நல்ல காரை திடீர்ன்னு சேல்ஸ்ல இருந்து நிப்பாட்டிட்டாங்க! இனி எல்லாம் எஸ்யூவி கார்தான்

வால்வோ நிறுவனத்தின் எஸ்90 என்ற மிட்சைஸ் சொகுசு செடான் காரை இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனையில் இருந்து நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த காரை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலிருந்து நீக்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் வால்வோ நிறுவனத்தின் கார்கள் மீது மக்கள் அதிக நம்பிக்கையை வைத்துள்ளனர். இந்நிலையில் இந்நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு தனது எஸ்90என்ற மிட்சைஸ் செடான் என்ற சொகுசு காரை அப்டேட் செய்து வெளியிட்டது. இந்த கார் கடந்த 4 ஆண்டுகளாக விற்பனையில் இருந்த நிலையில் அந்நிறுவனம் இந்த காரை தற்போது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கியுள்ளது. இதனால் இந்நிறுவனம் இந்த காரை விற்பனையிலிருந்து நிறுத்தப்போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

Volvo S90 Discontinued

வால்வோ எஸ் 90 கார் கார் இந்தியாவில் விற்பனையாகும் போது 2.0 லிட்டர் 4 சிலிண்டர் மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் காராக விற்பனையாகி வந்தது. இது 250 எச்பி பவரை வெளிப்படுத்தும் இன்ஜினை கொண்டிருந்தது.இந்த காரில் 360 டிகிரி கேமரா, 4 ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், 19 ஸ்பீக்கர்களுடன் கூடிய 1400 வாட் ஆடியோ சிஸ்டம், முன்பக்க வென்டிலேட்டட் சீட்டுகள், அடாஸ் தொழிற்நுட்பம் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

இந்த கார் கடைசியாக இந்தியாவில் ரூ68.25 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்தது. தற்பேது இந்த கார் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது வால்வோ நிறுவனத்திடம் எஸ்யூவி ரக கார்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன. வால்வோ இ-கிளாஸ் மற்றும் 5 சிரீஸ் ஆகிய கார்களில் சிறந்த தொழிற்நுட்பம் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்கள் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதை தான் அதிகம் விரும்பி வருகின்றனர்.

Volvo S90 Discontinued

சமீபத்தில் சர்வதேச அளவில்விற்பனையாகி வரும் எஸ் 90 காரை அந்நிறுவனம் இரண்டாவது முறையாக ஃபேஸ்லிஃப்ட் செய்துள்ளது. இதில் வெளிப்புற டிசைன் மாற்றங்கள், பெரிய டச் ஸ்கிரீன், அப்டேட் செய்யப்பட்ட மைல்டு ஹைபிரிட் தொழிற்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றன. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இஎஸ்90 காராக விற்பனையாகி வருகிறது. இது 700 கி.மீ ரேஞ்சை தருகிறது.

அதே நேரத்தில் வால்வோ நிறுவனம் இஎக்ஸ்30 என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை களம் இறக்க தயாராகி வருகிறது. இந்த கார் இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். அதை தொடர்ந்து ஃபிளாக்ஷிப் மாடலாக இஎக்ஸ்90 என்ற எலெக்ட்ரிக் காரை களம் இறக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.இது அடுத்தாண்டு அறிமுகமாகலாம்.

Volvo S90 Discontinued

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதன் மூலம் அந்நிறுவனம் எஸ்யூவி வாகனங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது தெளிவாக தெரிகிறது. இந்த வாகனம் சர்வதேச அரங்கில் அப்டேட் செய்யப்பட்டாலும், இந்தியாவில் விற்பனையை நிறுத்துவதற்கு முக்கியமான காரணம் இது தான்.

More from DriveSpark

Article Published On: Friday, June 20, 2025, 14:15 [IST]
English summary
Volvo s90 discontinued in india know full details
மேலும்... #volvo #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X