61 ஆயிரம் பேர் இந்த காரை நம்பி வாங்கிட்டாங்க! அப்படி இதுல என்னதாங்க இருக்குது?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது விர்டுஸ் காரை அறிமுகப்படுத்தி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டி பிடித்துள்ளது. இந்த கார் விற்பனை மிக முக்கியமான இடத்தை அடைந்துள்ள நிலையில் இந்த கார் குறித்த விரிவான விபரங்காளை நாம் இங்கே காணலாம் வாருங்கள்.

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் முதன் முறையாக தனது விர்டுஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் சிறந்த பிரிமியம் செடான் கார் என்ற விருதையும் பெற்றுள்ளது. மின் சைஸ் செடான் செக்மெண்டில் இந்த கார் பிரபலமான காராக இருக்கிறது. ஜெர்மன் பில்டு குவாலிட்டி மற்றும் ஃபோல்டான டிசைனிற்காக இந்த கார் பெயர் பெற்றதாக இருகு்கிறது.

VW Virtus 61k Sales

இந்நிலையில் இந்த கார் அறிமுகுமானது முதல் இதுவரை 61ஆயிரம் பேர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி முதல் நிதியாண்டில் 18914 கார்களும், 20796 கார்கள் இரண்டாவது நிதியாண்டிலும், 21854 கார்கள் மூன்றாவது நிதியாண்டிலும் விற்பனையாகியுள்ளன. மொத்தம் 61564 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது மிகப்பெரிய சாதனையாகவும் மைல் கல்லாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த காரின் இந்த விற்பனைக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைவதற்கு முக்கியமான காரணம் அதன் பாதுகாப்பு அம்சம் தான். இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த காரின் பில்டு குவாலிட்டி மற்றும் போல்டான டிசைன் தான் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கும்.

VW Virtus 61k Sales

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை பொருத்தவரை ரூ13.5 லட்சம் முதல் ரூ22.54 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 14 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகுிறது. இந்த காரில் மேனுவல், ஆட்டோமெட்டிக், ஆட்டோமெட்டிக் டிசிடி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இருக்கிறது. இது மக்களுக்கு ஏற்ற வசதியான ஆப்ஷனை தேர்வு செய்ய சிறப்பான வாய்ப்பாக இருக்கும்

இந்த கார் ஸ்மூத்தான பவர்டெரைன் மற்றும் சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் ஆகியவை தினந்தோறும் இந்த காரை பயன்படுத்துவது சுலபமாக இருக்கும். இந்த காரில் பெரிய கேபின் மற்றும் பெரிய பூட் வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு தேவையான பல வசதிகள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர்.

VW Virtus 61k Sales

இந்த காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளுது. 114 பிஎச்பி பவரையும் 178 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 20.19 கி.மீ மைலேஜை மேனுவல் வேரியன்டிலும் 18.7 கி.மீ மைலேஜ் ஆட்டோமெட்டிக் வேரியன்டிலும் கிடைக்கிறது. அதிக மைலேஜ் தருவதால் இந்த கார் அதிக மைலேஜை வழங்கும் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விர்டுஸ் காரை 3 ஆண்டுகளாக சிறப்பாக விற்பனை செய்து வருகிறது. செடான் செக்மெண்டே மிக குறைவாக விற்பனையாகி வரும் நிலையில் இந்த கார் இவ்வளவு விற்பனையாகியுள்ளதே மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த காரின் விற்பனை சிறப்பாக தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 11, 2025, 11:15 [IST]
English summary
Vw virtus 61k sales 3 years completion india
மேலும்... #volkswagen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X