மக்களிடம் தோல்வியடைந்த மாருதி காரை மத்திய அரசு விடாப்பிடியா வாங்கி போடுது - அதுவும் இராணுவத்துக்காக

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் மிக பெரிய கார் உற்பத்தி நிறுவனம். இத்தகைய நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) வாகனம் ஜிம்னி (Jimny) ஆகும். ஜப்பானில் விற்பனையில் இருந்த ஜிம்னி வாகனத்தை கடந்த 2023ஆம் ஆண்டில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் மாருதி சுஸுகி அறிமுகம் செய்தது. மஹிந்திரா (Mahindra)-இன் தார் (Thar) வாகனத்திற்கு போட்டியாக களமிறக்கப்பட்ட ஜிம்னியை மக்கள் அதிகம் பேர் போட்டி வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக, மஹிந்திரா தாரை விற்பனையில் ஜிம்னி முந்தும் என கணிக்கப்பட்டது. ஆனால், நடந்தது என்னவோ அப்படியே தலைக்கீழ் ஆகும். ஆரம்பத்தில் சில மாதங்களில் ஜிம்னியின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பாகவே இருந்தது. ஆனால், போக போக ஜிம்னியின் விற்பனை வெகுவாக குறைந்து, ஒரு கட்டத்திற்கு மேல் தார் விற்பனையாகுவதில் 10% கூட ஜிம்னி விற்பனையாகாத நிலை உருவானது.

why maruti jimny over thar

தற்போதும் ஜிம்னியின் விற்பனை பெரிய அளவில் இல்லை. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து மாருதி சுஸுகி ஜிம்னி வாகனத்தின் உற்பத்தியை ஊக்கப்படுத்தி வருகிறது. அதன்படி, இந்திய துணை இராணுவம் (Paramilitary)-இன் பயன்பாட்டிற்காக அதிகளவில் ஜிம்னி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட, 60 ஜிம்னி வாகனங்களை இந்திய இராணுவத்துக்கு மாருதி சுஸுகி டெலிவிரி செய்து இருந்தது.

60 ஜிம்னி வாகனங்கள் இந்திய- திபெத் எல்லை பாதுகாப்பு காவலர்களின் ரோந்து பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களிடம் போதிய வரவேற்பு பெறாத ஜிம்னி வாகனத்தை இராணுவத்தில் மட்டும் எப்படி இவ்வாறு அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துகின்றனர்? என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். இதற்கு காரணம், முன்பு விற்பனையில் இருந்த மாருதி சுஸுகி ஜிப்ஸி (Gypsy) ஆகும்.

why maruti jimny over thar

மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த ஜிப்ஸி வாகனத்தை இந்திய இராணுவத்திலும் அதிகளவில் பயன்படுத்தினர். இன்னமும் கூட சில ஜிப்ஸி வாகனங்கள் இராணுவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஜிப்ஸி வாகனத்தின் தரமான உடலமைப்பினாலும் வலிமையினாலும் ஏற்கனவே ஈர்க்கப்பட்ட இந்திய இராணுவம் ஜிப்ஸியின் மறு உருவமாக பார்க்கப்படும் ஜிம்னியை வாங்கியதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.

ஜிம்னியை இராணுவத்திற்காக மத்திய அரசு தேர்வு செய்வதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. ஜிம்னியில் எளிமையான என்ஜின் செட்-அப் வழங்கப்படுகிறது. இதனால், உயரமான மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாகனத்தை கொண்டு செல்லும்போது என்ஜினில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதனை இராணுவ வீரர்களாலே சரி செய்ய முடியும். அதேபோல், ஜிம்னியில் வழங்கப்படும் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களும் குறைவாகும்.

why maruti jimny over thar

அப்படியென்றால், அவற்றால் ஏற்படும் பிரச்சனைகளும் குறைவாக இருக்கும். மேலும், ஜிம்னியின் எடை (1,200 கிலோ) மிகவும் குறைவாகும். இதனால், தேவைப்படும் சமயங்களில் வாகனத்தை ஸ்டார்ட் செய்யாமல் தள்ளியப்படி கூட கொண்டு செல்ல முடியும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஜிம்னி அதிகம் அகலம் மற்றும் உயரம் கொண்டது கிடையாது. இதனால், இந்த வாகனத்தை கண்ட்ரோல் செய்வது எளியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி ஜிம்னியில் நிறைய மாடர்ன் தொழிற்நுட்பங்கள் இல்லாததினால் தான் மக்கள் நிறைய பேர் இந்த வாகனத்தை வாங்குதில்லை. ஆனால், ஜிம்னி இவ்வாறு இருப்பதன் காரணமாகவே இராணுவத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஜிம்னியை உற்பத்தி செய்யும் செலவு குறைவு என்பதால், அரசாங்கத்திற்கும் கணிசமான நிதி மிச்சமாகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 12, 2025, 22:16 [IST]
English summary
Why indian army widely choose maruti suzuki jimny over mahindra thar
மேலும்... #maruti suzuki #indian army #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X