமே அடையாளம் தெரியல! குறைவான விலையில் வரும் வால்வோ எலக்ட்ரிக் கார் எப்படி இருக்கும்?

வால்வோ (Volvo) நிறுவனத்தில் இருந்து கடந்த சில வருடங்களாக அடுத்தடுத்து புதிய எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) வந்துக் கொண்டு இருக்கின்றன. அந்த வரிசையில் அடுத்ததாக, இ.எக்ஸ்30 (EX30) என்கிற பெயரில் சிறிய அளவிலான எலக்ட்ரிக் எஸ்யூவி (SUV) காரை அறிமுகம் செய்ய வால்வோ நிறுவனம் தயாராகி வருகிறது.

அதனை வெளிக்காட்டும் வகையில், இஎக்ஸ்30 எலக்ட்ரிக் கார் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது அடையாளம் காணப்பட்டுள்ளது. வால்வோ இஎக்ஸ்30 எலக்ட்ரிக் காரின் இந்த சோதனை ஓட்டம் ஆனது டெல்லிக்கு அருகே மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

volvo ex30 electric car spotted

இஎக்ஸ்30 எலக்ட்ரிக் காரை இந்தியாவில் 2025ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஏற்கனவே வால்வோ நிறுவனம் கடந்த 2024ஆம் ஆண்டிலேயே அறிவித்து இருந்தது. அதன்படி, இந்த 2025ஆம் ஆண்டு முடிவதற்குள் வால்வோ இஎக்ஸ்30 எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் தற்சமயம் இஎக்ஸ்40 (EX40) மற்றும் இசி40 (EC40) என்கிற இரு எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை காட்டிலும் அளவில் சிறியதானதாக, விலை குறைவானதாக புதிய இஎக்ஸ்30 விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச சந்தையிலேயே அளவில் சிறியதான வால்வோ கார் ஆக இஎக்ஸ்30 விளங்குகிறது.

volvo ex30 electric car spotted

விலையுயர்ந்த இஎக்ஸ்90 எலக்ட்ரிக் எஸ்யூவி கார் உருவாக்கப்பட்ட வால்வோவின் அதே லேட்டஸ்ட் டிசைனில் தான் புதிய இஎக்ஸ்30 எலக்ட்ரிக் காரும் உருவாக்கப்பட்டுள்ளது. இஎக்ஸ்90 எலக்ட்ரிக் காரும் அடுத்ததாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எலக்ட்ரிக் கார்கள் என்பதால், இஎக்ஸ்30 மற்றும் இஎக்ஸ்90 என இரண்டிலும் மூடப்பட்ட கிரில் பகுதி வழங்கப்படுகிறது.

காரின் முன்பக்கத்தில் இருமுனைகளிலும் சுத்தியல் வடிவிலான எல்இடி டி.ஆர்.எல்-கள் உடன் மெல்லியதான வடிவிலான ஹெட்லைட்களை வெளிநாட்டு சந்தைகளில் இஎக்ஸ்30 எலக்ட்ரிக் கார் பெறுகிறது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள படங்களில் அவற்றை எல்லாம் பார்க்க முடியவில்லை. இந்த சோதனை ஓட்டத்தில் மறைப்புகளை தாண்டி காரின் பின்பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் டெயில்லைட்களை பார்க்க முடிகிறது.

volvo ex30 electric car spotted

அதேபோல், காரின் அலாய் சக்கரங்களையும் பார்க்க முடிகிறது. இதே டிசைனிலான அலாய் சக்கரங்கள் உடன் தான் இந்தியாவில் இஎக்ஸ்30 கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 51kWh மற்றும் 69kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் இஎக்ஸ்30 எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில், 51kWh பேட்டரியில் அதிகப்பட்சமாக 344கிமீ தொலைவிற்கும், 69kWh பேட்டரியில் 480கிமீ தொலைவிற்கும் பயணிக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிறிய அளவிலான கார்களுக்கு இந்தியாவில் எப்போதுமே நல்ல மார்க்கெட் உள்ளது. இருப்பினும், இஎக்ஸ்30 காரின் விலையை எந்த அளவிற்கு வால்வோ நிர்ணயிக்க உள்ளது என்பதுதான் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ஆகும். இந்தியாவில் மற்ற இரு வால்வோ எலக்ட்ரிக் கார்களின் ஆரம்ப விலைகள் ரூ.50 லட்சம், ரூ.60 லட்சம் என்கிற அளவில் உள்ளன. நிச்சயமாக இதனை காட்டிலும் குறைவாக ரூ.40 லட்சம் என்கிற அளவில் எக்ஸ்-ஷோரூம் விலைகளை இஎக்ஸ்30 பெறலாம். வருகிற தீபாவளி பண்டிகை காலத்தின்போது இந்த எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

Source: Rushlane

More from DriveSpark

Article Published On: Sunday, July 27, 2025, 5:00 [IST]
English summary
Volvo ex30 electric car spotted near delhi ahead of launch check all details here
மேலும்... #volvo #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X