டாடாவிடம் அப்படி எவ்வளவுதாங்க காசு இருக்கு? புதுசா வாங்க போகும் கம்பெனியால் இலாபம் பிச்சிக்கிட்டு போக போகுது!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் மிகப்பெரும் ஆட்டோமொபைல் (Automobile) நிறுவனங்களுள் ஒன்று. எடை குறைவான & அளவில் சிறியதான கார்களில் இருந்து, அளவில் பெரியதான கனரக வாகனங்கள் வரையில் டாடா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. ஆட்டோமொபைல் வாகனங்கள் இல்லாமல், மற்ற தொழில்களிலும் டாடா குழுமம் (Tata Group) ஈடுப்பட்டு வருவது எல்லாம் தனிக் கதை.

ஆட்டோமொபைல் துறையை மட்டும் பார்த்தாலே டாடா மோட்டார்ஸ் கடந்த சில பத்தாண்டுகளில் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த வளர்ச்சியின் ஒருபகுதியாக இத்தாலி நாட்டை சேர்ந்த ஐவெகோ (Iveco) என்கிற லாரி & பேருந்து உற்பத்தி நிறுவனத்தை வாங்க கிட்டத்தட்ட அனைத்து விதங்களிலும் டாடா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது. ஐவெகோ நிறுவனத்தை வாங்குவதால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் சுருக்கமாக அலச போகிறோம்.

tata motors will buy italian truck maker iveco

சர்வதேச சந்தையில் ஆதிக்கம்: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் நீண்ட வருட அனுபவத்துடன் பெரிய நெட்வொர்க்கை கொண்டுள்ளது. ஆனால், இந்தியாவை தாண்டி நேரடியாக டாடா பிராண்டிற்கு பெரியதாக வரவேற்பு இல்லை. டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் மற்ற நிறுவனங்கள் தான், வெளிநாடுகளில் கோலோச்சி உள்ளன.

அப்படியிருக்கையில், ஐரோப்பா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் வலுவான நெட்வொர்க்கை கொண்டிருக்கும் ஐவெகோ நிறுவனத்துடன் இணைவது டாடா நிறுவனத்திற்கு சர்வதேச சந்தையில் கூடுதல் பலமாக இருக்கும். இதன் மூலமாக, ஐரோப்பிய மற்றும் மெக்சிகோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் டாடா குழுமம் வலுவாக கால் பதிக்கலாம். இதன் மூலமாக, டைம்லர் (Daimler), வால்வோ (Volvo) போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் டாடா போட்டியிடும் வாய்ப்பு உருவாகலாம்.

tata motors will buy italian truck maker iveco

தொழிற்நுட்பங்கள் & தயாரிப்புகளை மேம்படுத்துதல்: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை போன்று ஐவெகோ நிறுவனமும் லாரிகள் மற்றும் பேருந்துகளை உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டு வருவதால், இரு நிறுவனங்களும் தங்களுக்குள் தொழிற்நுட்பங்களை பரிமாறிக் கொள்ளும் மற்றும் புதிய கண்டுப்பிடிப்புகளை ஒன்றாக இணைந்து மேற்கொள்ளும். அதேபோல், டாடா நிறுவனத்தை காட்டிலும் எடை குறைவான கமர்ஷியல் வாகனங்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் பெற்றதாக ஐவெகோ உள்ளதால் அதனை டாடா நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும்.

செலவு குறைதல்: இரு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவதன் மூலம், அவை இரண்டும் தங்களது வணிக செயல்பாடுகளை ஒன்றாக இணைந்து மேற்கொள்ளும் போது இரு நிறுவனங்களுக்கும் பல விஷயங்கள் செலவு மிச்சமாகும். குறிப்பாக, ஏற்கனவே சலுகை உடன் ஐரோப்பாவில் ஏதேனும் நிறுவனங்கள் அல்லது வங்கிகள் ஐவெகோ நிறுவனத்திற்கு பொருட்களை வழங்கி வந்தால், அதனை டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் பயன்படுத்தி பயன்பெற முடியும்.

இலாபம் அதிகரிப்பு: வெவ்வேறான கண்டங்களில் லாரி & பேருந்து உற்பத்தியில் தனித்துவமாக விளங்கும் இரு நிறுவனங்கள் ஒன்றாக இணைவதால் அவற்றின் செலவுகள் குறைவதன் மூலம் வருவாய் அதிகரிக்கும். குறிப்பாக, ஐரோப்பிய மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் வருவாயை அதிகப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தில் டாடா குழுமத்தால் அங்கு அதிக முதலீடுகளை செய்து சர்வதேச அளவில் மேலும் வளர முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தனை நன்மைகள் இருப்பினும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் உடனடியாக எல்லா நன்மைகளையும் பெற முடியாது; கொஞ்சம் காலம் எடுக்கும். ஏனெனில், இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கும், ஐரோப்பிய சந்தைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஐவெகோ நிறுவனத்தை பற்றி அக்கு வேறு ஆணி வேரு என எல்லாவற்றையும் தெரிந்துக் கொண்ட பின்புதான் டாடா மோட்டார்ஸ் அதனை வாங்க முடிவெடுத்திருக்கும் என்றாலும், ஐவெகோ நிறுவனத்துடன் பிணைப்பை ஏற்படுத்தி கொள்ள டாடா நிறுவனத்திற்கு சில காலம் தேவைப்படும் என்றே எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 7, 2025, 5:00 [IST]
English summary
What are the benefits for tata motors by occupying italian truck maker iveco
மேலும்... #tata motors #iveco
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+