34 கி.மீ மைலேஜ், ரூ6 லட்சம் தான் விலை! இந்த கார் இந்தியாவிலேயே அதிகம் வித்திருக்குது!

இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. மக்கள் மத்தியில் சிஎன்ஜி கார்கள் பிரபலமாகி வருகிறது. குறைந்த பயண செலவு காரணமாக பலர் சிஎன்ஜி கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த நிதியாண்டில் மொத்தம் விற்பனையான சிஎன்ஜி கார்களில் ஹேட்ச்பேக் செக்மெண்டில் அதிகம் விற்பனையான காராக மாருதி வேகன்ஆர் சிஎன்ஜி கார் இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்திய வாடிக்கையாளர்கள் அதிக மைலேஜ் தரும் கார்களை விரும்பினர். குறிப்பாக குறைந்த பயண செலவுகளை தரும் கார்களுக்கு இந்தியாவில் மவுசு உள்ளது. அதன் காரணமாக தான் டீசல் இன்ஜின் கொண்ட கார்கள் அதிகம் விற்பனையானது. ஆனால் தற்போது காற்று மாசு காரணமாக வந்த கட்டுப்பாடு காரணமாக பல நிறுவனங்கள் டீசல் இன்ஜின் தயாரிப்பை நிறத்திவிட்டனர்.

Wagonr CNG

அதற்க பதிலாக தற்போது சிஎன்ஜி கார்கள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மாருதி வேகன் ஆர் சிஎன்ஜி கார் தான் கடந்த நிதியாண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான ஹேண்ட்ச்பேக் கார் இதுதான். கடந்த நிதியாண்டில் மட்டும் இந்த கா் 1,02,128 கார்கள் என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சிஎன்ஜி கார் பட்டியலில் 2வது காராக இந்த கார் தான் இருக்கிறது.

இந்த வேகன் ஆர் காரில் 7 டச் ஸ்கிரீன் இன்ஃபோடயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர் கொண்ட மியூசிக் சிஸ்டம், 14 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. இது போக பாதுகாப்பான அம்சங்களுக்காக முன்பக்கம் இரண்டு ஏர்பேக்குகள், பின்பக்க பார்க்கிங் சென்சார், உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. இந்த கார் 5.79 லட்சம் முதல் ரூ7.62 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

Wagonr CNG

இந்த வேகன் ஆர் சிஎன்ஜி காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 67 பிஎச்பி பவரையும், 89 என்எம் டார்க் திறனையம் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினில்தான் சிஎன்ஜி ஆப்ஷன் இருக்கிறது. இந்த இந்த சிஎன்ஜி கார் 34 கி.மீ மைலேஜை வழங்குகிறது. இது தான் அந்த காரின் சிறப்பம்சம் ஆகும்.

இந்த கார் மற்றொரு இன்ஜின் ஆப்ஷனில் கூட விற்பனையாகி வருகிறது. ஆனால் இது பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உடன் வருகிறது. இது 90 பிஎச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wagonr CNG

இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் கார் என்றால் நிச்சயம் அதிகம் விற்பனையாகும். அதுவும் மாருதி நிறுவனத்தின் பிரபலமான வேகன் ஆர் கார் இருந்தால் நிச்சயம் இந்த கார் சிறப்பாக விற்பனையாகும். இந்த கார் நிச்சயம் எதிர்காலத்திலும் நல்ல விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக மைலேஜ் தரும் வேகன் ஆர் சிஎன்ஜி கார் தற்போது நல்ல விற்பனையில் இருந்தாலும்தற்போது உள்ள மார்டன் அம்சங்களுக்கு ஏற்ப இந்த காரில் அப்டேட்டை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த அப்டேட் வந்தால் விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, July 7, 2025, 12:00 [IST]
English summary
Wagonr cng best selling hatchback of fy2025 maruti suzuki
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X