இந்த கார்ல போனா ஊரே உங்களை தான் திரும்பி பார்க்கும்! அப்படி இதுல என்ன இருக்குது?

வால்வோ நிறுவனம் இந்தியாவில் தனது அப்டேட் செய்யப்பட்ட 2025 வால்வோ எக்ஸ்சி 60 காரை இந்திய மார்கெட்டி்ல அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூ71.9 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.இதில் சில காஸ்மெட்டிக்ஸ் மாற்றங்களும், அம்சங்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே எக்ஸ்சி 60 என்ற காரை விற்பனை செய்து வரும் நிலையில் மார்கெட்டில் அந்த காரை அப்டேட் செய்துள்ளது. தற்போது விற்பனையாகி வரும் கார் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டதால் தற்போது இ்நத கார்கள் அப்டேட் செய்யப்ப்டடுள்ளது.

Volvo XC60 Facelift

வால்வோ எக்ஸ்சி 60 கார் கடந்த 5 மாதங்களுக்க முன்னர் சர்வதேச மார்கெட்டில் அப்டேட் செய்யப்பட்டது. அந்த கார்கள் தான் தற்போது இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காரை வாடிக்கையாளர்கள் இந்த காரை வால்வோ டீலர்ஷிப் அல்லது ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யலாம். இந்த காரின் டெலிவரி விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த காரின் அடிப்படை வடிவமைப்பில் எந்த மாற்றம் இல்லை. சில வெளிப்புற மாற்றங்கள் செய்யப்ப்டடுள்ளது. முக்கியமாக இதன் கிரில் பகுதி டையகனல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது போக ஃபிரஷ்ஷாக வடிவமைக்கப்பட்ட 19 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பார்க்க அதன் ஃபிளாக்ஷிப் காரான எக்ஸ்சி 90 காரை போன்ற லுக்கில் இருக்கிறது.

Volvo XC60 Facelift

இந்த காரின் இந்திய வெர்ஷனில் முன்பக்கம் பம்பர் மாற்றியமைப்பது, ஸ்மோக்டு டெயில்லைட்டுகள் ஆகிய ஆப்ஷன்கள் இல்லை. இந்த காரில் 6 கலர் ஆப்ஷன்கள் உள்ளன. அதன்படி கிரிஸ்டர் ஒயிட், ஆன்க்ஸி பிளாக், டெனிம் ஃப்ளூ, பிரைட் டஸ்க், வேப்பர் கிரே ஆகிய கலர்கள் உள்ளன. பிளாட்டினம் கிரே கலர் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்பகுதியில் 11.2 இன்ச் டச் ஸ்கிரீன் கூகுள் ஓஎஸ் உடன் இருக்கிறது. இதற்காக குவால்காம் ஸ்னாப்டிராகன் புராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இது 1410 வாட்ஸ் போவர்ஸ் மற்றும் வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 15 ஸ்பீக்கம் செட்டப் வழங்கப்பட்டுள்ளன. இது போக இந்த காரில் 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவ் டிஸ்பிளே உடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்டு உட் ஃபினிஷில் வழங்கப்பட்டுள்ளது.

Volvo XC60 Facelift

இது போக முன்பக்க சீட்டில் மசாஜ் சிஸ்டம், நெப்பா லெதர் சீட்டுகள், பாதுகாப்பிற்காக வால்வோ ஸ்மார்ட் பாதுகாப்பு அம்சம், அடாஸ் லெவல் 2 சிஸ்டம், கிராஸ் டிராஃபிக் அலர்ட் ஆட்டோ பிரேக், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், அடாப்டிக் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப்பிங் மற்றும் பைலட் அசிஸ்ட், 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இந்த காரில் இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 48வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இது 250 எச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் 4 வீல்களுக்கும் பவர் அனுப்பும் சிஸ்டத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வால்வோ கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த ரக கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் தனது எக்ஸ்சி 60 காரை அந்நிறுவனம் அப்டேட் செய்து புதிய லுக்கில் கொண்டு வந்துள்ளது. இது நிச்சயம் மிகப்பெரிய அளவில் பேசப்படும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, August 1, 2025, 18:00 [IST]
English summary
Volvo xc60 facelift launch price updates changes explained
மேலும்... #volvo #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X