5-ஸ்டார் ரேட்டிங் பெற்று அனைவரையும் ஆச்சிரியப்படுத்திய கார் இந்தியா வருது! புக் பண்ண பணத்தை சேர்த்து வைங்க!

வால்வோ (Volvo) நிறுவனத்தில் இருந்து புதியதாக எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட் (XC60 Facelift) கார் அடுத்ததாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால், எப்போது இந்த வால்வோ கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது தெரியாமல் இருந்துவந்த நிலையில், அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஐரோப்பிய சந்தையில் முன்னணி கார் நிறுவனமாக விளங்கும் வால்வோவில் இருந்து சர்வதேச சந்தையில் இந்த 2025ஆம் ஆண்டில் துவக்கத்தில் எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த ஃபேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய வால்வோ நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

volvo xc60 faceliftindia launch date revealed

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி, வெள்ளிக்கிழமையில் எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்சி60 காரை காட்டிலும் காஸ்மெட்டிக் மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்களை கொண்டதாக புதிய எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட் கார் உருவாக்கப்பட்டு உள்ளது.

புதிய வால்வோ எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பக்கத்தில் ரீடிசைனிலான முன்பக்க கிரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கிரில் செட்-அப்பை எக்ஸ்சி90 ஃபேஸ்லிஃப்ட் காரில் பார்த்திருக்க முடியும். அதேபோல், எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பக்கத்தில் புதிய டிசைனில் பம்பர் மற்றும் புத்துணர்ச்சியான டிசைனில் ஏர் இண்டேக்ஸ் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன், காரின் அலாய் சக்கரங்களின் டிசைன் மாற்றப்பட்டு இருக்க, டெயில்லைட்கள் ஸ்மோக்டு எஃபெக்ட் (Smoked Effect) உடன் உள்ளன. ஃபாரஸ்ட் லேக் (Forest Lake) மற்றும் அரோரா சில்வர் (Aurora Silver) என இரு விதமான கலர் ஆப்ஷன்கள் சர்வதேச சந்தையில் எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட் காரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை இந்திய சந்தையிலும் வழங்கப்படுமா என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை.

இந்த புதிய வால்வோ காருக்கு உள்ளே டேஸ்போர்டில் 11.2 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வெளிநாட்டு சந்தைகளில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆனது குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் காக்பிட் பிளாட்ஃபாரம் (Snapdragon Cockpit Platform)-இல் உருவாக்கப்பட்டது ஆகும்.

வால்வோ எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட் காரில் 2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பம் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 247 பிஎச்பி மற்றும் 360 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் சிஸ்டத்தில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வால்வோ எக்ஸ்சி60 காரில் முக்கியமான அப்டேட்கள் ஃபேஸ்லிஃப்ட் பெயரில் கொண்டுவரப்படுகின்றன. இந்த அப்டேட்களுக்கான முக்கியமான காரணம், மற்ற மாடர்ன் கார்களுக்கு மத்தியில் வால்வோ எக்ஸ்சி60 காரின் பிரபலத்தை அதிகரிப்பது ஆகும். இது எந்த அளவிற்கு சரிப்பட்டு வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஐரோப்பிய என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5க்கு முழு 5 நட்சத்திர மதிப்பெண்களை பெற்ற கார் இதுவாகும்.

Source: Team- BHP (https://www.team-bhp.com/)

More from DriveSpark

Article Published On: Sunday, July 20, 2025, 17:31 [IST]
English summary
Volvo xc60 facelift india launch date revealed check all details here
மேலும்... #volvo #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+