ஏழைங்க ஒருத்தரும் இனி கார் வாங்க முடியாதுபோல.. காரின் விலையை உயர்த்தும் நிறுவனங்கள்.. எந்தெந்த நிறுவனம்?

வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில இந்த ஏப்ரல் மாதம் முதல் தங்களின் தயாரிப்புகளின் விலை உயர்த்த இருப்பதாக சமீபத்தில் அறிவித்தன. அதாவது, புதிய கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்தன. எந்தெந்த நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், 2025 ஏப்ரலில் விலை உயர்வை செய்யப் போவதாக அறிவித்திருக்கும் நிறுவனங்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஏதோ ஒன்றிரண்டு நிறுவனங்கள் அல்ல பெருவாரியான நிறுவனங்கள் இன்று (ஏப்ரல்) முதல் புதிய விலையில் புதிய கார்களை விற்பனைச் செய்ய இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. மாருதி சுஸுகி (Maruti Suzuki), டாடா மோட்டார்ஸ் (Tata Motors), ஹூண்டாய் (Hyundai) மற்றும் மஹிந்திரா (Mahindra) உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த லிஸ்ட்டில் உள்ளன.

Here s a breakdown of the companies and their price hike plans

இவர்கள் மட்டுமல்ல கியா (Kia), ரெனால்ட் (Renault), ஹோண்டா (Honda) மற்றும் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW) உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களின் கார்களின் விலையை உயர்த்த இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. 2 சதவீதம் தொடங்கி 4 சதவீதம் வரையில் விலை உயர்வையே இவர்கள் செய்ய இருக்கின்றனர்.

இது இந்திய கார் காதலர்களை மிகப் பெரிய அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, இது இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படும் முதல் விலை உயர்வு இது கிடையாது. நடப்பாண்டின் தொடக்கத்திலும் வாகன உற்பத்தியாளர்கள் புதிய கார்களின் விலையை உயர்த்தினர் என்பது கவனிக்கத்தகுந்தது.

Tata nexon picture

புதிய வாகனங்களின் கட்டுமானத்திற்கு ஆகும் செலவைக் காரணம் காட்டியே இந்த விலை உயர்வை செய்ய இருக்கின்றனர் வாகன உற்பத்தியாளர்கள். நடப்பாண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட விலை உயர்வுகளுக்கும் இதே காரணத்தையே அவர்கள் கூறியிருந்தனர் என்பது கவனிக்கத்தகுந்தது. தாங்கள் சந்தித்து வரும் வாகன கட்டுமான செலவு சுமையை வாடிக்கையாளர்கள் மீது திணிக்கும் ஓர் செயலாகவே இது பார்க்கப்படுகின்றது.

இதனால்தான் பலரும் இந்த செயலுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. மிக முக்கியமாக இந்த விலை உயர்வால் அடித்தட்டு மக்களின் புதிய கார் வாங்கும் ஆசை கேள்விக் குறியாக மாறியுள்ளது. ஏற்கனவே வாகன வரி, பெட்ரோல் விலை உயர்வு காரணமாக புதிய வாகனங்களை வாங்கும் ஆசையை பலர் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Maruti suzuki brezza

இந்த மாதிரியான புதிய வாகனங்களின் விலையை மேலும் இரட்டிப்பாக்க இருக்கின்றனர் வாகன உற்பத்தியாளர்கள். ஆகையால், வரும் நாட்களில் புதிய கார்களின் விற்பனை சற்றே சரிவைக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், யூஸ்டு (செகண்டு ஹேண்டு) கார் விற்பனைச் சற்றே அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் விலை உயர்வைச் செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது கார் காதலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கக் கூடிய ஒன்றே என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், புதிய வாகனங்களின் விற்பனையில் மிகப் பெரிய தாக்கம் இருக்காது என்பதே எங்களின் கருத்தாகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 1, 2025, 12:06 [IST]
English summary
Which car manufacturers are going to increase car prices this april
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X